கவலைப்படவில்லையா… கச்சிதமான சிகையலங்கார வழக்கத்தைப் பின்பற்றுவது எளிதான காரியம் அல்ல. குறிப்பாக உங்களின் கூந்தலுக்கு எது பொருந்தும், எது ஆரோக்கியமானது என கண்டுபிடிப்பது ஈஸி அல்ல. சும்மா ட்ரை செய்து பார்ப்பதற்கான தவறான உட்பொருட்களை பயன்படுத்தினால்

ஹேர் டேமேஜ் ஏற்படலாம். கூந்தல் வறண்டு போகலாம். ஆனால் இத்தகைய பிரச்சனைகளை ஏற்படுத்தும் காரணங்களை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்பது நல்ல செய்தி. நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்தும் வேதிப் பொருட்களை நீங்கள் தவிர்த்தே ஆக வேண்டும். இதன் மூலம் அற்புதமான, ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம். இதோ அதற்கான டிப்ஸ்...

 

பாராபென்

பாராபென்

சிகையலங்கார பொருட்களில் பாராபென் இருக்கக்கூடாது என்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கூந்தல் வறண்டு போவது, தலையில் எரிச்சல் ஏற்படுவது, கூந்தல் நிறம் மங்குவது, முடி கொட்டுவது போல பல பிரச்சனைகள் ஏற்படலாம். அதே நேரத்தில் பாராபென் சேர்ப்பதால் கூந்தலுக்கு எந்த பெரிய பலனும் இல்லை. அவை வெறுமனே கெட்டுப் போகாமல் தடுப்பவை. பாராபென் தவிர்ப்பது மூலம் கூந்தலுக்கு செய்யும் மிகப் பெரிய உதவியாக இருக்கும்.

 

சிலிகான்

சிலிகான்

கூந்தல் பொருட்களில் சிலிகான் வேண்டாம் என்றும் சொல்வார்கள், வேண்டும் என்றும் சொல்வார்கள். பளபள தோற்றம் கிடைக்கும் என்றாலும் கூந்தலுக்கு சுமையாகவும் அது மாறும். கூந்தல் வேர்களை ஒட்டி இருக்கும் துளைகளில் நீர்ச் சத்து சேராமல் தடுக்கிறது சிலிகான். இதனால் நாளாக நாளாக கூந்தல் டல்லாக மாறும். ட்ரையாக மாறும். டேமேஜ் ஏற்படும். நல்லதைவிட தீமை அதிகம் என்பதால் கூந்தல் பொருட்களில் சிலிகான் இருந்தால் அதைத் தவிர்த்துவிடுங்கள்.

 

ஃபார்மால்டிஹைட்

ஃபார்மால்டிஹைட்

ஃபார்மால்டிஹைட் பெரிய அளவில் பிசினஸ் பார்க்கிறது. ஆனால் ஆரோக்கியத்திற்கு ஏற்படுத்தும் பிரச்சனைகளால் கவனத்தைத் திருப்பியுள்ளது ஃபார்மால்டிஹைட். அப்படியென்றால் எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் என நினைத்துப் பாருங்கள். கூந்தலை மென்மையாக்குவதற்கு, வளர்ப்பதற்கு, க்ளீன் செய்வதற்கு இது சிறிய அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆனாலும்கூட ஆபத்தானது என்பதால் இது தவிர்க்கப்பட வேண்டியது. இன்னும் ஆதாரம் வேண்டுமா… கனடா நாட்டு காஸ்மெடிக் தடை பட்டியலில் இது இடம் பெற்றிருக்கிறது. போதுமா…

 

செயற்கை நறுமணம்

செயற்கை நறுமணம்

கூந்தல் பொருட்களில் செயற்கை நறுமணங்கள் சேர்ப்பது ஒன்றும் புதிதல்ல. இப்போது நீங்கள் பயன்படுத்தும் சிகையலங்கார பொருட்களிலும் இது இருக்கக்கூடும். ஆனால் அவை கூந்தலுக்கு நல்லதா… வல்லுனர்கள் தெளிவாகச் சொல்கிறார்கள்… அது நல்லதே அல்ல… அது சில சமயங்களில் எரிச்சல் ஏற்படுத்தும். பிறகு அசெளகரியம். சிவப்புத் திட்டுக்கள் தோன்றும். தலையில் உள்ள சருமம் உறிந்து வரக்கூடும். இதெல்லாம் தேவையா…

 

ப்போது என்ன செய்வது…

ப்போது என்ன செய்வது…

அதற்காக சிகையலங்கார பொருட்களே பயன்படுத்தக்கூடாது என நாங்கள் சொல்லவில்லை. கூந்தல் பொருட்களில் உள்ள கெடுதல் ஏற்படுத்தும் பொருட்களை பார்த்துப் பார்த்து தவிர்க்க வேண்டும். டேமேஜ் ஆன கூந்தலை எவ்வாறு சரிசெய்வது… Love Beauty & Planet Tea Tree Oil & Vetiver Clarifying Shampoo and Conditioner மூலம் க்ளென்ஸ் செய்யலாம். டீ-டாக்ஸ் நற்குணங்கள் கொண்ட டீ ட்ரீ ஆயில் கொண்டது இது. இதனால் கூந்தலும் அடர்த்தியாகத் தெரியும். இயற்கையான நறுமணம் அறநெறிகளுக்கு உட்பட்டு சேகரிக்கப்பட்ட வெட்டிவேர் கூடுதல் ப்ளஸ். ஆரோக்கியமான, அற்புதமான கூந்தலை பகட்டாகக் காட்டலாம்.

பிரதான புகைப்படம், நன்றி: @janhvikapoor