தினசரி மேக்கப்: கலரில் அசத்துவதற்கான 5 ஜாலி வழிமுறைகள்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
 தினசரி மேக்கப்: கலரில் அசத்துவதற்கான 5 ஜாலி வழிமுறைகள்

இந்த உலகமே கலர்களால்தான் ஒளி வீசுகிறது. மேக்கப்பிற்கு மட்டும் ஏன் விதிவிலக்கு… வழக்கமான நியூட் மேக்கப் லுக் வேண்டாம். இந்த முறை கலர்ஃபுல்லாக மாறுவோம்.

பிரைட் லிப் நிறங்கள், துடிப்பான ஐ ஷேடோ, கலர் மஸ்காரா என பல சாய்ஸ் நம்மிடையே உள்ளது. இந்த கலர்ஃபுல் பயணத்திற்கு நீங்களும் தயார் என்றால், இதோ அதற்கான டிப்ஸ்.

 

01. மனம் எல்லாம் மாய நீலம்

05. இ-கேர்ள் ப்ளஷ் தோற்றம்

புகைப்படம், நன்றி: @Total Beauty

ப்ரைட்டான போல்டான ப்ளூ அல்லது ஆரஞ்ச் நிறத்தில் ஐ ஷேடோ செய்யலாம். பிறகு நீல நிறத்தின் விளிம்புகளில் அடர்த்தியான, வளைவான பிரஷ் கொண்டு மென்மையாக்குங்கள். இது இடைவெளி இல்லாத வண்ண மாற்றத்திற்கு உதவும். அதன் பிறகு ஐ லைனரில் கவனம் செலுத்தவும். நன்கு தாராளமாக மஸ்காரா அப்ளை செய்தால், இதோ மேக்கப் ரெடி.

பி.பி பிக்: Lakmé Absolute Spotlight Eye Shadow Palette - Smokin Glam

 

துடிப்பான நிறத்தில் ஐ லைனர்

05. இ-கேர்ள் ப்ளஷ் தோற்றம்

புகைப்படம், நன்றி: @JAPONESQUE

கருப்பு ஐ லைனர் எல்லாம் காலாவதியாகி நாளாச்சு. போல்டான, துடிப்பான பிங்க், யெல்லோ, ப்ளூ ஏன் பர்பிள் நிறம்கூட சூப்பரான சாய்ஸ். இது உங்களது மேக்கப்பிற்கு ஜாலியான தோற்றம் கொடுக்கும். இன்னும் கொஞ்சம் எக்ஸ்பரிமென்ட் செய்து பார்க்க முடியும் என்றால் இதையே லேஷ் லைனில்கூட பயன்படுத்தலாம்.

பி.பி பிக்: Lakmé Absolute Kohl Ultimate Gelato Collection - Candy Floss

 

03. உதடுகளை குவிக்கும் அழகு

05. இ-கேர்ள் ப்ளஷ் தோற்றம்

புகைப்படம், நன்றி: @nandeezy

பிரைட்டான நிறத்தில் லிப்ஸ்டிக் அணிந்தால் அந்த நாளே பிரைட்டாகிவிடும். சரிதானே. மேக்கப் அசத்தலாக மாறுவதற்கு போல்டான நிறங்களைத் தேர்ந்தெடுப்பது ஈஸியான வழி. மற்ற மேக்கப் தேர்வை நியூட்ரல் ஆக வைத்துவிட்டு லிப்ஸ்டிக் மட்டும் பிரைட் நிறத்தில் அப்ளை செய்யலாம். சிவப்பு, ஆரஞ்ச், ப்ரைட் பிங்க், ப்ளம் அல்லது வைன் அல்லது பெர்ரி நிறங்கள் தோற்றத்தை எடுப்பாக்கும்.

பி.பி பிக்: Lakmé Absolute Matte Melt Liquid Lip Colour - Crazy Tangerine

 

04. புதுமையான ஐ லேஷ்

05. இ-கேர்ள் ப்ளஷ் தோற்றம்

புகைப்படம், நன்றி: @Dream Wedding

கலர் மஸ்காரா ஒரு பெரிய டிரென்ட். மேக்கப்பிற்கு நிறம் கொடுப்பதிலும் இது முக்கியமான ஸ்டைல். இந்த மேக்கப் ரொம்பவும் சிம்பிள். கலர் மஸ்காரா எடுத்துக்கொள்ளுங்கள். 1-2 முறை டாப் மற்றும் பாட்டம் லாஷ்களில் அப்ளை செய்யுங்கள். இதன் லேயர்களில் அளவுக்கு மீறி செல்ல வேண்டாம். இல்லாவிட்டால் தோற்றம் மொக்கையாகிவிடும்.

பி.பி பிக்: Lakmé Eyeconic Blue Mascara

 

05. இ-கேர்ள் ப்ளஷ் தோற்றம்

05. இ-கேர்ள் ப்ளஷ் தோற்றம்

புகைப்படம், நன்றி: @ashley 

யாருக்குத்தான் ப்ளஷ் என்றால் பிடிக்காது… இயற்கையான ரோஸ் நிறத்தைப் போன்ற லுக் கொடுக்கக்கூடியது இது. இளமையாகவும் தெரிவீர்கள். ஆனால் வழக்கமான ஸ்டைலில் அல்லாமல் இ-கேர்ள் ப்ளஷ் ட்ரை செய்து பாருங்கள். சூப்பராக இருக்கும். நிறமேற்றம் செய்யப்பட்ட ப்ளஷ் எடுத்துக்கொள்ளுங்கள். பல லேயர் அப்ளை செய்தால்தான் இந்த எஃபெக்ட் கிடைக்கும். மூக்கின் ப்ரிட்ஜ் பகுதியில் ப்ளஷ் நன்றாக அப்ளை செய்து, கன்னங்களின் மேட்டுப் பகுதி வரை பரவும்படி செய்யுங்கள்.

பி.பி பிக்: Lakmé Absolute Face Stylist Blush Duos

பிரதான புகைப்படம், நன்றி: @Sportsfreund Studios

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
621 views

Shop This Story

Looking for something else