கூந்தலை கவனித்துக்கொள்வது என வரும் போது மிலிட்டரி மாதிரி ஒழுக்கத்தை கடைப்பிடிப்பது உண்டு. ஆனால் என்னதான் கவனமான இருந்தாலும் முடியில் பிசிறு ஏற்படுவதோ, டல் தோற்றம் தருவதையோ, முடி கொட்டுவதையோ தவிர்க்க முடியாமல் போகலாம். அதை சரி செய்வதற்கு நீங்கள் என்ன என்னவோ செய்து சரி செய்ய முடியாமல் போகலாம். கூந்தலை கவனித்துக்கொள்வதில் பொதுவாக செய்யப்படும் தவறுகள் பல உள்ளன. உங்களுக்குத் தெரியாமலே அதை நீங்கள் செய்துகொண்டிருக்கலாம். அத்தகைய பிழைகளின் பட்டியலை இங்கே தருகிறோம். நீங்கள் படித்து, உங்கள் கூந்தல் அழகை மீட்டெடுப்பதற்காக...

 

1. அதிகம் பிரஷ் செய்வது

1. அதிகம் பிரஷ் செய்வது

எல்லா தேவதை கதைகளிலும் படித்திருப்போம். கூந்தலை பல நூறு முறை சீவிக்கொண்டே இருக்கிறோம். கை வலிக்கும் வரை கூந்தலை சீவிக்கொண்டே இருக்கிறீர்களா… ஆனால் இது முழுவதும் தவறான கருத்து. கூந்தலை சிக்கு எடுப்பதற்கு சில முறை சீவினால் போதும். ஸ்டைல் செய்வதற்கும் இது பொருந்தும். அதைவிட அதிகமாக செய்தால் உராய்வு அதிகம் ஏற்பட்டு முடி உடைபட காரணமாக மாறும்.

 

2. ஹேர் ஸ்பிரே தவிர்ப்பது

2. ஹேர் ஸ்பிரே தவிர்ப்பது

இது ஜோக் அல்ல. ஹேர் ஸ்பிரே கூந்தலை பாதிக்கும் என்று நினைத்தால் அதைவிட தவறான கருத்து வேறு எதுவும் இல்லை. ஸ்டைல் செய்வதாகட்டும் கூந்தலுக்கு அழகு கொடுப்பதாகட்டும் ஹேர் ஸ்பிரே மிகவும் உதவும். ஹேர் ஸ்பிரேயில் இருக்கும் பாலிமர் கூந்தலுக்கு மிகவும் நல்லது. அதிலுள்ள பாலிமர்தான் கூந்தலை உலர வைக்கிறது. முன்பு நினைக்கப்பட்டது போல் ஆல்கஹால் அல்ல.

ஹேர் ஸ்பிரே கூந்தலை அடையும் முன்பே ஆல்கஹால் ஆவியாகிவிடுகிறது. அதே சமயத்தில் ஸ்பிரேயில் இருக்கும் பாலிமர் கூந்தலில் நீர்ச் சத்து சேர உதவுகிறது. இதனால் முடி பிசிறுகள் இல்லாமல் இருக்கும். Tresemme Compressed Micro Mist Invisible Hold Natural Finish Smooth Hold Level 2 Hair Spray போன்ற ஃபிரிஷ் கண்ட்ரோல் செய்யும் ஹேர் ஸ்பிரே பயன்படுத்தலாம். இயற்கையான கூந்தல் அழகுக்கு இது உத்தரவாதம்.

 

 

3. ஈரமான கூந்தலை சீவுவது

3. ஈரமான கூந்தலை சீவுவது

ஈரமாக இருக்கும் போது கூந்தல் பலவீனமாக இருக்கும். அதனால் ஈர கூந்தலை வாரும் போது வழக்கத்தைவிட கூந்தல் உடைவது அதிகமாக இருக்கும். முடியில் பிசிறுகள் ஏற்படவும் இது காரணமாக மாறும். ஹேர் வாஷ் செய்யும் முன்பு கூந்தலை வார வேண்டும். ஹேர் வாஷ் செய்த பிறகு கைகளால் கூந்தலை வார வேண்டும்.

 

4. ஸ்கால்ப் கண்டிஷனிங்

4. ஸ்கால்ப் கண்டிஷனிங்

ஸ்கால்ப் கண்டிஷனிங் அவ்வளவு நல்லது தெரியுமா… பொதுவாக கண்டிஷனர் என்பது கூந்தலின் முனைகளுக்கானது. ஆனால் தலை சருமத்தில் கண்டிஷனர் அப்ளை செய்வதால் முடியின் வேர் துளைகளை அது அடைத்துக்கொள்ளலாம். பிசுபிசுப்பு ஏற்படுத்தலாம். அதனால் Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Volume Conditioner போன்ற கூந்தல் அடர்த்தியை அதிகப்படுத்துவதற்கான கண்டிஷனர் பயன்படுத்தவும்.

 

5. ஹேர் மேஸ்க் தவிர்ப்பது

5. ஹேர் மேஸ்க் தவிர்ப்பது

முகத்திற்கு தினமும் மாய்ஸ்சுரைஸர் பயன்படுத்துகிறீர்கள். ஃபேஸ் மேஸ்க் மூலம் அதன் ஊட்டச் சத்தின் அளவினை அதிகப்படுத்துகிறீர்கள். அதே போல கூந்தலுக்கும் ஊட்டச் சத்து கொடுக்க வேண்டும் அல்லவா. எல்லாவித கண்டிஷனரும் இதற்கு உதவும். ஆனால் கூந்தலுக்கு நல்ல நீர்ச் சத்தும் ஊட்டச் சத்தும் வேண்டும் என்றால் ஹேர் மேஸ்க் பயன்படுத்த வேண்டும். Dove Intense Damage Repair Hair Mask கூந்தலுக்கான சிறந்த சாய்ஸ். இதில் நாலில் ஒரு பங்கு மாய்ஸ்சுரைஸிங் மில்க் உள்ளது. இது கூந்தலுக்கு ஆழமான ஊட்டச் சத்து கொடுக்கும். இதிலுள்ள கேரடின் கூந்தல் டேமேஜ் தடுக்கும். கட்டாயம் பயன்படுத்த வேண்டியது இது.