நீங்கள் கருவுற்றிருக்கும் மாதங்களில் உங்கள் உடல் மற்றும் மனநிலையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகின்றன. ஆம், கர்ப காலத்தை தான் குறிப்பிடுகிறோம். உங்கள் கூந்தலில் நிச்சயம் குறிப்பிட்டத்தக்க மாற்றம் ஏற்படுவதையும் உணரலாம். தாயாக உள்ள பலரும் இதை நினைத்து அஞ்சுவதும் உண்டு. கர்ப்ப காலத்தில் அதிகமாக தலைமுடி உதிர்வது மற்றும் உலர் கூந்தல் பற்றி நீங்கள் பல கதைகளை கேட்டிருந்தால் அவை உண்மை தான் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். ஆனால் இந்த பிரச்சனைகள் தீர்க்க கூடியவை மற்றும் தவிர்க்க கூடியவை தான் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். கர்ப்ப காலத்தில் இந்த கூந்தல் பராமரிப்பு வழிகளை பின்பற்றவும்.  

 

உங்கள் கூந்தலுக்கு மசாஜ்

உங்கள் கூந்தலுக்கு மசாஜ்

உங்கள் தலை மற்றும் கூந்தலுக்கு இதமான எண்ணெய் கொண்டு மசாஜ் செய்வது உங்களுக்கும், உங்கள் கூந்தலுக்கும் நலன் பயக்கும். எனவே தான் கர்ப காலத்தில் இது அதிகம் வலியுறுத்தப்படுகிறது. மங்கலான, பொலிவிழந்த கூந்தலை இது, பளபளக்கும் ஆரோக்கிய கூந்தலாக மாற்றி அதன் நலம் காக்கிறது. உங்களுக்கு பிடித்தமான எண்ணெயை தேர்வு செய்து, உச்சந்தலையை வாரம் ஒரு முறை அரை மணி நேரம் மசாஜ் செய்து கொள்ளவும்.

 

ஸ்டைலிங் வேண்டாம்

ஸ்டைலிங் வேண்டாம்

வெப்பம் மூலம் கூந்தலை ஸ்டலிங் செய்வதை கர்ப காலத்தில் குறைத்துக்கொள்ளவும். உங்கள் கூந்தலும், உச்சந்தலையும் எளிதாக பாதிக்கப்படக்கூடிய வகையில் இருக்கும் என்பதால், வெப்பம் அளிக்கும் சாதனங்களை தொடர்ச்சியாக பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும். மேலும் கூந்தலை இறுக பின்னிக்கொள்ளவும் வேண்டாம். இது, உச்சந்தலை மற்றும் மயிர்கால்களில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிடுக்கு மற்றும் முடி உதிர்வதற்கும் இது காரணமாகலாம்.

 

மிதமான கூந்தல் பொருட்கள்

மிதமான கூந்தல் பொருட்கள்

உங்கள் கூந்தல் தன்மையை புரிந்து கொண்டு, உங்கள் கூந்தல் பிரச்சனைக்கு ஏற்ற மிதமான மற்றும் மிதமான, ரசாயனம் இல்லாத பொருட்களை பயன்படுத்தவும். மூலிகை எண்ணெய்கள், ஆர்கானிக் டைகள், மிதமான ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் கர்ப காலத்தில் உங்களுக்கு ஏற்றதாக இருக்கும். தலைக்கு குளிப்பதற்கு முன்னரும் பின்னரும் எண்ணெய் தடவிக்கொள்ளவும். டோவ் டெய்லி ஷைன் ஷாம்பு மற்றும்  கண்டிஷனரை பயன்படுத்திப்பார்க்கவும்.

 

தலை வாறுவதில் கவனம் தேவை

தலை வாறுவதில் கவனம் தேவை

கவனமாக தலை வாறுவது, அதிலும் குறிப்பாக தலைமுடி ஈரமாக இருக்கும் போது, கவனமாக தலவாறுவது மிகவும் முக்கியம். பலவீனமான தலைமுடி எளிதில் பாதிப்புக்குள்ளாகும். தலைமுடியை நன்றாக காற்றில் உலர அனுமதித்து, பெரிய பற்கள் கொண்ட சீப்பை பயன்படுத்தவும். மென்மையாக வாரவும். அளவுக்கு அதிகமாக வாறுவதை தவிர்க்கவும்.

 

உங்கள் உணவில் கவனம்

உங்கள் உணவில் கவனம்

உங்கள் பின்னல் நலனுக்கு புரதம் மற்றும் கால்சியம் அதிகம் கொண்ட உணவை உட்கொள்ளவும். பாதம் மற்றும் இதர பருப்புகளை நாடவும். மீன், பச்சை இலை உணவுகள் மற்றும் பழங்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவும். போதுமான அளவு தண்ணீர் மற்றும் பழச்சாறு அருந்தவும்.