அழகிய தோற்றத்தில் கூந்தல் முக்கிய அங்கம் வகிப்பதால், வலுவான மற்றும் ஆரோக்கியமான கூந்தலை பெற நாம் பலவித வழிகளில் முயற்சிக்கிறோம். உங்கள் தலைமுடி வேகமாக வளர மற்றும் ஆரோக்கியமாக இருக்க, உங்கள் தலைமுடியின் நிலையை மாற்றக்கூடிய பாரம்பரிய வழிகள், பொருட்களை நாங்கள் கண்டறிந்தோம். கோன்பிளவர், ஒயிட் டீ மற்றும் தேங்காஉய் எண்ணெய் அவற்றின் ஊட்டச்சத்து தன்மைக்காக அறியப்படுகின்றன.

இந்த மூன்று பொருட்களின் நற் குணங்கள் கொண்ட அழகு சாதனங்களை பயன்படுத்துவதன் பலன்களை நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது. ஏனெனில், இந்த பலன்களை உங்கள் கூந்தலும் விரும்புகின்றன.

 

தலைமுடி வளர்ச்சிக்கு உதவி

தலைமுடி வளர்ச்சிக்கு உதவி

நகரங்களில் வசிப்பது உங்கள் தலைமுடிக்கு பலவிதமான பாதிப்பை உண்டாக்கி, தலை முடி உதிர வைத்து, தலைமுடி வளர்ச்சியையும் மெதுவாக்குகிறது. இசினாசியா அல்லது கோன்பிளவர், ஒவ்வொரு மயிர்கால்களுடனும் தொடர்புடைய ஸ்டெம் செல்களை தூண்டி விட்டு, தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இசினாசியா கொண்ட செரம் அல்லது ஷாம்பு பயன்படுத்துவது, தலைமுடி உதிர்வதை கட்டுப்படுத்தும். உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை ஊக்குவித்து, தலைமுடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது.   

 

பொடுகிற்கு எதிரான மருந்து

பொடுகிற்கு எதிரான மருந்து

இசினாசியா, கிருமிகளுக்கு எதிரான தன்மை பெற்றிருப்பதால், உச்சந்தலை பாதிப்பை சீராக்குகிறது. தேங்காய் எண்ணெய் உச்சந்தலையில் மாய்ஸ்சரைஸ் செய்து பொடுகளை விலக்கி வைக்கிறது.

 

உச்சந்தலை அரிப்பில் இருந்து நிவாரணம்

உச்சந்தலை அரிப்பில் இருந்து நிவாரணம்

இசினாசியா, புண்ணுக்கு எதிரான தன்மை மற்றும் கிருமிக்கு எதிரான தன்மை பெற்றிருப்பது, உச்சந்தலை அரிப்பை சரி செய்கிறது. ஒயிட் டீயில் உள்ள எபிகல்லோகேட்சின் எனும் ஆண்டிஆகிசிடெண்ட் கிருமிகளால் உச்சந்தலையில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்கிறது.

 

கூந்தலுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம்

கூந்தலுக்கு ஊட்டச்சத்து, ஆரோக்கியம்

கேன்பிளவரில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. ஒயிட் டீ, சீரிய ஒளியின் பாதிப்பில் இருந்து தலைமுடியை காத்து அதன் இயற்கையான பொலிவை காக்கிறது. இதை சரியான இடத்தில் பயன்படுத்துவது சிறந்த பலன் அளிக்கும். அதிக பலன் பெற ஒயிட் டீ கொண்ட ஷாம்புவை நாடவும்.