ஸ்மூத்தான, ஸ்டிரெய்ட்டான கூந்தல் பெறுவது எளிதல்ல. அதைவிட எளிதான விஷயங்கள் பல உள்ளன. ஆனால் இதை எவ்வாறு ஈஸியாக அடைவது. அதற்கான பதில் தரும் கட்டுரை இது. ஹீட் ஸ்டைலிங் பயன்படுத்தினாலோ, ஸ்டிரெய்ட்டனிங் செய்தாலோ கூந்தலின் நீர்ச் சத்து காணாமல் போகும். கூந்தல் உடையும். முடி பிசுறு பிசிறாகத் தெரியும். எந்த அளவுக்கு டேமேஜ் ஏற்படும் தெரியுமா… எவ்வளவு கவனமாக ஸ்டைலிங் செய்தாலும் கூந்தல் பிசிறடிக்கும். அதனால், பின்விளைவுகள் இல்லாமல் கூந்தலை ஸ்டிரெய்ட் செய்ய வேண்டும் என விரும்பினால் அதற்கான பதில்கள் இங்கே உள்ளன. அற்புதமான கூந்தலும் ஸ்டிரெய்ட் கூந்தலும் ஒரு சேர பெறுவதற்கான டிப்ஸ் இவை…

 

கண்டிஷனர் தவிர்க்கக்கூடாது

கண்டிஷனர் தவிர்க்கக்கூடாது

சரியான கண்டிஷனர் மூலம் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. அதில் ஸ்டிரெய்ட் கூந்தலும் இடம் பெறும். Tresemme Keratin Smooth Conditioner, பயன்படுத்திப் பார்க்கலாம். கூந்தலில் ஏற்பட்ட டேமேஜ் குறைக்க இது உதவும். இதனால் கூந்தலை ஈஸியாக மேனேஜ் செய்யலாம். சிக்கு விழுவது, பிசிறு ஏற்படுவது தவிர்க்கப்படும். Tresemme Keratin Smooth Shampoo, பயன்படுத்துவது மூலம் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லலாம். இந்த பவர்ஹவுஸ் ஜோடி மூலம் 48 மணி நேரத்திற்கு கூந்தலை பிசிரடிக்காமல் காக்கலாம்.

 

கூந்தலை அதிகமாக அலசக்கூடாது

கூந்தலை அதிகமாக அலசக்கூடாது

கூந்தலை அதிகமாக அலசும் போது சுத்தமாக இருப்பது போன்ற தோற்றம் ஏற்படும் என்பது உண்மைதான். ஆனால் கூந்தலில் உள்ள இயற்கையான ஆயிலும் சேர்ந்தே கழுவப்பட்டுவிடும், பரவாயில்லையா… இதனால் கூந்தல் டல்லாக, பிசிறுகளுடன் காட்சி தரும். குளிர்ந்த நீரில் கூந்தலை அலசுவது இதற்குத் தீர்வு. ஒரு காலத்தில் இதையெல்லாம் கட்டுக்கதை என நினைத்தார்கள். ஆனால் சில்லென்ற தண்ணீரில் கூந்தல் மினுமினுக்கும் பிசிறு குறையும். இதில் சந்தேகமே வேண்டாம்.

 

பட்டுத் தலையணை உறை

பட்டுத் தலையணை உறை

நல்ல தலையணையில் தூங்குது போன்ற சுகம் எதிலும் வராதுதானே. ஆனால் அதற்காக கொஞ்சம் ஓவராக யோசிக்கக்கூடாது என நீங்கள் நினைக்கலாம். துணி பட்டுப் போல வழுக்கும் தன்மை கொண்டதாக இருப்பதால் கூந்தல் அதன் மீது மிக எளிதாக வழுக்கிச் செல்லும். இதனால் உராய்வு குறைவாக மாறும். நல்ல தூக்கமும் வரும் கூந்தலும் ஸ்டிரெய்ட்டாக, பிசிறு இல்லாததாக மாறும்.

 

முடியை உலர்த்த காட்டன் டி-ஷர்ட் பயன்படுத்துவது

முடியை உலர்த்த காட்டன் டி-ஷர்ட் பயன்படுத்துவது

டி-ஷர்ட் பயன்படுத்தி தலையை உலர்த்துவது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தனிப்பட்ட அனுபவத்தின் மூலமாகவும் இதைச் சொல்கிறேன். ஸ்டிரெய்ட்டான, பிசிறு இல்லாத முடிக்கு இது சிறந்த வழி. காட்டன் டி-ஷர்ட் உராய்வு ஏற்படுத்தாது. தண்ணீரை சீக்கிரமாக உறிஞ்சும். மைக்ரோஃபைபர் டவல் பயன்படுத்தினாலும் இதே போன்ற சிறந்த பலன் கிடைக்கும்.

 

சாப்பிடுவதில் கவனம்

சாப்பிடுவதில் கவனம்

ஆரோக்கியமான, பொலிவான கூந்தலுக்கு உள்ளிருந்து ஊட்டச் சத்து தேவை. அதனால் நல்ல ஊட்டச் சத்து கொண்ட உணவு சாப்பிட்டு வந்தால் நீண்ட கால ஓட்டத்தில் பெரிய மாற்றத்தைப் பார்க்கலாம். உணவின் மூலமாக மட்டுமின்றி நேரடியாகவும் மல்டி விட்டமின் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக விட்டமின் ஏ, விட்டமின் சி, சிலிகா, ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் ஆகியவை பொலிவான கூந்தலுக்கு உத்தரவாதம்.

பிரதான புகைப்படம், நன்றி: @aslisona