வழக்கமான சிகையலங்கார பொருட்களிலிருந்து சுத்தமான சிகையலங்கார பொருட்களுக்கு மாறுவது என்பது அற்புதமான பலன்கள் தரக்கூடியது. வேதிப் பொருட்கள் நிறைந்த பொருட்களுக்கு பதில் நச்சில்லாத பொருட்களுக்கு மாறுவது நல்லதுதானே. அது மட்டுமல்ல. நீடித்து நிலைக்கும் பொருட்கள் இருப்பதால் பூமியின் பசுமையையும் மாறாமல் காப்பாற்றக்கூடியது. ஆனால் எது சுத்தமான சிகையலங்கார பொருள் என்று அதிகாரபூர்வ வரையறை எதுவும் இல்லை. அதனால் ஒவ்வொரு நிறுவனமும் ஒவ்வொரு விதமாக அதை விவரிக்கிறது. அந்தக் குழப்பத்தைத் தீர்ப்பதற்காக எது சுத்தமான சிகையலங்கார பொருள் என விளக்கும் கட்டுரை இது.
01. சிலிகான் இல்லாதது

சிகையலங்கார பொருட்களில் சகஜமாக பயன்படுத்தப்படுவதுதான் சிலிகான். முடியின் மீது மெல்லிய திரை போல படரும் சிலிகான் ஈரப் பதம் பாதுகாக்கவும் மினுமினுப்பு ஏற்படவும் உதவும். சிலிகான் விஷத் தன்மை கொண்டவை அல்ல. அதில் சில தண்ணீரில் கரையாது. அதனால் எளிதில் கழுவ முடியாது. இதனால் தலையில் அசிங்கமாக தேங்கிவிடும். முடியின் வேர்களை அடைத்துக்கொள்ளும். இதனால் முடி உடைதல் ஏற்படும்.
02. பாராபென் இல்லாதது

பாக்டீரியாக்களை கொல்வது, வளர்ச்சிக்கு உதவுவது மூலம் ஆயுட்காலத்தை அதிகமாக்க உதவுவதால் பாராபென் பதப்படுத்தும் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பாராபென் தலையில் படியும். வறட்சி, வீக்கம், சிகையின் நிறம் மங்குதல் போன்ற பின்விளைவுகள் ஏற்படுத்தும். அரிதாக முடி கொட்டுதல் பிரச்சனையும் ஏற்படும். அதனால் பாராபென்களை தவிர்ப்பது நல்லது.
03. சாயம் இல்லாதது

சிகையலங்கார பொருட்களின் தோற்றத்தை மேம்படுத்துவதற்காக செயற்கை சாயம் பயன்படுத்துவது உண்டு. பாராபென் போலவே செயற்கை நிறங்களும் தலையில் படியும். ரத்த நாளங்களில் கலக்கும். வீக்கமும் சரும அரிப்பும் ஏற்படும்.
04. நறுமணம் இல்லாதது

சிகையலங்கார பொருட்களை வசீகரமாக்குவதற்காக செயற்கை நறுமணம் சேர்க்கப்படுவதுண்டு. பெட்ரோலியம், ப்ளாடேட்ஸ், பென்சீன் பொருட்கள், அல்டிஹைட்ஸ், டொல்யூன் போன்றவை அதில் இருப்பதுண்டு. இதெல்லாம் கேன்சர் உண்டாக்கும் பொருட்களாக அடையாளம் காணப்படுகிறது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும்.
05. தீமை இல்லாதது

விலங்குகள் மீது பரிசோதிக்கப்படாத பொருட்கள் தீமை இல்லாதவை (cruelty-free) என அழைக்கப்படுகின்றன. அதிலுள்ள உட்பொருட்களுக்கும் இது பொருந்தும். இதில் சரியான தேர்வைச் செய்வது எளிதல்ல. அதனால் இங்கே உங்களுக்கு உதவுகிறோம். Love Beauty & Planet எங்களின் ஃபேவரைட். அற்புதமான சிகையலங்கார பொருட்களை இந்த பிராண்ட் தருகிறது. வெறுமனே அட்டையில் அதைச் சொல்வதுடன் இந்த நிறுவனம் நிற்பதில்லை. மறு சுழற்சி செய்யப்பட்ட பாட்டில்களில் இந்தப் பொருட்கள் வருகின்றன. அதை 100 சதவீதம் மறு சுழற்சி செய்வதும் சாத்தியம். அறநெறிகளை மீறாமல் தருவிக்கப்பட்ட ஃபிரெஞ்சு லேவெண்டர், மொரோக்கோ தேசத்து மிமோசா போன்றவற்றின் பொருட்களோ, நறுமண எண்ணெய்யோ இதில் பயன்படுத்தப்படுகிறது. முடி பிரி பிரியாக இருப்பது முதல் நிறம் வரையிலான பிரச்சனைகளைத் தீர்க்கும் சிகையலங்கார பொருட்கள் இதில் உள்ளன. அதனால்தான் எங்களின் சிகையலங்கார பொருட்கள் பட்டியலில் இது முதலிடம் பிடிக்கும்.
Written by Kayal Thanigasalam on Aug 25, 2021
Author at BeBeautiful.