தினமும், வேலை நேர முடிவில் உங்கள் எண்ணெய்ப் பசை மிக்க கூந்தலை கொண்டையாக போட்டுக்கொள்ளும் நிலை இருக்கிறதா/ கவலை வேண்டாம். இதற்கான தீர்வை அளிக்கிறோம்.

எண்ணெய்ப் பசை மிக்க கூந்தலை பராமரிப்பதற்கான வழிகள் இதோ:

காரணம் என்ன?

கூந்தலில் ஒவ்வொரு மயிர்காலிலும் இணைக்கப்பட்டுள்ள கிளாண்ட் சுரக்கும் செபம், கூந்தலின் இயற்கையான ஈரப்பதத்தை தக்க வைக்கும் வகையில் செயல்படுகிறது. இவையில்லாமல், கூந்தல் உலர்ந்து பாதிக்கப்படும். எனினும் இதற்கு மாறாக, செபம் அதிகம் சுரந்தால், எண்ணெய்ப் பசை மிக்க கூந்தல் அமையும்.

பெரும்பாலும் கூந்தல் எண்ணெய் பசை முடிச்சிற்கு காரணமாவது உங்கள் கூந்தல் வகைதானே தவிர வேறில்லை. உங்களுக்கு மென்மையான, நீளமான கூந்தல் இருந்தால், செபம் வேர் பகுதியை கடந்து செயல்பட்டு, வழக்கத்தை விட எண்ணெய்ப் பசை அதிகமானதாக தோன்றும். இதே போல, உங்கள் கூந்தலுக்கு தேவையில்லாத பளபளப்பை அளிக்க கூடிய உயிரியல் நோக்கிலான காரணங்கள் இருக்கலாம். சுரப்பிகளில் ஏற்படும் மாற்றம் கூடுதலாக செபத்தை சுரக்க வைக்கலாம் அல்லது எண்ணெய்ப் பசை மிக்க கூந்தல் என்பது உங்கள் மரபணுவில் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் மீறி உங்களால் கூந்தல் எண்ணெய் பசையை கட்டுப்படுத்த முடியும். உங்கள் கூந்தல் எண்ணெய் பசை பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கான வழிகள் இதோ: 

தலைக்கு குளிப்பது தீர்வல்ல
 

தலைக்கு குளிப்பது தீர்வல்ல

பொதுவாக கருதப்படுவது போல, தினமும் தலைக்கு குளிப்பதன் மூலம் கூந்தலின் எண்ணெய் பசைக்கு தீர்வு காண முடியாது. உங்கள் கூந்தலில் தொடர்ந்து ஷாம்பு பயன்படுத்தும் போது, கூந்தலில் உள்ள இயற்கையான எண்ணெய் அனைத்தும் வெளியேறச்செய்து விடுகிறீர்கள். இதன் காரணமாக என்ன செபம் சுரப்பது அதிகமாக கூந்தலின் அடிப்பகுதியில் பிசுபிசுப்பு அதிகரிக்கிறது. சில்லென்ற தண்ணீரில் குளிக்கச்சொன்னால், உங்களுக்கு நடுக்கம் ஏற்படும் என்றாலும், இது உங்கள் கூந்தலுக்கு உதவியாக அமையும். சில்லென்ற தண்ணீர் செபம் சுரப்பிகளை கட்டுப்படுத்துவதால், படுக்கைக்குச்செல்லும் போது உங்களுக்கு கூந்தலில் எண்ணெய் பசை அதிகம் இருக்காது. 

ஷாம்பு மூலம் சுத்தமாக்கல்
 

ஷாம்பு மூலம் சுத்தமாக்கல்

உங்கள் கூந்தலில் எண்ணெய் பசை சேர்வதை தவிர்க்க மாதம் ஒரு முறை நல்ல கிளாரிபையிங் ஷாம்புவை பயன்படுத்தவும். இதன் மூலம் ஆழமாக சுத்தம் செய்யலாம். இதில் உள்ள சோடியம் லாரில் சல்பேட்ஸ், உங்கள் மயிர்கால்கள் மற்றும் உச்சந்தலையில் உள்ள எண்ணெய்ப் பசையை நீக்குகிறது. 

கண்டிஷனரில் கவனம்
 

கண்டிஷனரில் கவனம்

உங்கள் கூந்தல் பராமரிப்புக்கு லேசான கண்டிஷனரை பரிந்துரைக்கிறோம். ஹெவி டியூட்டி கண்டிஷனர் உங்கள் செபம் சுரப்பிகளை தீவிரமாக்கலாம். நல்ல கண்டிஷனர் உங்கள் கூந்தல் உலர்வதை தடுத்து, அதில் கூடுதல் ஈரப்பதம் சேராமலும் தடுக்கிறது. ஆனால், குளியலை முடிப்பதற்கு முன், கண்டிஷனரை முழுமையாக அலசி நீக்கவும். 

உலர் ஷாம்பு உங்கள் நண்பன்
 

உலர் ஷாம்பு உங்கள் நண்பன்

உங்கள் எண்ணெய் பசை கூந்தல் பிரச்சனை தீர்வுக்கு நீங்கள் காத்ர்திருக்கும் அற்புதம் இது தான். ( கொஞ்சம் மிகையாக சொல்கிறோம்). உங்கள் ரசனைக்கு கூந்தல் கொஞ்சம் கூடுதல் பளபளப்பாக இருப்பதாக நினைத்தால், உடனடியாக எண்னெய் பசையை ஈர்த்துக்கொள்ள கொஞ்சம் உலர் ஷாம்புவை ஸ்பிரே செய்தால் போதும். ஸ்பிரே செய்வது அல்லது பவுடராக பயன்படுத்தும் வாய்ப்புகளை கொண்டு, அடர்த்தியான கூந்தல் கொண்ட பெண்ணாக நீங்கள் காட்சி அளிக்கலாம். புத்துணர்ச்சியோடு, எண்ணெய் பசை இல்லாமலும் இருக்கும்.

வேறு ஸ்டைலுக்கு மாறுங்கள்
 

வேறு ஸ்டைலுக்கு மாறுங்கள்

எளிய வழி தேவை எனில் இது தான் உங்களுக்கான வழி. உங்கள் கூந்தலை குதிரை வாலாக அமைத்துக்கொள்வதன் மூலம் அதன் பிசுபிசுப்பு எல்லாம் மறைந்து போவதாக உணரலாம். சங்கடம் தரும் பளபளப்பை மறைக்க பல வழிகள் இருக்கின்றன. தலைப்பட்டை அணியலாம், பண்டனா அல்லது நல்ல தொப்பி அணியலாம். அலை போன்ற தன்மை அளித்து, எண்ணெய் பசையை மறையச்செய்யும் நல்ல டெக்ஸ்சர் ஸ்பிரேவை பயன்படுத்தலாம். இந்த வாய்ப்புகள் எல்லாம் இருக்கும் போது உங்களுக்கு என்ன கவலை சொல்லுங்கள்!

வீட்டிலேயே வழி!
 

வீட்டிலேயே வழி!

எண்ணெய் பசை கூந்தலை சரி செய்ய பலவகையான இயற்கை பொருட்கள் உள்ளன. அவற்றில் சில: 

1.அலோவேரா

ஒரு ஸ்பூன் ஆலோவேராவை, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஒரு கோப்பை தண்ணீரில் கலந்து கூந்தலில் தடவினால் உச்சந்தலையில் செபம் சுரப்பது கட்டுப்படுத்தப்படும். 

2. ஆர்கன் ஆயில்

உங்கள் கூந்தலில் ஆர்கன் ஆயில் தடவி மசாஜ் செய்து, ஒரு மணி நேரம் காத்திருந்து அதன் பிறகு நல்ல ஷாம்பு மூலம் அலசவும். இது எண்ணெய் பசையை கட்டுப்படுத்து செபம் சுரப்பதையும் சீராக்கும்.