உங்கள் கூந்தல் ஓரிவில் மேலும் வலுவானதாகவும், ஆரோக்கியமானதாகவும் ஆகிவிட்டால் எப்படி இருக்கும்? ஆனால் நம்முடைய வாழ்க்கை முறையை பார்க்கும் போது இது மிகவும் கடினம் தான். இன்றைய அவசர வாழ்க்கையில், பெண்கள் தங்கள் கூந்தல் நலனுக்கு என்று போதுமான நேரத்தை ஒதுக்க முடியாமல் இருப்பது உண்மை தான். இதன் காரணமாக தலைமுடி பாதிக்கப்பட்டு, பலவீனமாகிவிடலாம். t

மேலும், மாசு, சூரிய ஒளி, ரசாயணம் ஆகியவற்றின் தாக்கம் கூந்தல் பாதிப்பை இன்னும் மோசமாக்கலாம். உங்கள் குழந்தை பருவத்தில் செய்தது போல நேரம் எடுத்துக்கொண்டு ஆற அமர தலைக்கு எண்ணெய் தேய்து குளிப்பது சாத்தியம் இல்லை என்றாலும், உங்கள் பழக்க வழக்கங்களில் செய்து கொள்ளக்கூடிய சிறிய மாற்றங்கள், மன அழுத்தம் மிக்க சூழலில் பாதிப்பை பெருமளவு குறைக்க உதவி செய்யும்.  

 

நீர்த்தன்மை அளிக்கும் மாஸ்க் அவசியம்

நீர்த்தன்மை அளிக்கும் மாஸ்க் அவசியம்

உங்கள் தலைமுடி பாதிக்கப்படுவதற்கான முக்கிய காரணம், அது உலர்ந்து, போதிய ஈரப்பதம் தேவைப்படும் நிலையில் இருப்பது தான். எனவே மாதம் ஒருமுறை மாய்ஸ்சரைசிங் ஹேர் மாஸ்கை உங்களுக்கு கூந்தலுக்கு அளிக்கவும். டோனி & கய் டேமேஜ்ட் ரிப்பேர் ரிகன்ஸ்டிரக்‌ஷன் ஹேர் மாஸ்க்  மூலம் உங்கள் கூந்தல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளவும்.

 

திருத்திக்கொள்ளவும்

திருத்திக்கொள்ளவும்

உங்கள் உலர்ந்த தன்மை கொண்ட, உடைந்த முனைகள் கொண்டதாக ஆகிவிடும் கூந்தல் சீரான வளர்ச்சிக்காக அடிக்கடி திருத்தப்பட வேண்டும். லாக்மே சலூனில் பதிவு செய்து கொண்டு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, உடைந்த முனைகள், மற்றும் முனை பாதிப்புகளை டிரிம் செய்து கொள்ளவும்.

 

வலு சேர்க்கும் ஹேர் ஆயில்கள்

வலு சேர்க்கும் ஹேர் ஆயில்கள்

உங்கள் கூந்தலுக்கு எண்ணெய் தடவ வேண்டும் என்றும், அது ஆரோக்கியமான கூந்தலுக்கு மிகவும் முக்கியம் என்றும் சொல்லவும் வேண்டுமா? தலைக்கு குளிப்பதற்கு முன், உங்கள் கூந்தலை செயல்திறன் வாய்ந்த ஹேர் ஆயில் கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலன் அளிக்கும்.

 

ஈர கூந்தலை வாற வேண்டாம்

ஈர கூந்தலை வாற வேண்டாம்

கூந்தலை அதன் பலவீனமான நிலையில் வாறுவது பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் உண்டாகும் அழுத்தம், மயிர்கால்களை பாதித்து, தலைமுடியை பாதிக்கும். எனவே கூந்தலில் ஈரம் 80 சதவீதம் உலரும் வரை சீப்பு கொண்டு வாறுவதை தவிர்க்கவும். அகலமான பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தவும்.

 

அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்

அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம்

தண்ணீரில் குளோரின் மற்றும் பிற கடினமான ரசாயனம் இருப்பதால் தினமும் தலைக்கு குளித்தால் கூந்தலை பாதிக்கும்.மேலும் தினசரி ஷாம்பு  பயன்படுத்துவதும் கூந்தலியின் இயற்கையான எண்ணெயயை அகற்றி, உச்சந்தலையை உலர்த்தன்மை பெற வைக்கிறது. எண்ணெய் பசை மிக்க கூந்தல் எனில்,  டோவ் டைய்லி ஷைன் தெரபி ஷாம்பு போன்ற மிதமான ஷாம்பு கொண்டு ஒரு நாள் விட்டு ஒரு நாள் தலைக்கு குளிக்கவும்.