பொலிவிழப்பு, உயிரற்றத் தன்மை மற்றும் பரட்டைத் தலைமுடி போன்றவற்றிலிருந்து எங்கள் கூந்தலை காப்பாற்ற நாங்கள் நம்பியிருப்பது ஒரு சில நம்பகமான பொருட்கள் மட்டுமே. . முடி பராமரிப்பு நிபுணர்கள் மத்தியில் அதிகபட்ச புகழை பெற்றிருப்பது இந்தக் கெராடின் மட்டுமே ஆகும். கெரட்டினைப பற்றி சிகையலங்கார நிபுணர், நண்பர்கள் மற்றும் ப்யூட்டி பளாக்கர்ஸ் போன்றோர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறோம்; இது தலைமுடியை பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருப்பதைப் பற்றி குறை சொல்ல முடியாது.
ஆனால், கெராடின் என்றால் என்னவென்று உங்களுக்கு சரியாகத் தெரியுமா, இதுவரை ஒருமுறையாவது, அதை உங்கள் தலைமுடியில் பயன்படுத்தியிருக்கிறீர்களா? இல்லையெனில், இன்று, இந்த ஆரோக்கியமான கெராடின் டோஸ் உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்திற்கு தேவைப்படுவதற்கான முக்கிய காரணங்களைப் பற்றி நாம் ஆழமாகப் பார்ப்போம்.
- ஆனால் முதலில், கெராடின் என்றால் என்ன?
- முடியை வலிமையாக்குகிறது
- பரட்டை முடியை சமாளிக்கிறது
- அதிக வெப்ப சேதம் இல்லை
- நீடித்த பிரகாசம்
ஆனால் முதலில், கெராடின் என்றால் என்ன?

நம்முடைய முடி, சருமம் மற்றும் நகங்களுக்கு இயற்கையான புரத சத்தை அதிகரிக்க இந்த கெராடின் உதவுகிறது. இதில் நமது தலைமுடியில் சுமார் 80-90 சதவீதம் கெராடின் என்பது சுவாரஸ்யமானதாகும். இது நமது தலைமுடியின் உட்புற புறணி (cortex) மற்றும் புறத்தோலையும் உருவாக்குகிறது. நமது கூந்தலுக்கு நெகிழ்ச்சித் தன்மை, பளபளப்பு மற்றும் வலிமை போன்றவற்றை பராமரிக்கும் இது பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது. ஆனால் தொடர்ந்து ஹீட் டூல்ஸ் மற்றும் கெமிக்கல்கள் இவற்றை உபயோகிப்பதன் விளைவாக கெராடின் இழப்பு, முடி உதிர்தல், பரட்டைத் தலைமுடி மற்றும் முடி உடைந்து போதல் போன்ற பிரச்னைகள் உருவாகும்
முடியை வலிமையாக்குகிறது

உங்கள் முடி பராமரிப்பு வழக்கத்தில் கெராடினை சேர்ப்பதற்கு TRESemmé Keratin Smooth Mask ஐப் பயன்படுத்துவதே மிக எளிதான வழியாகும். ஷாம்புப் போட்டுக் குளித்தப் பின்பு வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை பயன்படுத்துவது சிறந்தது. கெராடின் நிறைந்த இந்த ஹேர் மாஸ்க்கை தலைமுடிகளின் வேர்க்கால்கள் வரை தடவிக் கொள்ளும்போது, கெராடினின் பாதுகாப்பு புரதம் முடிகளுக்கு வலிமையை மீண்டும் பெற்றுத் தருகிறது. உங்கள் முடி அடுக்குகளின் உட்புறத்தினூடே மிக ஆழமாக ஊடுருவிச் சென்று, கெராடின் உங்கள் தலைமுடியை மீண்டும் உயிர்ப்பெறச் செய்கிறது. மேலும், தலைமுடியின் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துவதோடு மட்டுமன்றி முடி உடைவதையும் குறைக்கிறது.
பரட்டை முடியை சமாளிக்கிறது

நீங்கள் ஹீட் ஸ்ட்ரெய்ட்னர்ஸ் மற்றும் கெமிக்கல் சிகிச்சைகளை அடிக்கடி செய்து கொள்வதினால்தான், உங்கள் மயிர்க்கால்கள் பெரும்பாலும் வலுவிழந்து போகின்றன. அதன் விளைவாக மேல்த்தோல் பிளந்து, மயிரிழைகள் பிரிந்து விடும். காலப்போக்கில் நீர் கசிந்து வீக்கமும் உண்டாகும். இறுதியில் முடிக் கட்டுக்கடங்காமல் பரட்டை முடியாகி விடும். இந்தப் பிரச்னைகளை கெராடின்கள் குணப்படுத்தும் என்பது ஒரு நல்ல செய்தியாகும். இந்த கெராடின்கள் மேல்த்தோல்களை ஒன்றாக இணைத்து, மயிர்க்கால்களுக்கு மென்மையையும், மிருதுவான அமைப்பைக் கொடுக்கும். எங்களுடைய கட்டுக்கடங்காத பரட்டைத் தலைமுடியை படிய வைத்து, சிக்குகளை அகற்றி, முடியை மென்மையாக்கி, சமாளிப்பதற்கு TRESemmé Keratin Smooth Hair Serum நிச்சயமாக வேலை செய்யும் என்பதை நாங்கள் நம்புகிறோம்.
அதிக வெப்ப சேதம் இல்லை

ஒரு ஹீட் ஸ்ட்ரெய்ட்னரை பின்கழுத்துப் பகுதியில் பயன்படுத்துவதற்கு முன்பு TRESemmé Keratin Smooth Heat Protection Sprayயை அடித்துக் கொண்டு, வெப்பத்தினால் விளையும் எந்தவொரு சேதத்தையும் தவிர்ப்பது மிகவும் புத்திசாலித்தனம். முடியிலுள்ள சிக்குகளை நீக்குவதும் மற்றும் ஸ்டைலிங் செய்வதை எளிதாக்குவது போன்ற செயல்களைத் தவிர, பாதுகாப்பு அடுக்குகளுடன் கூடிய மயிர்க்கால்களை பாதுக்காப்பது கெராடின் புரதம் என்பது மிகவும் அறியப்பட்டதாகும். வெப்பத்தை முடியின் அடுக்குகளில் ஊடுருவிச் சென்று, முடியை உடைக்க அனுமதிக்காது
நீடித்த பிரகாசம்

கெராடின் அடிப்படையிலான முடி தயாரிப்புகள் முடியை மென்மையாக்குவது மட்டுமல்லாமல், கூந்தலுக்கு நீடித்த மற்றும் பளபளப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. கெராடின் புரதம் முடி அமைப்பை மேம்படுத்துகிறது, மேலும், முடி உதிர்தலை தடுத்து, பாலீஷ் செய்யப்பட்டது போல் பளபளப்பானத் தோற்றத்தையும் அளிக்கும்.
Written by Kayal Thanigasalam on Nov 12, 2021
Author at BeBeautiful.