ஒரு பக்கம் பொல்யூஷன், வியர்வை இன்னொரு பக்கம் வேதிப் பொருட்கள் படிவது என கூந்தலுக்கான சவால்கள் எக்கச்சக்கம். முடிவு என்ன என்று நமக்குத் தெரியுமே. பிசுபிசுப்பான, ஆயில் நிறைந்த கூந்தல். முடியை வெட்டிவிட்டால் என்ன என்று நினைக்க வைக்கும் சோதனை இது. ஆனால் அப்படி எந்த மோசமான முடிவையும் எடுக்க வேண்டாம். நிஜமாகவே நல்ல பலன் தரும் நல்ல ஹேர் கேர் பொருட்களுக்கு மாறினாலே போதுமானது. அதில் ஐந்தினை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்.

 

லவ் பியூட்டி - ப்ளானட் டீ ட்ரீ ஆயில் - வெட்டிவேர் க்ளாரிஃபையிங் ஷாம்பூ

லவ் பியூட்டி - ப்ளானட் டீ ட்ரீ ஆயில் - வெட்டிவேர் க்ளாரிஃபையிங் ஷாம்பூ

கூந்தலை அலசி முடித்த பிறகும் ஆயில் அதிகமாக இருக்கிறதா… அப்படி என்றால் ஷாம்பூவை மாற்றியாக வேண்டும். Love Beauty - Planet Tea Tree Oil - Vetiver Clarifying Shampoo அதற்கு நல்ல சாய்ஸ். அறநெறிகளுக்கு உட்பட்டு சேகரிக்கப்பட்ட ஆஸ்திரேலிய டீ ட்ரீ ஆயில், ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் கொண்ட இந்த ஷாம்பூ பல நற்பலன்கள் தரக்கூடியது. ஆயில் நிறைந்த கூந்தலுக்கு இதமான தோற்றம் தருவதுடன் தலை சருமத்தில் படிந்த பொடுகினை நீக்கவும் உதவும். இதில் பாராபென் இல்லை. சிலிகான் கிடையாது. எந்த சாயமும் சேர்க்கப்படவில்லை. இதனால் கூந்தலுக்கு மிகவும் பாதுகாப்பானது.

 

லவ் பியூட்டி - ப்ளானட் டீ ட்ரீ ஆயில் - வெட்டிவேர் க்ளாரிஃபையிங் கண்டிஷனர்

லவ் பியூட்டி - ப்ளானட் டீ ட்ரீ ஆயில் - வெட்டிவேர் க்ளாரிஃபையிங் கண்டிஷனர்

சரியான கண்டினர் தேர்ந்தெடுத்தால் மட்டும்தான் கூந்தல் ஹெல்தியாக தோற்றமளிக்கும். அதனால்தான் கண்டிஷனர் பயன்படுத்தி கூந்தலில் உளஅள பிசுபிசுப்பையும் கூடுதலான ஆயிலையும் நீக்கச் சொல்கிறோம். Love Beauty - Planet Tea Tree Oil - Vetiver Clarifying Conditioner பயன்படுத்திப் பாருங்கள். அது ஒரு சிறந்த சாய்ஸ். இந்த வேகன் தயாரிப்பு எவ்வித தீங்கும் விளைவிக்காமல் தயார் செய்யப்பட்டது. இயற்கையாக, அறநெறிகளுக்கு உட்பட்டு சேகரிக்கப்பட்ட டீ ட்ரீ ஆயில், தேங்காய் எண்ணெய், வெட்டிவேர் பயன்படுத்தப்பட்டுள்ளது. டல்லான கூந்தலுக்கு க்ளாரிட்டி தருவதுடன் இதன் அற்புதமான நறுமணமும் கிடைக்கும்.

 

ஹேர் மேக் பலப்படுத்துவதற்கான டவ் பியூட்டி ரிச்சுவல்

ஹேர் மேக் பலப்படுத்துவதற்கான டவ் பியூட்டி ரிச்சுவல்

கூந்தலில் உள்ள ஆயிலை நீக்கும் ஆர்வத்தில் அதற்கு பலம் கொடுப்பதை மறக்கக்கூடாது. அதனால்தான் Dove Healthy Ritual For Strengthening Hair Mask உங்கள் சிகையலங்காரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். ஒட் மில்க், ஹனி உட்பொருட்கள் இருப்பதால் ஹேர் மேஸ்க் சிறப்பாக வேலை செய்யும். ஹேர் டேமேஜ் சரியாகும், கூந்தல் பிசிறுகள் குறையும், ஸ்மூத்தான கூந்தல் கிடைக்கும். அது போக கூந்தல் பலமாகவும் இருக்கும்.

 

டிரெஸெம் பொட்டானிக் டீடாக்ட் அன்ட் ரெஸ்டோர் ஷாம்பூ

டிரெஸெம் பொட்டானிக் டீடாக்ட் அன்ட் ரெஸ்டோர் ஷாம்பூ

அழகுப் பொருட்கள் படிவதாலும் அதிகமான சீபம் உற்பத்தியும் சேர்ந்துகொண்டு ஆயில் நிறைந்த சருமத்தையும் ஆயில் பிரச்சனையையும் உண்டாக்கும். உங்கள் தலையின் சருமத்தில் டீடாக்ஸ் செய்வதற்கும் க்ளென்ஸ் செய்வதற்கும் TRESemmé Botanique Detox & Restore Shampoo அற்புதமாக இருக்கும். வேம்பு, ஜின்செங் (இந்திய அஸ்வகந்தா) ஆகியவை கொண்ட இந்த ஷாம்பூ கூந்தல் பொருட்கள் தலை சருமத்தில் படிந்திருப்பதை சுத்தம் செய்யும். இதில் பாராபென் இல்லை. சாயம் இல்லை. உங்கள் கூந்தல் இதை நேசிக்கும். வேறு என்ன.

 

டவ் ஃபிரெஷ் அன்ட் ஃளோரல் ஷாம்பூ

டவ் ஃபிரெஷ் அன்ட் ஃளோரல் ஷாம்பூ

மனிதர்களுக்கு கடவுள் தந்த வரம்தான் ட்ரை ஷாம்பூ. ஹேர் வாஷ் செய்யும் பேது கூந்தலில் உள்ள நேச்சரல் ஆயில் போய்விடுகிறது. ஆனால் ஆயில் அதிகமான கூந்தலையும் ரசிக்க முடியாது. அதற்கு உதவுவதுதான் ட்ரை ஷாம்பூக்கள். Dove Fresh & Floral Dry Shampoo ஒரு உதாரணம். கூடுதல் ஆயிலை உறிஞ்சி எடுக்க இந்த ட்ரை ஷாம்பூ உதவும். கூந்தலை சுத்தம் செய்வதுடன் அதன் வால்யூம் அதிகமாகத் தெரிவதற்கும் இது உடனடி பலன் கொடுக்கக்கூடியது. இந்த ஷாம்பூவை கொஞ்சம் எடுத்து தலை சருமத்தில் அப்ளை செய்தாலே மேஜிக் தெரியும்.