ஸ்கின்கேர் என்பது தினமும் செய்ய வேண்டிய ஒன்று. தினமும் எட்டு கிளாஸ் தண்ணீர் குடிப்பது போல சருமத்தையும் பாதுகாக்க வேண்டும். ஆனால் பெரும்பாலானோர் அப்படி இல்லை. முகத்தையும் கூந்தலையும் தினமும் நன்றாக பார்த்துக்கொள்வார்கள். ஆனால் உடலில் வறண்டு போய்விடக்கூடிய பகுதிகளை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். குறிப்பாக முழங்கால், முழங்கை, கணுக்கால். இதனால் முழங்கை, முழங்கால் பகுதி கருப்பாக மாறிவிடுவதைப் பார்க்க முடியும். கணுக்கால் பகுதியில் சரும வெடிப்பு ஏற்பட்டு, சொரசொரப்பாக மாறிவிடும். அதனால் இந்தப் பகுதிகளுக்கு சற்று கூடுதல் கவனம் கொடுக்க வேண்டும். இதோ டிப்ஸ்…

 

நன்றாக க்ளென்ஸ் செய்யவும்

நன்றாக க்ளென்ஸ் செய்யவும்

தினமும் ஷவர் செய்யும் போது உடலை நன்கு சுத்தம் செய்கிறீர்கள் என்பது தெரிந்ததுதான். ஆனால் வறண்ட பகுதிகளுக்கு கூடுதல் நேரம் செலவிட வேண்டும் என்பது தெரியுமா… முழங்கை, முழங்கை, கணுக் கால் பகுதியில் சோப் அல்லது பாடி வாஷ் அப்ளை செய்து ஸ்கிரப் செய்ய வேண்டும். இதை தினமும் செய்து வர வேண்டும். இந்தப் பகுதிகளில் இறந்த செல்கள் சேர்வதை இது தடுக்கும். Love Beauty & Planet’s Natural Tea Tree Oil & Vetiver Purify Body Wash நல்ல பலன் தரும். உடம்பின் நச்சுக்களை வெளியேற்றக்கூடியது இது. அறநெறிகளுக்கு உட்பட்டு சேகரிக்கப்பட்ட டீ ட்ரீ ஆயில் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. சருமத்தை ஃபிரெஷ்ஷாக வைத்திருப்பதோடு நச்சுக்களையும் நீக்கும்.

 

தவறாமல் மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்தவும்

தவறாமல் மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்தவும்

நீர்ச் சத்து குறைவால்தான் முழங்கை, முழங்கால், கணுக்கால் பகுதியில் நிறமேற்றம் ஏற்படுகிறது. வெடிப்புகள் ஏற்படுகின்றன. அதனால் Vaseline Body Ice Gel Cream. போன்ற பாடி லோஷன் பயன்படுத்துவது நல்லது. இது ஒரு லைட் வெயிட் ஃபார்முலா. ஹயாலுரானிக் ஆசிட், விட்டமின் சி, இ கொண்டது. சருமத்திற்கு இதமாக இருப்பதோடு சூட்டிலிருந்தும் வறண்டு போவதிலிருந்தும் காக்கும். சருமம் ஃபிரெஷ்ஷாக, பொலிவாக இருக்கும்.

 

வாரம் ஒரு முறை எக்ஸ்ஃபாலியேட் செய்யவும்

வாரம் ஒரு முறை எக்ஸ்ஃபாலியேட் செய்யவும்

தினமும் எக்ஸ்ஃபாலியேட் செய்தால்தான் முட்டி, கணுக் கால் பகுதிகள் உடலின் பிறகு பகுதிகள் போல மென்மையாக இருக்கும். இறந்த செல்களை நீக்குவதற்கு எக்ஸ்ஃபாலியேட் உதவுகிறது. இறந்த செல்கள் தொடர்ந்து படிவதால்தான் நிறமேற்றமும் வறட்சியும் ஏற்படுகிறது. வாரம் ஒரு முறை அல்லது இரு முறை ஸ்கிரப் மூலம் எக்ஸ்ஃபாலியேட் செய்ய வேண்டும். Dove Exfoliating Body Polish Scrub with Kiwi Seeds and Cool Aloe நல்ல பலன் கொடுக்கும். இந்த ஸ்கிரப்பில் உள்ள அலோ வேரா, மாசுக்களை நீக்கும். கிவி பிரைட்நஸ் கொடுக்கும். சருமத்திற்கு நீர்ச் சத்தும் கொடுக்கும்.

 

சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்

சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள்

மழையானாலும் வெயிலானாலும் சன்ஸ்கிரீன் பயன்படுத்த மறக்காதீர்கள். பொதுவாக சன்ஸ்கிரீன் பயன்படுத்தும் போது முழங்கை, முழங்கால், கணுக்கால் பகுதிகளை மறந்துவிடுவோம். இதனால் சூரியனின் பாதிப்பு அந்தப் பகுதிகளில் அதிகமாகிவிடக்கூடும். இதனால் நிறமேற்றம் அதிகமாகலாம். அதனால் உடலின் எல்லா பகுதிகளிலும் சன் ஸ்கிரீன் பயன்படுத்தி, சூரியனின் பாதிப்பிலிருந்து காப்பது அவசியம். நாங்கள் பரிந்துரைப்பது: Lakmé Sun Expert SPF 50 PA+++ Ultra Matte Lotion Sunscreen. With SPF 50 . இது எல்லாவிதமான பாதுகாப்பையும் கொடுக்கும். 97 சதவீதம் வரை பாதிப்பு விளைவிக்கும் யு.வி.பி கதிர்கள் தடுக்கப்படும். பிசுபிசுப்பாக இருக்காது. நீங்கள் வெறுக்கும் வெள்ளைப் படிதலும் இதில் இருக்காது.