சடையை பின்னினாலும் சரி, குதிரைவால் கொண்டை போட்டாலும் சரி, அலைபாயும் கூந்தலானாலும் சரி நேராக்கப்பட்ட கூந்தலாக இருந்தாலும் சரி… உங்கள் லுக் சூப்பராகவோ, மொக்கையாகவோ இருக்கச் செய்வது உங்கள் கையில்தான் உள்ளது. முழு நேரம் செலவிட்டு கூந்தலை தயார் செய்ய முடியாத நாட்களும் இருக்கும். எல்லோரும் எப்போதும் பயன்படுத்தக்கூடிய ஒரு சிகையலங்காரம் மூலம் அத்தகைய நாட்களை சமாளிக்க முடியும். அதுதான் ஹெட் பேண்ட். ஹெட் பேண்ட் சூப்பர் ஸ்டைலிஸ்ட்டாகவும் இருக்கும். அது போக கூந்தலின் வேர்களில் உள்ள பிசுபிசுப்பையும் மறைக்கும். அதில் சிறந்த ஐந்து ஹெட் பேண்ட்களை இங்கே பரிந்துரைக்கிறோம். ட்ரை செய்து பாருங்கள்.

 

01. முத்து அணிகலன் ஹெட்பேண்ட் கொண்ட கிளாஸி ஹை போனிடெயில்

01. முத்து அணிகலன் ஹெட்பேண்ட் கொண்ட கிளாஸி ஹை போனிடெயில்

புகைப்படம், நன்றி: @LELET NY

குதிரைவால் கொண்டை-ஹெட்பேண்ட் காம்பினேஷன் என்றென்றைக்கும் ஸ்டைலாகவே இருக்கும். அணிகலன்கள் கொண்ட இந்த ஹெட்பேண்ட், எளிமையான ஹேர்ஸ்டைலில் அசத்தலான தோற்றத்தைக் கொடுக்கும்.

 

02. உயரமான கொண்டை கொண்ட அகலமான ஹெட்பேண்ட்

02. உயரமான கொண்டை கொண்ட அகலமான ஹெட்பேண்ட்

புகைப்படம், நன்றி: @VLT&Co.

உயரமான கொண்டையில் ஹெட்பேண்ட் அணிவது மிக ஈஸியாக அசத்தலான லுக் கொடுக்கும். அதனால், கூந்தலை முடிந்து உயரமான கொண்டை போடுங்கள், விருப்பமான ஹெட்பேண்ட் அணியுங்கள். இப்போது டிரென்ட் ஆகிக்கொணடிருக்கும் அகலமான ஹெட்பேண்ட் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஒட்டுமொத்த தோற்றமும் அனாயாசமாக இருக்கும். கூந்தலின் எல்லா எதிர்மறை அம்சமும் நன்றாக மறைக்கப்படும்.

 

03. தாழ்வான குதிரைவால் கொண்டை தின் ஹெட்பேண்ட்

03. தாழ்வான குதிரைவால் கொண்டை தின் ஹெட்பேண்ட்

புகைப்படம், நன்றி: @Stylecraze

வேலை சார்ந்த மீட்டிங்கிற்கு எளிமையான ஹேர்ஸ்டைல் வேண்டுமா… தாழ்வான குதிரைவால் கொண்டையுடன் தின் ஹெட்பேண்ட் அணிவது பொருத்தமாக இருக்கும். கூந்தலை தாழ்வான குதிரைவால் கொண்டையாக பின்னிவிட்டு, தின் ஹெட்பேண்ட் அணிந்தால் சிகையலங்காரம் தயார்.

 

04. இரட்டை ஹெட்பேண்ட் கொண்ட அலைபாயும் கூந்தல்

04. இரட்டை ஹெட்பேண்ட் கொண்ட அலைபாயும் கூந்தல்

புகைப்படம், நன்றி: @desi Beauty blog

அலைபாயும் கூந்தல் எப்போதுமே நல்ல ஐடியாதான். ஆனால் அதோடு பொருந்தக்கூடிய ஹேர்ஸ்டைல் பயன்படுத்தும் போது இன்னும் சூப்பராக இருக்கும். கூந்தலை ஃப்ரீயாக விட்டு, ட்ரெஸ்ஸம் கெராடின் போன்ற நல்ல சீரம் பயன்படுத்தவும். இது கூந்தலுக்கு ஷைன் கொடுப்பதோடு, பிசிறு வராமலும் தடுக்கும். இதோடு டபுள் ஹெட்பேண்ட் அணிந்தால் கிரேக்கத்து தேவதை போல் காட்சி தருவீர்கள்.

 

05. தாழ்வான கலைந்த கூந்தல் கொண்டையில் முடிச்சு போட்ட ஹெட்பேண்ட்

05. தாழ்வான கலைந்த கூந்தல் கொண்டையில் முடிச்சு போட்ட ஹெட்பேண்ட்

புகைப்படம், நன்றி: Mujer de 10

தாழ்வான கலைந்த கூந்தல்தான் உங்கள் ஃபேவரைட் என்கிறீர்களா… அதோடு முடிச்சு போட்ட ஹெட்பேண்ட் அணிந்து பாருங்கள். செமயாக இருக்கும். இது தோற்றத்தை முழுமையாக்கவும் உதவும். கூந்தலுக்கு பிரைட்டான லுக் வேண்டுமா. பேஹோ-சிக் பிரின்ட் பயன்படுத்திப் பாருங்கள்.

பிரதான புகைப்படம், நன்றி: @Love Hairstyles | Tutorials & Ideas: Updo, Braid, Bob, Fishtail, Bun