தனக்கேற்றாற் போல் சுருள் முடி தன்னை மாற்றிக் கொள்ளும்; இது உங்களுக்கு ஆச்சரியத்தை தரக் கூடியது என்பதை உங்களால் உண்மையில் கணித்திருக்க முடியாது. நேற்றிரவு உங்கள் சுருட்டை முடியை நீங்கள் அளவுக்கதிகமா நேசித்திருக்கலாம், ஆனால் இன்று காலை உங்கள் தலையை மொட்டையடிக்க விருப்பம் ஏற்பட்டிருக்கும். உங்கள் தலைமுடி ஈரமாக இருக்கும்போது உங்கள் சுருட்டை மிருதுவாகவும், படிந்தும் இருப்பதை நீங்கள் கவனித்திருக்கலாம், ஆனால் அது வறண்டு இருக்கும்போது, பொலிவிழந்து, பரட்டை தலைமுடியாக மட்டுமே இருக்கும்.
உங்கள் தலைமுடி ஈரமான மற்றும் உலர்ந்த நிலைகளுக்கு இடையில் உங்கள் தலைமுடியை முக்கியமாக நீங்கள் எப்படி பராமரிக்கிறீர்கள் என்பதை பொருத்தே, ஒரு நாள் முழுதும் உங்கள் தலைமுடி நன்றாக இருக்கும். இது ப்ளாப்பிங் சுருள்முடி முறைக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. தலைமுடியை உலர்த்தசெ செல்வதற்கு முன், உங்கள் ஹேர் ஸ்டைலரைப் பூசிக் கொள்ளவதே ப்ளாப்பிங் ஆகும். பிறகு ஒரு துண்டுக்கு பதிலாக ஒரு டீ-சர்ட்டால் போர்த்தி கொள்ள வேண்டும்.

வழிமுறை1: தலைக்கு குளித்துவிட்டு வந்தவுடன், லீவ்-இன் கண்டிஷனர் மற்றும் வழக்கமாக உபயோகிக்கும் வேறு ஏதாவது ஒரு தலைமுடி தயாரிப்புகளையோ பூசிக் கொள்ளவும்.
வழிமுறை 2: ஒரு XL காட்டன் டீ-சர்ட்டை எடுத்து, அதன் கைப்பகுதி முனை உங்களுக்கு அருகில் வருமாறு வைத்து, அதை ஒரு நாற்காலியின் மீது அல்லது உங்கள் படுக்கையின் மீதோ படர விட வேண்டும்
வழிமுறை 3: உங்கள் தலைமுடியை முன்னுக்குத் தள்ளி, டீ-சர்ட்டின் நடுப்பகுதியில் படரவிட வேண்டும்.
வழிமுறை 4: டீ-சர்ட்டின் அடிப்பகுதியை தலைக்கு மேல் பகுதியிலிருந்து கழுத்தின் பின்பகுதியின் முனை வரை தொடும்படியாக போட்டுக் கொள்ளும்போது , அது உங்கள் தலைமுடியை முழுவதுமாக மூடிவிடும்.
வழிமுறை 5: அவற்றின் கைகளை இழுத்து, அவற்றை ஒன்றாக சேர்த்து முறுக்கி, உங்கள் தலைப்பாகையை பாதுகாக்கும்படியாக ஒரு முடிச்சைப் போடவும்.
வழிமுறை 6: சுமார் 20 நிமிடங்கள் கழித்து டீ-சர்ட்டை கழட்டும் அதே நேரத்தில் உங்களுடைய சுருட்டை முடி படிந்தும், நன்றாக உலரவும் ஆரம்பித்து விடும்.
அது ஏன் வேலை செய்கிறது:
துண்டுகள் கடினமானவை. எனவே, கடினமான துணயினால் உங்கள் தலைமுடியை முடிந்து வைப்பதன் விளைவாக, தலைமுடி நீண்டு போவதுடன், தலைமுடி பரட்டையாவதுடன், வறட்சியையும் ஏற்படுத்தும். உங்கள் தலைமுடியை படிமனாகவும், அடர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டுமானால், உங்கள் தலைமுடியை உலர வைப்பதற்கு ப்ளாப்பிங் செய்து கொள்வதுதான் மிகச் சிறந்த முறையாகும்
Written by Kayal Thanigasalam on Mar 13, 2021
Author at BeBeautiful.