புதிய அம்மாக்களே கேளுங்கள், பிரசவத்திற்குப் பின் நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரே ஒரு முடி பராமரிப்பு வழிமுறைகள் அழுக்கடைந்த டயப்பர்கள், கலைந்துப் போன அறை, குவிந்துக் கிடக்கும் துணிமணி மற்றும் ஒரு சிறிய குழந்தை இவர்கள் அனைவருமே உங்களை நம்பித்தான் இருக்கிறார்கள். இது தான் தாய்மையின் அடையாளம், மற்றும் இந்த சில வேலைகள் சில காலத்திற்கு மட்டுமே. புதிய பொறுப்புகளும், மாற்றங்களோடு இருக்கும் புதிய அம்மாக்களான உங்களுக்கு இருக்கும் மற்றுமொரு பிரச்சனை முடி கொட்டுதல். பிரசவத்திற்கு பிறகு முடி கொட்டுதல் என்பது ஒரு சராசரியான நிகழ்வு மட்டுமே, ஆனால் அதனை கவனத்துடன் கையாள வேண்டும். கவனத்துடன் கையாள இதோ நீங்கள் பின்பற்ற வேண்டிய சிறப்பான முடி பராமரிப்பு முறைகள்.
- ஸ்டெப் #1: முடியை கட் செய்தல்
- ஸ்டெப் #2: கூந்தலை க்ளீனாக வைத்திருங்கள், அதிக வாஷ் வேண்டாம்
- ஸ்டெப் #3: கூந்தலுக்கு பலம் தரும் ஹேர் மேஸ்க் பயன்படுத்துங்கள்
- ஸ்டெப் #4: கண்டிஷனரை மறக்காதீர்கள்
- ஸ்டெப் #5: ஸ்மார்ட்டாக ஸ்டைல் செய்யுங்கள்
ஸ்டெப் #1: முடியை கட் செய்தல்

உங்களுக்கு சிறிது நேரம் கிடைத்தால் உங்களது கூந்தலை கட் செய்து கொள்ளுங்கள். இது உங்களது பிளவுபட்ட முனைகளை குறைப்பதோடு, உங்கள் கூந்தலை நன்றாக அடர்த்தியாகவும் காட்டும். மேலும் உங்களது பராமரிக்கும் வேலையும் நேரமும் குறையும்.
ஸ்டெப் #2: கூந்தலை க்ளீனாக வைத்திருங்கள், அதிக வாஷ் வேண்டாம்

பிரசவத்திற்கு பிறகு உங்கள் மயிர்கால்கள் சற்று வலுவிழந்திருக்கும். இதுவே முதல் வருடத்தில் அதிக முடி கொட்டுதலுக்கு காரணமும் ஆகும். இந்த நேரத்தில் வாரத்திற்கு இருமுறை உங்கள் கூந்தலை அலசினால் போதுமானது. மேலும் அலசும் போது முடியை நன்கு அடர்த்தியாக்கும் TRESemmé Thick & Full Shampoo ஷாம்பூவையும் பயன்படுத்தலாம். பயோட்டின் மற்றும் வீட் புரோட்டின் அடங்கிய இந்த தயாரிப்பு உங்கள் முடி உடைத்தலை கட்டுப்படுத்துவதோடு, நல்ல வலுவாகவும் அடர்த்தியாகவும் மாற்றும்.
ஸ்டெப் #3: கூந்தலுக்கு பலம் தரும் ஹேர் மேஸ்க் பயன்படுத்துங்கள்

வலுவான ஹேர் மாஸ்கிங் செய்வது இந்த சமயத்தில் அவசியமான ஒன்றாகும். அதற்கு ஒரு சிறப்பான வழியாக Dove Healthy Ritual For Strengthening Hair Mask தயாரிப்பினை வாரம் ஒருமுறை பயன்படுத்தலாம். இதன் பார்முலாவில் உள்ள ஓட் மில்க் மற்றும் ஹனி எக்ஸ்டராக்ட் உங்களது கூந்தலை நன்கு வலுவாகவும் மென்மையாகவும் மாற்றும். சிறிதளவு இந்த க்ரீமை எடுத்து வேர்களில் படாமல் உங்கள் கூந்தலில் நன்கு தடவுங்கள். 3-5 நிமிடம் கழித்து நன்கு அலசுங்கள். இது உங்கள் கூந்தலுக்கு நல்ல ஊட்டச்சத்தை தருவதோடு இழந்த வலுவை உங்கள் கூந்தல் திரும்பவும் பெறும்.
ஸ்டெப் #4: கண்டிஷனரை மறக்காதீர்கள்

உங்கள் கூந்தலுக்கு நல்ல பராமரிப்பும் ஊட்டச்சத்துமே இந்த சமயத்தில் தேவையானது. அதற்கு சிறந்த ஹேர் கண்டிஷ்னரான TRESemmé Thick & Full Conditioner வைத்திருப்பது அவசியமானது. இதன் பார்முலாவிலுள்ள பயோட்டின் மற்றும் வீட் புரோட்டின் உங்கள் கூந்தலை வலுவாகவும் மற்றும் அடர்த்தியாகவும் மாற்றும். உங்கள் கூந்தலை அலசிய பிறகு இந்த கண்டிஷ்னரை முடி நுனி வரை அப்ளை செய்யுங்கள். 2-3 நிமிடம் கழித்து மீண்டும் உங்கள் கூந்தலை அலசுங்கள்.
ஸ்டெப் #5: ஸ்மார்ட்டாக ஸ்டைல் செய்யுங்கள்

நாங்கள் மேற்குறிய அனைத்தும் நீங்கள் பின்பற்றும் போது உங்கள் முடி உதிர்தலை மறைக்க மேலும் ஒரு வழியினை மேற்கொள்ளலாம். அது உங்கள் ஹேர் ஸ்டைலை மாற்றுவது. ஹேர் ஸ்டைலை மாற்றுவது மூலம் உங்கள் மந்தமான கூந்தலை அடர்த்தியாக காட்டலாம். நீங்கள் வழக்கமாக வகுடெடுக்கும் முறையை மாற்றி உங்கள் கூந்தலை அடர்த்தியாக காண்பிக்கலாம் அல்லது இரட்டை போனிடைலும் போட்டுக்கொள்ளலாம்.
Written by Kayal Thanigasalam on Jan 12, 2022