நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை ஸ்கின் டைப்பும் கூந்தலின் தன்மையும் இருக்கலாம். ஒருவருக்கு சூப்பராக இருக்கும் ஒன்று மற்றொருவருக்கு மொக்கையாகமாறலாம். அதனால்தான் ஒவ்வொருவரின் தேவைக்கு ஏற்ப அழகுக் கலையை கஸ்டமைஸ் செய்ய வேண்டும். குறிப்பாக கூந்தல் விஷயத்தில் அப்படி நீங்கள் போராடிக்கொண்டிருந்தால், அதற்குத் தீர்வு தரும் கட்டுரைதான் இது. 

 

சுருள் முடி

சுருள் முடி

சுருள் முடி அழகாகத்தான் இருக்கும். ஆனால் அதை வைத்து மேனேஜ் செய்வதுதான் கஷ்டம். எக்கச்சக்க சுருள் என்றால் பிசுறு ஏற்படும். சீக்கிரமே கூந்தல் ஆரோக்கியம் கெட்டுப் போகும். இந்த வகை கூந்தலுக்கு Love Beauty And Planet Argan Oil And Lavender Aroma Smooth And Serene Shampoo + Conditioner ஃபிரிஸ் ஏற்படுவதைத் தடுக்கும் ஷாம்பூவின் காம்பினேஷன் அவசியம். இதில் சுத்தமான அர்கன் ஆயில் இருப்பதால் கூந்தல் சக்தி பெறும். தேங்காய் எண்ணெய் மாய்ஸ்சுரை லாக் செய்யும். ஃபிரெஷ் லேவண்டர் கூந்தலுக்கு அமைதியையும் நறுமணத்தையும் கொடுக்கும். இந்த டைப் கூந்தல் சீக்கிரமே ட்ரை ஆகிவிடும் என்பதால் வாரம் ஒரு முறை ஹேர் மேஸ்க் செஷன் அவசியம். இது கூந்தலை அடர்த்தியாகக் காட்டும். Dove Healthy Ritual For Strengthening Hair Mask சுருள் முடிக்கு சிறப்பாக பலன் தரும். இது ஹேர் டேமேஜ் தடுக்கும், கூந்தலின் மேல் பகுதியை ஸ்மூத்தாக வைத்திருக்கும், ஃபிரிஸ் ஏற்படாமல் தடுக்கும். இதனால் கூந்தல் நீண்ட நேரம் ஆரோக்கியமாக இருக்கும். 

 

நேரான முடி

நேரான முடி

நேரான முடி என்பது மேனேஜ் செய்ய ஈஸியானதுதான். ஆனால் அதிலும் சில பிரச்சனைகள் உண்டு. நன்றாக கவனித்துக்கொள்ளாவிட்டால் கூந்தல் படிந்து விடும். கூந்தல் அடர்த்தி குறைவாகத் தெரியும். கூந்தலுக்கு அடர்த்தியான தோற்றம் கொடுப்பதற்கு TRESemmé Thick & Full Shampoo And Conditioner போன்ற வால்யூம் அதிகரிக்கும் ஷாம்பூ பயன்படுத்தலாம். கூந்தலுக்கு நன்மை செய்யும், கூந்தல் வளர வைக்கும் பயோடின் இதில் உள்ளது. அது போக மாய்ஸ்சுரை உள்ளே லாக் செய்யும் புரதச் சத்தும் இதில் உள்ளது. பாராபென், செயற்கை சாயங்கள் இதில் இல்லை என்பது கூடுதல் ப்ளஸ். ஆனால் தலை சருமத்தில் கண்டிஷனர் அப்ளை செய்யாதீர்கள். கூந்தலின் நடுப் பகுதியிலிருந்து நுனிப் பகுதி வரை அப்ளை செய்து, 2-3 நிமிடம் கழித்து குளிர் நீரில் அலசுங்கள். கூந்தல் டல்லாக இருப்பது, முனை ட்ரையாவது நேரான முடி கொண்டவர்களுக்கு பிரச்சனைதான். ப்ளோ ட்ரையிங் பயன்படுத்துவது மூலம் இது போன்ற பிரச்சனைகளைத் தடுக்கலாம்.

 

அலைபாயும் கூந்தல்

அலைபாயும் கூந்தல்

அலைபாயும் கூந்தல் என்றால் அதைக் கட்டுப்படுத்துவது கஷ்டம்தான். மிகவும் கவனமாக அதை மேனேஜ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் கூந்தல் முனைகள் ட்ரையாகிவிடும். கூந்தல் ஆரோக்கியமற்ற தோற்றம் கொடுக்கும். கவலை வேண்டாம், அதற்கு நல்ல தீர்வு இருக்கிறது. Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Volume Shampoo அலைபாயும் கூந்தல் கொண்டவர்களுக்கு சிறந்த சாய்ஸ். அறநெறிகளுக்கு உட்பட்டு ஃபிலிப்பைன்ஸிலிருந்து சேகரிக்கப்பட்ட இயற்கையான தேங்காய் தண்ணீர் இதில் உள்ளது. 24 மணி நேரம் வரை கூந்தலின் மாய்ஸ்சுரை இது லாக் செய்யும். மொரோக்கோ தேசத்து மிமோசா மலர்களின் சாறுகளும் உள்ளதால் நல்ல நறுமணமும் கிடைக்கும். ஃபிரிஸ் பிரச்சனை ஏற்பட்டால் TRESemme Keratin Smooth Hair Serum பயன்படுத்தி அதை சரி செய்யுங்கள். ஃபிரிஸ் தடுப்பது போக பொலிவைக்கொடுக்கும் கெமிலியா ஆயிலும் இதில் உள்ளது. ஈரமான கூந்தலில் இதை அப்ளை செய்ய வேண்டும். கூந்தல் வேர்களில் அப்ளை செய்யக்கூடாது. இதைப் பயன்படுத்தினால் டல்லான கூந்தலும் மினுங்கும். அதுவும் சில நொடிகளில்.