ஹேர் அக்ஸ்ஸ்ஸரிஸ் மற்றும் ஹெட் கியர்ஸின் விற்பனை 2019ல் இருந்து மளமளவென உயர்ந்துள்ளன. நடிகைகள் முதல் பிரபலங்கள் வரை தங்கள் வழக்கமான சிகை அலங்காரங்களை இந்த ஹேர் அக்ஸ்ஸ்ஸரிஸ் மூலம் மேலும் மெருகேற்றி வருகின்றனர். அதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள வேண்டுமா? நீங்கள் சரியான இடத்திற்குத்தான் வந்துள்ளீர்கள். நாங்கள் தேர்வு செய்துள்ள சில ஹேர் அக்ஸ்ஸ்ஸரிஸ் உங்கள் சிகை அழகை கூட்டவல்லது, அதை தற்போது பார்க்கலாமா?

 

லோ ஸ்லீக் பன்

லோ ஸ்லீக் பன்

தீபிகா படுகோன் மற்றும் சோனம் கே அஹுஜா போன்றோர் போல லோ ஸ்லீக் பண்ணில் தென்பட விரும்புகிறீர்களா? வாருங்கள் மெருகேற்றுவோம்... கூண்டு போல் இருக்கும் இந்த அக்ஸ்ஸ்ஸரிஸ் பண்ணை கலைய விடாமல் உங்கள் சிகை அழகை கூட்டிக்கொண்டே இருக்கும்.

 

டைனி பிரைட்ஸ்

டைனி பிரைட்ஸ்

டைனி பிரைட்ஸை பார்த்தவுடன் உங்கள் பள்ளிக்காலம் நினைவுக்கு வருகிறதா? நீங்கள் செய்யும் கடினமான வேலைகளினால் உங்களது ஜடை என்றும் பாதிக்கப்படாது. இதனை மேலும் அழகுபடுத்த சிறிய கம்பளி கயிறுகளை சுருட்டி இந்த படத்தில் காட்டியது போல உங்கள் ஜடையை சுற்றி பின்னுங்கள்.

 

ஃபிளவர் பவர்

ஃபிளவர் பவர்

உங்கள் பெண்மையின் அடையாளத்தை வெளிப்படுத்த உங்கள் சிகை அலங்காரத்தில் பூக்களை ஒருமுறை சேர்த்து பாருங்கள். அதற்காக நாங்கள் ரோஜா, மல்லிகை போன்றவற்றை குறிப்பிடவில்லை. மேலேயுள்ள படத்தில் இருப்பதை போல இந்த காலத்து பூக்கள் போன்ற அக்ஸ்ஸ்ஸரிஸை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் அழகின் தரம் உயரும்.

 

பரேட் ஸ்டாக்கிங்

பரேட் ஸ்டாக்கிங்

உங்களுடைய சிகை அலங்காரம் எவ்வாறாக இருந்தாலும் பரவாயில்லை, ஏனெனில் பரேட் ஸ்டாக்கிங் எல்லாவகை அலங்காரத்திற்கும் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உங்கள் சிகை அழகை கூட்ட இது போன்ற புதிய வகை கிளிப்புகளை பயன்படுத்தி பாருங்கள்.