உங்கள் கூந்தலுக்கான சரியான செரம் எது என கண்டுபிடிப்பது வாழ்க்கையை மாற்றுவதாக இருக்கலாம். மிகவும் பரவலான ஆனால் பெரிய பிரச்சனைகளாக இருக்கும் கூந்தல் பிரச்சனைகளை கூந்தல் செரம்கள் தீர்த்து வைக்கின்றன. இந்த சிலிக்கான சார்ந்த தயாரிப்பு, உங்கள் கூந்தல் மேற்பரப்பில் பரவி அதன் தன்மை மற்றும் பளபளப்பை அதிகமாக்குகிறது. ஆனால் சந்தையில் பல வகையான செரம்கள் இருப்பதால், உங்களுக்கு கூந்தலுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்வது எப்படி? தேர்வு செய்த பின், அதன் மூலம் அதிக பலன் பெறுவது எப்படி?

இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதில் அளித்துள்ளோம். தொடர்ந்து வாசிக்கவும்.

·           செய்ய வேண்டியவை

·           கூந்தலை நன்றாக அலசவும்

·           கீழ்பகுதியில் தடவவும்

·           செய்யக்கூடாதவை

·           அளவுக்கு அதிகமான செரம் பயன்பாடு

 

செய்ய வேண்டியவை

செய்ய வேண்டியவை

உங்கள் கூந்தல் தன்மையை கவனிக்கவும்

கூந்தலுக்கான செரமை தேர்வு செய்யும் போது, உங்கள் கூந்தல் உலர் தன்மை கொண்டதா? எண்ணெய பசை உள்ளதா அல்லது கடினமானதா? என பரிசீலிக்கவும். ரசாயன முறையில் டிரீட் செய்யப்பட்ட கூந்தலுக்கு என்று பிரத்யேக செரம்கள் சில உள்ளன. சரியான செரமை தேர்வு செய்ய உங்கள் ஸ்டைலிஸ்ட் அல்லது தொழில்முறை ஆலோசகர் உதவியை நாடவும். 

 

கூந்தலை நன்றாக அலசவும்

கூந்தலை நன்றாக அலசவும்

கூந்தலுக்கான செரமை பயன்படுத்தும் முன் கூந்தலை நன்றாக அலசவும். நன்றாக தூய்மையான, ஷாம்பு போடப்பட்ட கூந்தலில் தான் இதை பயன்படுத்த வேண்டும். மாசு மற்றும் புழுதியில் இருந்து கூந்தலை காப்பதால், இதை தூய்மையான கூந்தல் மீது பயன்படுத்தவும். 

 

கீழ்ப்பகுதியில் தடவவும்

கீழ்ப்பகுதியில் தடவவும்

உங்கள் கூந்தலின் கீழ்ப்பகுதி உலர்தன்மை, கடினத்தன்மை மற்றும் உடையும் நுனிகளால் பாதிக்கப்படும் வாய்ப்பிருக்கிறது. எனவே கூந்தலின் இந்த பகுதிக்கு அதிக செரம் தேவை. உச்சந்தலையில் செரம் பயன்பாட்டை தவிர்க்கவும். இதை செய்ய சரியான வழி, கீழ்ப்பகுதியில் இருந்து துவங்கி மேல் நோக்கி செல்வது தான்.

 

செய்யக்கூடாதவை

செய்யக்கூடாதவை

ஈரமான கூந்தலில் செரம் பயன்பாடு நன்றாக துவட்டப்பட்ட கூந்தலில் தான் செரம் சிறந்த பலனை அளிக்கும். ஈரமான கூந்தலில் செரம் நிலைக்காது என்பதால் எதிர்பார்த்த பலன் இருக்காது. 

 

மிகை பயன்பாடு

மிகை பயன்பாடு

மேலே சொன்னது போல, நன்றாக அலசிய கூந்தலின் மீது மட்டுமே செரமை பயன்படுத்தவும். அதிகப்படியாக பயன்படுத்த வேண்டாம். அதிக அளவில் பயன்படுத்தினால், கூந்தல் பிசுபிசுப்பு தன்மை கொண்டதாக தோன்றுவதோடு, அதிக புழுதியை ஈர்க்கலாம். உங்கள் கூந்தல் நீளத்திற்கு ஏற்ப, கையில் கொஞ்சம் செரம் எடுத்துக்கொண்டு கூந்தலில் தடவவும்.