ரெகுலராக ஹேர் ஆயில் மசாஜ் எடுத்துக்கொள்வது கூந்தலுக்கு மிகவும் நல்லது. இதனால் நீர்ச் சத்து அதிகரிப்பதோடு, தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.

ஆனால் சரியான விதத்தில் ஆயில் தேய்த்தால்தான் இந்தப் பலன்கள் கிடைக்கும். ஆயில் அப்ளை செய்வதில் அப்படி என்ன தவறு செய்துவிடப் போகிறோம் என்றுதானே நினைக்கிறீர்கள். இதோ, எண்ணெய் தேய்ப்பதில் அதிகமாக செய்யும் தவறுகளை இந்தக் கட்டுரையில் பட்டியல் செய்திருக்கிறோம். படியுங்கள், அதைத் தவிர்ப்பது எப்படி என்று கற்றுக் கொள்ளுங்கள்.

 

மிஸ்டேக் 01: ஆயில் சூடாக்காமல் தேய்ப்பது

மிஸ்டேக் 01: ஆயில் சூடாக்காமல் தேய்ப்பது

நான் எப்போதுமே சூடாக்காமல்தான் ஆயில் தேய்ப்பேன் என்கிறீர்களா. அதுதான் முதல் தவறு. குளிர்ச்சியான ஆயில் கொஞ்சம் திக்காக இருக்கும். அதனால் ஊடுருவிச் செல்ல அதிக நேரமாகும். அதனால் கூந்தலின் வேர்களுக்கு போதுமான நீர்ச் சத்தும் ஊட்டச் சத்தும் கிடைக்காது. சூடாக்கும் போது ஆயில் லேசாக எடை குறையும். இது எளிதாக ஊடுருவிச் செல்ல உதவும். அதிக சூடாக்கினால் ஊட்டச் சத்து போய்விடும் என்பதோடு, தலை புண்ணாகிவிடும் ஜாக்கிரதை.

 

மிஸ்டேக் 02: தேய்த்தவுடன் கழுவுவது

மிஸ்டேக் 02: தேய்த்தவுடன் கழுவுவது

ஆயில் பலன் கொடுக்க வேண்டுமா… அது தலையில் சருமத்திற்குள், முடியின் வேர்களின் வழியாக உள்ளே செல்ல வேண்டும். ஆயில் திக்காக இருக்கும் என்பதால் இதற்கு அதிக நேரமாகும். ஆயில் தேய்த்த பிறகு சிறிது நேரத்திலேயே அதைக் கழுவிவிட்டால் எந்த ஊட்டச் சத்தும் கிடைக்காது. அதனால் குறைந்து ஒரு மணி நேரம் கழித்தாவது ஹேர் வாஷ் செய்வது நல்லது.

 

மிஸ்டேக் 03: இரவெல்லாம் ஆயில்

மிஸ்டேக் 03: இரவெல்லாம் ஆயில்

எவ்வாறு தேய்த்தவுடன் கழுவக்கூடாதோ, அதே போல தலையில் ஆயில் ரொம்ப நேரம் இருக்கவும் கூடாது. இது நிறைய தூசி, வியர்வை போன்ற அசுத்தம் சேர்வதற்கு காரணமாக இருக்கும். இது சரும துளைகளை அடைத்துக்கொள்வதால் முடி வளர்ச்சி தடைபடும். முடி கொட்டவும்கூட இது காரமாக மாறலாம். ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் எண்ணெய் ஊறிய பிறகு ஹேர் வாஷ் செய்வதே சிறந்தது.

 

மிஸ்டேக் 04: முடி சீவுவது

மிஸ்டேக் 04: முடி சீவுவது

ஈரமாக இருக்கும் போது எவ்வாறு உங்கள் கூந்தல் பலவீனமாக இருக்குமோ, அதே போல ஆயில் இருக்கும் போதும் முடி பலவீனமாக இருக்கும். ஆச்சரியமாக இருக்கிறதா? எண்ணெய் தேய்த்த பிறகு சீப்பால் தலை வாருவது முடியின் வேர்களில் அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் கூந்தல் பலவீனமாகி, உடைதல் ஏற்படலாம். கூந்தலை இருக்கமாக கட்டினாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படலாம். ஹேர் வாஷ் செய்யும் வரை முடியை ஃப்ரீயாக, லூசாக க்ளிப் போட்டு வைத்துக்கொள்வதே சிறந்த வழி.

 

மிஸ்டேக் 05: கடுமையாக மசாஜ் செய்வது

மிஸ்டேக் 05: கடுமையாக மசாஜ் செய்வது

தலையில் ஆயில் தேய்த்த பிறகு மசாஜ் செய்வது அவசியம். ஆனால் அதை மிகவும் ஜென்டிலாக செய்ய வேண்டும். நீண்ட நேரம் மசாஜ் செய்வது அல்லது கடுமையாக மசாஜ் செய்வது முடியின் வேர்களை பாதிக்கும். இதனால் கூந்தல் பலவீனமாகி, முடி உடைய நேரிடும். அதனால் ஐந்து நிமிடம் மசாஜ் செய்வதோடு நிறுத்திக்கொள்வது சிறந்த பலன்களைத் தரும்.