உங்கள் கூந்தலை சிக்கலாக்கி கொள்வதற்கான வழிகளில் ஒன்று, நீச்சல் குளத்தில் மூழ்கி எழுவது தான். இது உற்சாகமானது மற்றும் சிறந்த கார்டியோ பயிற்சியாகிறது. ஆனால் உற்சாகம் தரும் நீச்சல் பயிற்சி உங்கள் சருமம் மற்றும் கூந்தல் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். தண்ணீரை பாதுகாக்க மற்றும் கிருமிகளை கொல்ல அதில் குளோரின் கலக்கப்படுகிறது. தொடர்ந்து குளோரினை எதிர்கொள்ள நேர்ந்தால், உங்கள் கூந்தல் இயற்கையான எண்ணெய் பசையை இழந்து, உலர்ந்து, பாதிக்கப்படுகிறது. எனவே , அடுத்த முறை நீச்சல் குளத்தில் குதிப்பதாக இருந்தால், இந்தக் குறிப்புகளை தவறாமல் மனதில் கொள்ளுங்கள்.
 

தேங்காய் எண்ணெய் பாதுகாப்பு

தேங்காய் எண்ணெய் பாதுகாப்பு

நீச்சல் குளத்திற்கு செல்வதற்கு முன், உங்கள் கூந்தலை தாராளமாக தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்யவும். கூந்தலில் பாதுகாப்பு கவசம் போல் பரவி, சேதத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேங்காய் எண்ணெயை அடி முதல் நுனி வரை நன்றாக தடவவும்.

 

குளியுங்கள்

குளியுங்கள்

நீச்சல் குளத்திற்கு செல்லும் முன் மறக்காமல் குளிக்கவும். தண்ணீர் உங்கள் சருமம் மீது கூடுதல் லேயராக படர்வதால் நீச்சல் குளத்தில் உள்ள நச்சு பொருட்கள் உறிஞ்சப்படுவதில்லை. உங்கள் கூந்தலும் உலர்ந்த நிலையில் அதிக குளோரினை இழுத்துக்கொள்ளும். எனவே இந்தக் குறிப்பை பின்பற்ற மறக்க வேண்டாம். 

 

நீச்சல் தொப்பி

நீச்சல் தொப்பி

உங்கள் கூந்தலுக்கு தேவையான பாதுகாப்பை அளிக்கும் எளிய, செலவு குறைந்த வழி நீச்சல் தொப்பி அணிவதுதான். யாருக்கு தான் கூந்தலில் குளோரின் சேர்வது பிடிக்கும்? எனவே, நீச்சல் தொப்பி அணிந்து  கொண்டு நீந்தி, கூந்தலுக்கு ஏற்படும் பாதிப்பை கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.