அதிக செலவு இல்லாமலும், பிரபலமானவற்றிற்கு முரண்பட்டதாகவும், உங்கள் கூந்தலுக்கேற்ற மிகவும் மிருதுவான, குணப்படுத்தக்கூடிய தன்மையைக் கொண்டது இந்து ஹேர் ஸ்பா சிகிச்சைமுறையாகும். ஆமாம், அது சரியானது, வீட்டிருந்தபடியே ஒரு ஆழந்த கண்டிஷனிங் ஹேர் ஸ்பாவை செய்து கொண்டு, நிறைய பணத்தை மிச்சபடுத்தலாம். எப்படி செய்வதென்று தெரியவில்லையா? வீட்டிலேயே ஹேர் ஸ்பாவை செய்து கொள்ளும் வழிமுறையை படிப்படியாக அறிந்து கொள்வோம்.
- வழிமுறை 01 : ஆயில் மஸாஜ் செய்து கொள்வது
- வழிமுறை 02 : தலைமுடிக்கு நீராவி பிடித்தல்
- வழிமுறை 03 : தலைமுடிக்கு ஷேம்பு போட்டு குளிக்கவும்.
- வழிமுறை 04 : தலைமுடிப் பூச்சுடன் கூடிய ஆழ்ந்த கண்டிஷன்
- வழிமுறை 05 : அலசுதல்
வழிமுறை 01 : ஆயில் மஸாஜ் செய்து கொள்வது

உங்களுடைய ஆழந்த கண்டிஷனிங் ஹேர் ஸ்பாவை தொடங்க வேண்டுமானால், உச்சந்தலைக்கும், கூந்தலுக்கும் சில ஊட்டச்சத்தை தர வேண்டும். உங்கள் விருப்பப்படி ஏதாவது ஒரு எண்ணெயை எடுத்துக் கொள்ளுங்கள், மைக்ரோவேவில் 30 வினாடிகள் வரை சூடு செய்யவும். உங்கள் விரல் நுனிகளினால் உச்சந்தலையில் நன்றாக தடவி மஸாஜ் செய்யவும். இவ்வாறு செய்வதனமூலம் உச்சந்தலைக்கு நல்ல இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும், மனநிம்மதி ஏற்படும், மனஉளைச்சல் குறையும்.
வழிமுறை 02 : தலைமுடிக்கு நீராவி பிடித்தல்

கடினமான புறத்தோல் வழியாக எண்ணெய் ஊடுருவிச் சென்று ஆழந்த ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்து கொள்ள, உங்களுடைய தலைமுடிக்கு கொஞ்சம் நீராவி பிடிக்க வேண்டும். உங்களிடம் ஸ்டீமர் இயந்திரம் இருந்தால், உங்கள் தலைமுடிக்கு நேர் மேலே சில நிமிடங்கள் அப்படியே பிடிக்க வேண்டும். சூடான தண்ணீரில் நன்றாக ஊற வைத்து, பிழிந்த எடுத்த ஒரு டவலை பயன்படுத்தி, உங்கள் தலையை நன்றாக சுற்ற வேண்டும். டவலிலுள்ள சூடு ஆறிவிட்டால், சூடான தண்ணீரில் நனைத்து மீண்டும் அதேபோல் செய்ய வேண்டும். 10லிருந்து 15 நிமிடங்கள் வரை இதே போல் செய்தபின், அடுத்த வழிமுறைக்கு நகர வேண்டும்.
வழிமுறை 03 : தலைமுடிக்கு ஷேம்பு போட்டு குளிக்கவும்.

அடுத்த வழிமுறை என்னவென்றால், எண்ணெய் பிசுக்கை கழுவி நீக்க வேண்டும். இதற்கு சல்பேட் இல்லாத ஷேம்பூவை பயன்படுத்த வேண்டும். இது உங்கள் தலைமுடிக்கு மிக மிருதுவாக இருக்கும் மற்றும் கூந்தலை வறண்டுப் போக விடாது. உங்கள் உச்சந்தலையிலிருந்து இயற்கையான எண்ணெயை நீக்காமல் எண்ணெய் பிசுக்கு, அழுக்கு மற்றும் வேறு அசுத்தங்களை இது சுத்தம் செய்யும். Tresemme Pro Protect Sulphate Free Shampoo க்களிலுள்ள மொராக்கன் ஆயிலின் நற்குணங்களை உங்கள் தலைமுடிக்குள் செலுத்தப்படுவதால், உங்கள் தலைமுடிக்கு மாஸ்யரையும், பொலிவையும் ஏற்படுத்தும்.
வழிமுறை 04 : தலைமுடிப் பூச்சுடன் கூடிய ஆழ்ந்த கண்டிஷன்

மற்றவர்களைப் போலல்லாமல் உங்கள் தலைமுடியின் அழகை மாற்றுவதற்கு தலைமுடிப் பூச்சுடன் கூடிய ஒரு ஆழ்ந்த கண்டிஷனிங்கை பயன்படுத்தலாம். ஒரு விரிவான ஹேர் ஸ்பா செய்து கொள்ள நேரம் கிடைக்காவிடின், உங்கள் தலைமுடியை நல்ல சீராக வைத்திருப்பதற்கு வாரத்திற்கு ஒருமுறை தலைமுடிப் பூச்சை தடவிக் கொள்ள வேண்டும். தலைமுடி சிக்கு, வறட்சி மற்றும் சரி சொரசொரப்பான முடி ஆகியவற்றைக் கட்டுப்படுத்தக்கூடிய ஆழ்ந்த ஹைட்ரேஸ் மற்றும் மாஸ்யரைஸிங்கை செய்யக்கூடிய மரூலா ஆயில் Tresemme Keratin Smooth Deep Smoothing Mask உள்ளது
வழிமுறை 05 : அலசுதல்

ஹேர் ஸ்பாவை வீட்டிலிருந்தபடியே செய்யக்கூடிய கடைசி வழிமுறையில் தலைமுடிப் பூச்சுடன் தலைமுடியை அலசுவதாகும். தலைமுடியை நன்றாக அலசியபின், சல்பேட்டில்லாத ஷேம்பூவை மீண்டும் தடவிக் கொள்ள வேண்டும். அதே அளவிலிருந்து ஒரு கண்டிஷனருடன் அந்த வழிமுறையைத் தொடர வேண்டும். The Tresemme Pro Protect Sulphate Free Conditioner தலைமுடியை சீராகவும், பொலிவானதாகவும், சிக்கில்லாமலும் வைத்திருக்க உதவுகின்றது. உங்கள் தலைமுடியை டவலால் துடைக்கவோ அல்லது செயற்கையாக உலர வைக்கவோக் கூடாது. அவற்றை இயற்கையாக உலர வைக்க வேண்டும்.
Written by Kayal Thanigasalam on Jun 11, 2021
Author at BeBeautiful.