இளமையான தோற்றம் பெறுவதற்கு ஆரோக்கியமான உணவு, தினசரி சரும பராமரிப்பு, உடற்பயிற்சி ஆகியவை மிக முக்கியம். ஆனால் சரியான ஹேர் ஸ்டைல், ஹேர் கலர் செய்துகொள்வது உங்களது இளம் தோற்றத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரொம்ப சிம்பிளாக உங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றினால் இளமையாகத் தெரிவீர்கள் என்றால் அதை நீங்கள் முயற்சி செய்து பார்க்க மாட்டீர்களா. இதோ அதற்கான டிப்ஸ்...

 

முன்நெற்றியில் படரும் கூந்தல்

முன்நெற்றியில் படரும் கூந்தல்

முன்நெற்றியில் படரும் கூந்தலை பேங்க்ஸ் என்று அழைக்கிறார்கள். அதிக முடி இருப்பது போல் தெரியச் செய்வதோடு முன் நெற்றியை மறைக்கும் விதத்திலும் இது இருக்கும். அதனால் பெரிய முன் நெற்றி கொண்டவர்களுக்கு இது சிறந்த சாய்ஸ். நெற்றியின் சுருக்கங்களை மறைக்கவும் இது உதவும்.

 

ஷார்ட்டாக முடி வெட்டுதல்

ஷார்ட்டாக முடி வெட்டுதல்

முடிநீளமாக இருந்தால் அடர்த்தி இல்லாமல் போகலாம். வால் போல நீளமாக இருக்கும் கூந்தல் யாருக்குத்தான் நன்றாக இருக்கும். அதனால் ஷார்ட்டாக முடியை வெட்டிவிடலாம். குறிப்பாக தோள் அளவிற்கு ஷார்ட்டாக வெட்டலாம். அது ஃபேஷனாகவும் இருக்கும் கூந்தல் பராமரிப்பும் எளிதாக இருக்கும்.

 

அடர்நிற கூந்தல் கலர்

அடர்நிற கூந்தல் கலர்

கூந்தலுக்கு அடிக்கடி கலர் அடிப்பவரா நீங்கள். அப்படி என்றால் அதை எவ்வாறு சரியாகச் செய்வது என கற்றுக்கொள்ளுங்கள். சாக்லெட் பிரவும், மோச்சா போன்ற நிறங்கள் இந்தியர்களுக்கு பொதுவாக இருக்கும் சரும நிறத்துடன் நன்றாக மேட்ச் ஆகும். அது மட்டுமல்ல கூந்தல் ஹெல்தியாக, முகம் இளமையாகத் தோற்றமளிக்கும். அதற்கு நேர் மாறாக காப்பர் போன்ற வெளிர் நிறங்கள் இந்திய சரும நிறத்திற்கு ஒத்து வராது.

 

அலைபாயும் கூந்தல்

அலைபாயும் கூந்தல்

கூந்தலை கட்டி முடிக்காமல் அவிழ்த்து விட்டாலே இளமையாகத் தெரிவீர்கள். காற்றில் கூந்தல் அலைபாய்வது உங்களுக்கு இளமையான லுக் கொடுக்கும். அதற்கு அதிகம் மெனக்கெட வேண்டாம் என்பது கூடுதல் ப்ளஸ்.

 

கூந்தல் ஷைன்

கூந்தல் ஷைன்

பளபளக்கும் ஆரோக்கியமான கூந்தல் இளமையின் அடையாளம். அது பார்ப்பவர் கண்களைக் கவரும். அதனால் அவ்வப்போது கூந்தலுக்கு ஊட்டச் சத்து கொடுக்கும் மேஸ்க் பயன்படுத்த மறக்காதீர்கள். மாதம் ஒரு முறையாவது டீப் கண்டிஷனிங் ட்ரீட்மென்ட் எடுத்துக்கொள்ளுங்கள். உங்களின் ஒட்டுமொத்த லுக் இளமையாகத் தெரிய இது சுலபமான வழி. Image courtesy: Instagram