உங்கள் தலைமுடியை ஸ்டைலாக மாற்ற விரும்பினால், அதற்கு முதலில் பயன்படுத்த வேண்டிய கருவி உங்களுடைய ஸ்ட்ரெய்டனர் ஆகும். ஏனெனில், அது மிகவும் சுலபமாக செய்ய முடியும். அப்படித்தானே உங்கள் தலைமடியை சுருட்டை முடியாகவோ அல்லது பீச் வேவ்ஸ் கூந்தலை போலவோ மாற்றும்போது தான் உண்மையான பிரச்னைகளே துவங்கும்.

‘ஐ வோக் அப் லைக் திஸ்’ என்ற பீச் வேவ்ஸ் ஸ்டைலை செய்து கொள்வது, நாம் நினைப்பது போல் அந்தளவுக்கு ஒன்றும் கடினமானதல்ல. ஆமாம், நீங்கள் நினைப்பது சரிதான், நீங்கள் முழு வீச்சுடன் உடற்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, நீங்கள் சரியான பீச் வேவ்ஸ் ஸ்டைலை பெறுவதற்கு எங்களிடம் சிறப்பான வேறொரு தொழில்நுட்பத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். நீங்கள் காலைப் பொழுது முழுவதும் உங்கள் நேரத்தை ஜிம்மில் செலவழிப்பதால், ஹேர் லுக்கை கவனித்துக் கொள்வதற்கு உங்களுக்கு நேரம் கிடையாது என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நீங்கள் உடற்பயிற்சி செய்தாலும் கூட, உங்களுடைய ஹேர் ஸ்டைலில் கவனம் செலுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். இதற்காக நீங்கள் குழப்பமடைய வேண்டாம். அதை எப்படி செய்ய வேண்டும் என்று நாங்கள் சொல்லித் தருகிறோம். நீங்கள் உடற்பயிற்சி செய்தபின்

உங்கள் தலைமுடியை அலசக் கூடாது என்று தீர்மானிக்கும் அந்நாளன்று, பீச் வேவ்ஸ் கூந்தலை சுலபமாகப் பெறுவதற்கு இந்த உத்திகளை பயன்படுத்துங்கள்.

உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் தலைமுடி பீச் வேவ்ஸ் போல் கூந்தல் பறப்பதற்கு எப்படி செய்ய வேண்டும்

வழிமுறை 01 : தலையிலுள்ள வியர்வையை துடைத்துக் கொள்வதற்கு முன், ஹேர் டெக்சரைஸிங் ஸ்ப்ரேவை தலைமுடி முழுக்க அடித்துக் கொள்ளுங்கள்.

வழிமுறை 02 : உங்களின் தலைமுடியின் அளவைப் பொருத்து, ஒற்றை அல்லது இரட்டை ஜடை ப்ரெஞ்ச் பின்னலை போட்டுக் கொள்ளுங்கள்.

உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் தலைமுடி பீச் வேவ்ஸ் போல் கூந்தல் பறப்பதற்கு எப்படி செய்ய வேண்டும்

வழிமுறை 03 : நீங்கள் உடற்பயிற்சி செய்து முடிக்கும் வரை ஒரே இடத்தில் இறுக்கமாக உங்கள் தலைமுடி இருப்பதை உறுதி செய்து, அதை தலைமுடி கட்டும் கயிற்றால் நன்றாகக் கட்டவும்.
வழிமுறை 04 : ஜிம்மிற்கு சென்று வழக்கம் போல் உடற்பயிற்சி செய்யவும்.
வழிமுறை 05 :  உடற்பயிற்சிக் கூடத்திலிருந்து வீடு திரும்பியதும், உங்கள் உடல் முழுக்க சுத்தம் செய்து கொண்டபின், உங்கள் கூந்தலை அவிழ்த்துக் கொள்ள வேண்டும். எந்தவிதமான ஹீட்-ஸ்டைலிங் செய்து கொள்ளாமலே பீச் வேவ்ஸ் கூந்தலை நீங்கள் பெற முடியும்.
காலையில் அலைபோல கூந்தலைப் பெறுவதற்கு இரவு முழுதும் பின்னலை அப்படியே விட்டு விடுங்கள்.