பொடுகு ஏற்படுத்தும் அரிப்பும் தோளில் அது படிவதும் நமக்கு தர்ம சங்கடம் ஏற்படுத்துபவை. ஆனால் வெறுமனே டான்ட்ரஃப் மட்டுமே பிரச்சனை அல்ல. அதற்கான தீர்வும் பிரச்சனைதான். எவ்வளவு நல்ல ப்ராடக்ட் பயன்படுத்தினாலும் கூந்தல் ட்ரையாகிவிடும், டல்லாகிவிடும், பொலிவை இழந்துவிடும். அதனால் சரியான சாய்ஸ் தேவை என்றால் தவறாமல் படியுங்கள். கூந்தல் ட்ரையாகாமலே டான்ட்ரஃப் நீக்குவதற்கான ஐந்து வழிகளை இங்கே பட்டியலிடுகிறோம். 


 

  • 01. ஜென்டிலான, அதே சமயத்தில் நல்ல பலன் தரும் டான்ட்ரஃப் ஷாம்பூ
  • 02. ஸ்கால்ப்பில் தேங்காய் எண்ணெய் மசாஜ்
  • 03. ஏ.சி.வி ரின்ஸ்
  • 04. டீ ட்ரீ ஆயில்
  • 05. ஸ்கால்ப் எக்ஸ்ஃபாலியேட்

 

 

 

01. ஜென்டிலான, அதே சமயத்தில் நல்ல பலன் தரும் டான்ட்ரஃப் ஷாம்பூ

01. ஜென்டிலான, அதே சமயத்தில் நல்ல பலன் தரும் டான்ட்ரஃப் ஷாம்பூ

ஓவராக வாஷ் செய்வது எப்போது நல்ல ஐடியா கி டையாது. கூந்தலில் உள்ள எசென்சஷியல் ஆயில் நீங்கிவிடும் என்பதோடு ஸ்கால்ப் ட்ரையாகிவிடும். கூந்தலும்கூட ட்ரையாகிவிடும்.dove Dandruff Clean & Fresh Shampoo போன்ற ஜென்டிலான, அதே சமயத்தில் எஃபெக்டிவான ஷாம்பூ பயன்படுத்துவது நல்லது. இது போன்ற ஷாம்பூவை வாரத்தில் 2-3 முறை பயன்படுத்த வேண்டும். இதன் இசட்.பி.டி.ஓ ஃபார்முலா டான்ட்ரஃப் நீக்குவது சிறந்தது என்று மருத்துவ ரீதியாக நிரூபணமாகியுள்ளது. அதன் மூல காரணத்தை அறிந்து தீர்க்கக்கூடியது இது. முதல் வாஷ் செய்த உடனேயே ஃப்ளேக்ஸ் குறைய ஆரம்பிக்கும். இதிலுள்ள மெந்தால் ஃபிரெஷ்ஷ தோற்றமும் கொடுக்கும். இதிலுள்ள மைக்ரோ மாய்ஸ்சுரைஸர் சீரம் கூந்தலை ஸ்மூத்தாக மாற்றும்.

 

02. ஸ்கால்ப்பில் தேங்காய் எண்ணெய் மசாஜ்

02. ஸ்கால்ப்பில் தேங்காய் எண்ணெய் மசாஜ்

நிஜம்தான். ஸ்கால்ப்பில் தேங்காய் எண்ணெய் மசாஜ் செய்தால் பிடிவாதமான ஃபிளெக்ஸ்கூட நீங்கும். ஸ்கால்ப்பில் நீர்ச் சத்து இல்லாமல் போவது டான்ட்ரஃப் மோசமாவதற்கான காரணங்களில் ஒன்று. அதனால்தான் கூந்தலுக்கு நீர்ச் சத்து கொடுக்கும் பொருட்களை பயன்படுத்த வேண்டும். அது போக நுண் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் சக்தியும் தேங்காய் எண்ணெய்யில் உள்ளது. இது டான்ட்ரஃப் பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும்.

 

03. ஏ.சி.வி ரின்ஸ்

03. ஏ.சி.வி ரின்ஸ்

பலவித கூந்தல் பிரச்சனைகளுக்கு ஆப்பிள் சிடர் வினிகர் நல்ல தீர்வு. டான்ட்ரஃப் பிரச்சனையைத் தீர்க்கவும் உதவும். ஆப்பிள் சிடர் வினிகரின் அமிலத் தன்மை ஸ்கால்ப்பின் பி.எச் அளவை சமநிலைப்படுத்த உதவும். இதனால் டான்ட்ரஃப் குறையும். ஸ்கால்ப்பில் உள்ள இறந்த செல்களை நீக்கவும் இது பலன் தரும். அதனால் வாரம் ஒரு முறை ஏ.சி.வி ரின்ஸ் செய்ய வேண்டும்.

 

04. டீ ட்ரீ ஆயில்

04. டீ ட்ரீ ஆயில்

சக்திமிக்க டீ ட்ரீ ஆயில் சேர்ப்பது டான்டர்ஃப் தீர்வுக்கு நல்லது. டீ ட்ரீ ஆயிலில் நுண் கிருமிகளுக்கு எதிராகப் போராடும் ஆற்றல் உள்ளது. வீக்கம் ஏற்படுவதையும் தடுக்கும். ஆனால் அரிப்பு ஏற்படுத்தும் என்பதால் டீ ட்ரீ ஆயிலை நேரடியாக அப்ளை செய்யக்கூடாது. அதை டைல்யூட் செய்து, ஷாம்பூ அல்லது தேங்காய் எண்ணெய்யில் சேர்த்து பயன்படுத்தலாம்.

 

05. ஸ்கால்ப் எக்ஸ்ஃபாலியேட்

05. ஸ்கால்ப் எக்ஸ்ஃபாலியேட்

இறந்த செல்கள் சேர்ந்துகொள்வதும் டான்ட்ரஃப் பிரச்சனைக்குக் காரணமாக இறுக்கலாம். அதனால்தான் எக்ஸ்ஃபாலியேட் செய்வது முக்கியம் என கூறுகிறோம். அடிக்கடி ஸ்கிரப் செய்து இறந்த செல்களை நீக்க வேண்டும். ஆனால் ஸ்கால்ப்பின் மீது கடுமையாக ஸ்கிரப் செய்யக்கூடாது. மிகவும் ஜென்டிலான, அதே நேரம் எஃபெக்டிவான ஸ்கிரப் சூஸ் செய்ய வேண்டும்.