திருமண காலமும் மற்றும் பண்டிகை நாட்களும் நெருங்கி வந்து விட்டது.  சாத்தியமான எல்லா இடங்களிலிருந்தும் அறியக்கூடிய சிகை அலங்காரங்கள், மேக்கப் மற்றும் ஆடைகளை அணிந்து கொள்வதில் நாம் மிகவும் மும்முரமாக இருப்போம்.  ஆனால் இந்த கொண்டாட்டத் திளைப்பில் இந்தக் குளிர்காலம் நம் தலைமுடிக்கு எதிரி என்பதை உண்மையிலேயே நாம் மறந்துவிடுகிறோம். வறண்ட குளிர்காலம் கூந்தலிலிருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்துவிடுவதால், அவற்றில்  நீர்ச்சத்துக் குறைந்து சுருட்டையாகி விடும்.  எனவே, நீங்கள் நிகழ்ச்சிகளிலும் மற்றும் அவற்றில் பிரமாதமாகத் தோற்றமளிப்பதற்காக ஆடைகளை தேர்வு செய்வதிலும் நீங்கள் கவனம் செலுத்தும் அதே நேரத்தில், ​​ இந்த குளிர்காலத்தில் உங்கள் தலைமுடி சுருட்டையாகாமல் காப்பதற்கு  நீங்கள் செய்ய வேண்டிய ஐந்து சிறந்த ஹேர்கட்களை நாங்கள் தொகுத்துள்ளோம்.
 

 

01. மிட் லெங்க்த் ஷாக்

01. மிட் லெங்க்த் ஷாக்

பட உதவி : Pipir Hermanto

சமூக வலைதளங்களை நிரப்பிக் கொண்டிருக்கும் நீண்ட, அடர்த்தியான  மற்றும் சீரற்ற தலைமுடிகள் மற்றும் அவற்றின் பல்வேறு பரிமாணங்கள்,  ஆங்காங்கே கொஞ்சம் நேரம் பொங்கி வழியும் ஃபாக்ஸ் கட் ஷாக் போன்றவை வந்து போவதையும் நாங்கள் பார்த்திருக்கிறோம்! ஆனால் குளிர்காலத்திற்கு  இந்த மிட்-லெங்த் ஷாக் உங்களுக்கு மிகவும் சிறந்ததாக இருக்கும், குறிப்பாக அலை அலையான சுருட்டை முடி பெற்றிருப்பவர்களுக்கு இது மிகவும் பொருத்தமாக இருக்கும்.  ஏனெனில், இது முடியின் கூடுதல் எடையை குறைக்கிறது. மேலும்,  தானாகவே உங்கள் தலைமுடியின் அமைப்பை மேம்படுத்துகிறது.   அதுமட்டுமல்லாமல் அதன் இயற்கையான துள்ளல் மற்றும் பளபளப்பையும் திருப்பிப் பெற்றுத் தரும் அதேவேளையில்,  அதன் சுருட்டையை ஒரு கையளவு தூரத்தில் வைத்திருக்கும் செய்கிறது.

 

02. அண்டர்கட்

02. அண்டர்கட்

பட உதவி :  Latest Hairstyles

  இந்த பருவத்தில், நீங்கள் மிகவும் மும்முரமாக செயல்பட்டு, ஒரு நீண்ட கோண வடிவமைப்புடன் கூடிய அண்டர்கட் செய்ய நாங்கள் பரிந்துரைக்கிறோம். முன்புறத்தில் நேர்த்தியாகவும் செம்மையாகவும் தோன்றும் தலைமுடி, பின்புறத்திலிருந்து பார்க்கும் போது ஸ்பன்க்கி ட்விஸ்டுடன் காட்சியளிக்கிறது. இது உங்கள் முகத்திற்கு ஒரு கட்டமைப்பை  ஏற்படுத்துவதுடன், சுருட்டை முடியை படிய வைப்பதற்கேற்ற அடுக்குகளையும் இது உருவாக்குகிறது.

 

 

03. கர்ட்டைன் பேங்க்ஸ்

03. கர்ட்டைன் பேங்க்ஸ்

பட உதவிFab Mood  Inspiration

2021 ஆம் ஆண்டிற்கான மற்றொரு நம்பமுடியாத ஹேர்கட் எதுவென்றால் மென்மையான கர்ட்டைன் பேங்க்ஸ் ஆகும். அவை முகத்தை நன்றாக கட்டமைக்கூடிய எளிமையான  பிரஞ்சு பாணியாகும்.  ஒரு அடுக்காக தோற்றமளிக்கும் இந்த ஹேர்கட்டை செய்து கொள்வதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்.    இது உங்கள் தலையின் சம்மான அளவில் எடையை பகிர்ந்தளிப்பதனால்,  இது உங்கள் தலைமுடியை துள்ளலையும் தருவதுடன், சுருட்டையாகாமல் பாதுகாக்கிறது. 

 

04. பிக்ஸி வெட்டு

04. பிக்ஸி வெட்டு

பட உதவி : Hair Advisor

இந்த குளிர்காலத்தில் வலிமையான மற்றும் உறுதியான முடிவை எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் நீங்கள் இருந்தால், இதுதான் சிறந்ததாகும்!  இது போன்ற ஒரு நீண்ட பிக்சி கட் ஸ்டைல் மிகவும் கவர்ச்சியாகவும், பளபளப்பாகவும் இருப்பதோடு,  நீளமான உங்கள் கூந்தலின்  பெரும்பகுதியை வெட்டப் போகிறீர்கள் என்பதால், உங்கள் தலைமுடி சுருட்டையாவதை  ஆரம்பத்திலேயே தடுத்து விடும்.

 

 

05. கண்ணுக்குப் புலப்படாத அடுக்குகள்

05. கண்ணுக்குப் புலப்படாத அடுக்குகள்

பட உதவி :  Franckhair

கண்ணுக்குப் புலப்படாத அடுக்குகள் என்பது ஒரு தந்திரமாகும்.  பாரம்பரிய அடுக்குகளில் செய்வது போல் ட்ரை கட்டிங் செய்வதாகும்.  இவை அதிகப்படியான முடிகளின் அளவைக் குறைத்து, அவற்றிற்கு ஒரு ஒரு திருப்பத்துடனான  இயக்கத்தை அளிக்கிறது. ஸ்டைலிஸ்டுகள் முடியின் மேல் பகுதியின் கீழ் அடுக்குகளை வெட்டுகிறார்கள்.  ஆகவே, அவை கண்ணுக்கு 'கண்ணுக்குப் புலப்படுவதில்லை'.  இது உங்கள் தலைமுடி ஆரோக்கியமாகவும், சிக்கலில்லாமலும், இயற்கையாகவும் இருக்க உதவுகிறது.