அதிக நேரமோ, முயற்சியோ செலவிடாமல், நம்முடைய கூந்தல் பளபளப்பாகவும், ஆரோக்கிமாகவும் இருக்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால், கூந்தலை பராமரிக்க நாம் அதிக நேரத்தை செலவிட வேண்டியிருக்கிறது. அப்படியிருந்தும் அது போதுமானதாக இருப்பதில்லை. இந்தப் பிரச்சனைக்கான எளிய மற்றும் பலன் மிக்க தீர்வாக ஹேர் மாஸ்க் அமைகிறது. நாம் இதை விரும்பினாலும், எல்லா முறையும் எதிர்பார்த்த பலன் கிடைப்பதில்லை. 

அடுத்த முறை ஹேர்மாஸ்க் செய்யும் போது, இந்த செய்யக்கூடியவை மற்றும் செய்யக்கூடாதவைகளை நினைவில் கொள்ளுங்கள். 

 

செய்ய வேண்டியது: சரியான ஹேர் மாஸ்கை தேர்வு செய்வது

செய்ய வேண்டியது: சரியான ஹேர் மாஸ்கை தேர்வு செய்வது

ஒவ்வொரு வகை கூந்தலுக்கும் தேவை என்பது மாறுபட்டது. எனவே, அதற்கான சிகிச்சையும் வேறுபடக்கூடியது. ஹேர் மாஸ்கை தேர்வு செய்யும்போது, உங்கள் தலைமுடியின் வேர்கால்களின் தேவையை மனதில் கொள்ளுங்கள். உங்கள் உச்சந்தலை உலர் தன்மை கொண்டது எனில் ஊட்டச்சத்து மிக்க ஹேர் மாஸ்க் ஏற்றது. எண்ணெய்பசை மிக்க உச்சந்தலை எனில், கிளே மாஸ்க் பொருத்தமாக இருக்கும். எனவே கவனமாக தேர்வு செய்யவும்.

 

செய்யக்கூடாதது: தினமும் பயன்படுத்த வேண்டாம்

செய்யக்கூடாதது: தினமும் பயன்படுத்த வேண்டாம்

ஹேர் மாஸ்கை தினமும் பயன்படுத்துவது, தலைமுடியின் தன்மையை பாதிக்கும். பெரும்பாலும் தலைக்கு குளித்த பிறகு வாரம் ஒரு முறை அல்லது இருமுறை பயன்படுத்துவது பொருத்தமாக இருக்கும்.

 

செய்ய வேண்டியது: சரியான நேரம் தேவை

செய்ய வேண்டியது: சரியான நேரம் தேவை

ஹேர் மாஸ்கை 15 முதல் 30 நிமிடம் வைத்திருக்கவும். ஒரு டவலை இதமான நீரில் நனைத்து, அதை சுற்றிக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மாஸ்க் அதன் மாயத்தை செய்யட்டும்.

 

செய்யக்கூடாதது: அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம்

செய்யக்கூடாதது: அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம்

ஹேர் மாஸ்கை அதிக நேரம் வைத்திருப்பது அல்லது இரவு முழுவதும் வைத்திருப்பது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு ஆதாரம் இல்லை என்றாலும், இது உங்கள் தலையை கணக்கச்செய்து, உச்சந்தலையை பிசுபிசுப்பாக்கும். மேலும், நீண்ட நேரம் வைத்திருப்பது சிறந்த பலனை தரும் என்பதில்லை. எனவே, பேக்கேஜில் குறிப்பிட்டுள்ள நேரத்தை கடைப்பிடிப்பது நல்லது.

 

செய்ய வேண்டியது: சீப்பால் நன்றாக வாறவும்

செய்ய வேண்டியது: சீப்பால் நன்றாக வாறவும்

மாஸ்கை மட்டும் பயன்படுத்துவது போதுமானதல்ல. ஏனெனில் சில முடிகளை விட்டிருக்கலாம். எல்லா இடங்களிலும் பலன் பரவும் வகையில் சீப்பால் தலைமுடியை நன்றாக வாறவும். சிறிய பல் கொண்ட சீப்பு பாதிக்கும் என்பதால், பெரிய சிப்பை பயன்படுத்துவது நல்லது. மேலும் உங்கள் முடி ஈரமாக இருக்கும் என்பதால், சிறிய சீப்பால் பாதிப்பு ஏற்படலாம்.