நரை முடியின் தோற்றம் அறிவு முதிர்ச்சியின் அடையாளம் என கூறப்பட்டாலும், அது எப்போதும் விரும்ப படுவதில்லை. குறிப்பாக 20 களில் இருக்கும் இளம் பெண்களுக்கு முதல் நரைமுடியின் தோற்றம் கிலியை ஏற்படுத்தக்கூடியது. ஒரு சிலருக்கு இது அழகை அளித்தாலும் ( சான்று: ஜார்ஜ் கூல்னி) பலருக்கு இது தூக்கத்தை கெடுக்க கூடியது.

இப்படி தலைமுடி முன்கூட்டியே நரைப்பதற்கு, மன அழுத்தம், மரபணு அம்சம், உடல் உஷ்ணம் அல்லது ஊட்டச்சத்து குறைபாடு என பலவித காரணங்கள் இருக்கலாம். மேலும் இது மிகவும் பரவலாகியும் வருகிறது.

வெள்ளை முடி கலந்த தோற்றம் சால்ட் பெப்பர் லுக் என குறிப்பிடப்பட்டாலும், அத்தகைய தோற்றத்தை நீங்கள் விரும்ப வாய்ப்பில்லை என்பதால் , இந்த பிரச்சனை சமாளிக்க மற்றும் நரை முடி தோற்றத்தை தாமதமாக்குவதற்கான எளிய வழிகள் இதோ:

 

உதவிக்கு வரும் நெல்லி

உதவிக்கு வரும் நெல்லி

தலை முடியின் வெள்ளை நிறத்தை கருப்பு நிறமாக மாற்றுவதில் நெல்லிக்காய் உதவி செய்கிறது. ஆன்டிஆக்சிடென்ட், வைட்டமின்கள் நிறைந்த நெல்லிக்காய், தலைமுடிக்கு ஊட்டச்சத்து அளித்து, அதன் இயற்கையான நிறத்தை மீட்கிறது. இதை பவுடராக, பேஸ்ட்டாக அல்லது எண்ணெயாக , நரை முடிகளின் மீது தொடர்ந்து தடவி வரவும்.

 

இதமளிக்கும் கூந்தல் மசாஜ்

இதமளிக்கும் கூந்தல் மசாஜ்

தேங்காய் எண்ணெய் மூலமான ஆழமான மசாஜ் உங்கள் தலைமுடிக்கு கருப்பு நிறத்தை மீட்டுத்தரும். இதை, எலுமிச்சை சாறு, வெங்காயச்சாறு அல்லது சீயக்காய், ரீத்தா தூளுடன் கலந்து உங்கள் கூந்தலில் தடவி இதமளிக்கவும். 

 

கரிவேப்பிலை மகத்துவம்

கரிவேப்பிலை மகத்துவம்

கரிவேப்பிலையில் வைட்டமின் பி உள்ளது. இது தலைமுடிகளின் நார்கால்களின் இயற்கை பிக்மென்ட்களை தக்க வைத்து, மேற்கொண்டு நரை விழுவது தடுக்கிறது. கரிவேப்பிலை மற்றும் மோர் கலந்து கலைவை மூலம் உங்கள் தலைமுடியை அலசவும் அல்லது அதை தலைமுடி மீது தடவி அலசவும். 

 

பிளாக் டீ தரும் கருப்பு நிறம்

பிளாக் டீ தரும் கருப்பு நிறம்

இயற்கையான மற்றும் வலுவான நிறமளிக்கும் சங்கதியான பிளாக் டீ, ஆரோக்கியமான கூந்தலுக்கு உதவும். கொஞ்சம் பிளாக் டீயை கொதிக்க வைக்கவும். இதை ஆற வைத்து தலைமுடி மீது தடவிக் கொண்டு 30 நிமிடம் அப்படியே இருக்கவும். பின்னர் வெதுவெதுப்பான தண்ணீரில் அலசிக்கொள்ளவும். 

 

ஹென்னா !

ஹென்னா  !

ஹென்னா ( மருதாணி) மூலிகை ரசாயன டைகளுக்கு நல்ல மாற்றாகும். ஹென்னா பசை, ஆழமான கண்டிஷனிங் அளிப்பதோடு, உங்கள் நரை முடியையும் மறைக்கிறது. எனவே தான் இது நரைமுடியை சமாளிக்க ஏற்றதாக கருதப்படுகிறது. இதை காபியுடன் அல்லது செம்பருத்தி இலைகளுடன் கலந்து பயன்படுத்தலாம்.