மேக்கப் என்று வரும் போது ஃபவுண்டேஷன்தான் எல்லாம். ஆனால் நம்மில் பலருக்கும் நமது சருமத்தின் தன்மைக்கு ஏற்ற ஃபவுண்டேஷன் தேர்ந்தெடுப்பது பெரிய தலைவலி. தப்பான ஃபவுண்டேஷன் தேர்வு செய்துவிட்டு படாத பாடு படுபவர்கள் உண்டு. ஃபவுண்டேஷன் உங்கள் சருமத்திற்குப் பொருந்தியாக வேண்டும் என்பதை மறக்காதீர்கள். இதன் மூலம் மேக்கப் நீண்ட நேரம் நிலைத்திருக்கும். திட்டுத் திட்டாக உறிந்து வராது. ஆனால் அதைத் தேர்வு செய்வதில் உதவி தேவையா… அதற்காகத்தானே நாங்கள் இருக்கிறோம். எல்லாவிதமான ஸ்கின் டைப்புக்கும் பொருந்தக்கூடிய சிறந்த ஃபவுண்டேஷன் எது என்பதை இங்கே கொடுத்திருக்கிறோம்.

 

ஆயில் சருமம்

ஆயில் சருமம்

ஆயில் சருமம் என்றால் என்ன விதமான மேக்கப் பயன்படுத்துவது என்பது பலருக்கும் இருக்கும் குழப்பம்தான். வழக்கமான க்ரீம் ஃபவுண்டேஷன்களை பயன்படுத்தலாம். ஆனால் சருமம் மேலும் பிசுபிசுப்பாக மாறிவிடும். தீர்வு சிம்பிளானது. மேட் ஃபவுண்டேஷன் பயன்படுத்துங்கள். இதில் ஆயில், சிலிக்கான் இல்லை என்பதால் ஆயில் சருமம் கொண்டவர்களுக்கு ஏற்றது. Lakmé 9 To 5 Primer + Matte Perfect Cover Foundation ஆயில் சருமம் கொண்டவர்களுக்கான சிறந்த சாய்ஸ்களில் ஒன்று.நீண்ட நேரம் நிலைத்திருக்கும் ஃபார்முலா என்பது கூடுதல் நன்மை. இதிலேயே ஒரு ப்ரைமர் உள்ளது. இதனால் நாள் முழுவதும் கச்சிதமான ஃபினிஷ் கிடைக்கும்.

 

வறண்ட சருமம்

வறண்ட சருமம்


மேக்கப்பிற்கே மணிக்கணக்கில் செலவிட முடியுமா. யாரால் முடியும். ஆனால் எல்லாம் செய்த பிறகு ஒரு சில நிமிடங்களிலேயே திட்டுத் திட்டாக மேக்கப் படிந்திருந்தால் என்ன செய்வீர்கள். நீங்கள் வறண்ட சருமம் கொண்டவர் என்றால், சரியான ஃபவுண்டேஷன் தேர்வு செய்யத் தவறினால் இத்தகைய விபத்து நடக்கத்தான் செய்யும். ஆயில் அல்லது க்ரீம் கொண்ட ஃபார்முலா பயன்படுத்த வேண்டும். அதுதான் சருமத்தை நீர்ச் சத்துடன் வைத்திருக்கும்.

வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு Lakmé Absolute Argan Oil Serum Foundation ஒரு சிறந்த சாய்ஸ். திரவ வடிவில் உள்ள தங்கம் என அழைக்கப்படும் அர்கன் ஆயிலின் நன்மைகள் நிறைந்தது இது. சருமத்திற்கு சக்தி கொடுக்கும் சீரம் போன்ற நன்மைகளும் இதில் உண்டு. இதனால் சருமம் பனித் துளியில் மிளிரும் இலை போல பொலிவுடன் இருக்கும். எல்லாவித இந்திய சரும நிறங்களுக்கும் ஏற்றபடி இது 10 ஷேட்களில் வருகிறது என்பது அசத்தலான தகவல்தானே.

 

 

வழக்கமான சருமம்

வழக்கமான சருமம்



இப்படி சருமம் இருந்தால் அது ஆசீர்வாதம்தான். எந்த விதமான ஃபவுண்டேஷனும் பயன்படுத்தலாம் என்பதுதான் இதன் அர்த்தம். ஆனால் சொதப்பல்கள் ஏற்படாமலிருக்க சரியான அடிப்படை நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். லைட் வெயிட் மட்டுமின்று செளகரியமும் கொடுக்கும் ஃபார்முலா பயன்படுத்த வேண்டும்.

Lakmé 9 to 5 Weightless Mousse Foundation ஒரு லைட் வெயிட் ஃபார்முலா. நன்றாக ப்ளென் ஆகி, சூப்பரான மேட் ஃபினிஷ் கொடுக்கும். அது நாள் முழுவதும் தாக்குப் பிடிக்கும். நாள் முழுவதும் பயன்படுத்தினாலும் கச்சிதமாக இருக்கும் அளவுக்கு இந்த ஃபார்முலா லைட் வெயிட் ரகத்தைச் சேர்ந்தது.

 

 

பல வகைகள் கலந்த சருமம்

பல வகைகள் கலந்த சருமம்


இது சிக்கலான பிரச்சனைதான். பல வகை சருமங்கள் கலந்திருந்தால் என்ன செய்வது… சருமத்தின் சில பகுதிகளில் ஆயில் அதிகம் சுரக்கும். குறிப்பாக ஆங்கில எழுத்தான T வடிவத்தில் இருக்கும் பகுதிகளில். பிற பகுதிகளில் சருமம் வறண்டு போயிருக்கும். ஆயில் அதிகம் சுரக்கும் பகுதிகளில் அதைத் தூண்டியும் விடக்கூடாது, வறண்ட பகுதிகள் மேலும் வறண்டு போய்விடக்கூடாது. அப்படிப்பட்ட ஃபார்முலா நமக்கு வேண்டும். நல்ல வேளையாக அத்தகைய ஒரு ஃபவுண்டேஷன் உள்ளது.

Lakmé Absolute 3D Cover Foundation தான் அந்த ஃபவுண்டேஷன். இதில் விட்டமின் பி 3 உள்ளது. இது சருமத்திற்கு ஊட்டம் தருவதன் மூலம் சரும செல்களை சுத்தமாக வைத்திருக்கும். இதன் தண்ணீராலான ஃபார்முலா சரிசமமாக சருமத்தில் பரவும். க்ரீம் போல நன்றாக ப்ளென்ட் ஆகும். துளைகளை நிரப்பும் தன்மையும் இதற்கு உண்டு. இதனால் சருமத்திற்கு கச்சிதமான தோற்றம் கிடைக்கும். இன்னொன்று தெரியுமா… இது 16 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும். சருமத்தை சூரிய பாதிப்பிலிருந்து காக்கும் எஸ்.பி.எஃப் 25 இருப்பது கூடுதல் அம்சம். இதை நேசிக்க வேறென்ன வேண்டும்...