உங்கள் கூந்தலை முடிந்து கொள்ள முடியவில்லையா ! உங்கள் கூந்தலிலுள்ள சிக்கலை இந்த ஹேக்குகளின் மூலம் நீக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

Written by Kayal ThanigasalamJul 27, 2022
உங்கள் கூந்தலை முடிந்து கொள்ள முடியவில்லையா ! உங்கள் கூந்தலிலுள்ள சிக்கலை இந்த ஹேக்குகளின் மூலம் நீக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

இப்போது, ​​நீங்கள் உங்கள் கூந்தலுக்குள் ஒரு ப்ரஷ்ஷை வைக்க வேண்டிய அவசியமில்லை, மற்றும் இனிமேல் சிக்கலை நீக்குவதற்கு ஒரு சீப்புடன் போராட வேண்டிய அவசியமுமில்லை. அது சரிதான், அதன் இந்த செயல்படுத்துவதற்கு எவ்வளவு நேரம் தேவைப்படும்? உங்கள் மயிரிழைகள் உங்கள் காலடியையே சுற்றிசுற்றி வருவது எப்போதும் ஒரு நல்ல சூழ்நிலை ஆகாது. முடி உடைதல், வலி ​​மற்றும் முடி உதிர்வதைத் தவிர்க்க, இந்த ஹேக்குகளை நீங்கள் அதிவிரைவில் முயற்சிக்க செய்து பார்க்க வேண்டும்!

 

01. அகலமான பற்களையுடைய சீப்பைப் பயன்படுத்தவும்

05. தாவணி அணியுங்கள்

அகலமான பற்களையுடைய சீப்பு உங்கள் மயிரிழைகளை இழுக்காமல் உங்கள் தலைமுடியிலுள்ள சிக்கலை நீக்குகிறது. எக்காரணத்தைக் கொண்டு ப்ரஷ்ஷை பயன்படுத்துவதை தவிருங்கள். குறிப்பாக அடர்ந்த, நீண்ட முடியுள்ளவர்கள் பயன்படுத்தவே கூடாது. அகலமான சீப்பிலுள்ள இரண்டு பற்களிடையிலுள்ள இடைவெளியில் தலைமுடி உட்செல்ல அனுமதிப்பதுடன். மிக எளிதாக சிக்கல்களை நீக்கி விடுகிறது. உங்களுக்கு அந்த மாதிரிப் பிரச்னைகள் இருந்தால், ​​உங்கள் தலைமுடியில் எப்போதும் நிலையாக இருக்கக் கூடிய சிக்கல்களை குறைக்க இந்த மாதிரியான மர சீப்பைப் பயன்படுத்தலாம்.

 

02. உங்கள் தலைமுடியை பின்னல் போட்டுக் கொள்ளவும்

05. தாவணி அணியுங்கள்

உங்கள் தலைமுடியில் சிக்கல் ஏற்படாமல் தவிர்க்க, நீங்கள் தூங்குவதற்கு முன், உங்கள் தலைமுடியை பின்னல் போட்டுக் கொள்ளவும். உங்கள் தலைமுடியை பின்னல் ஜடைகளாக போட்டுக் கொண்டிருக்கும்போது முறுக்கப்பட்டால், நீங்கள் இரவு முழுவதும் எப்படி திரும்பிப் படுத்தாலும், அல்லது முடியை தூக்கி விசினாலும் அது சிக்கலை ஏற்படுத்தாது. மேலும் அவை சிக்கலைக் குறைப்பதால், நீங்கள் கூந்தலை சீவும்போது, முடி அதிகமாக உடையாது. உங்கள் தலைமுடியின் பின்னல் மிகவும் இறுக்கமாக இருக்கும்போது நீங்கள் கூந்தலை இழுக்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

 

03. உங்கள் தலைமுடியைகண்டிஷன் செய்யவும்

05. தாவணி அணியுங்கள்

நீங்கள் தலைக்கு குளிப்பதற்கு முன், தலையிலுள்ள வெப்பத்தை சிறிது குறைக்கவும். அதிக சூடான வெந்நீரால் நீங்கள் தலைக்கு குளிக்கும்போது, அந்த வெப்பம் உங்கள் தலைமுடியிலுள்ள ஈரப்பதத்தை வெளியேற்றி விடும். உங்களில் முடிகளில் வெடிப்புகளைத் ஏற்படுத்தும். இதனால் உங்கள் முடிகள் வறட்சியடைந்து மற்றும் முடிகளில் சடையும் ஏற்படுகிறது. கூந்தலின் சிக்கலை நீக்கக் கூடிய TRESemmé Keratin Smooth With Argan Oil Conditioner போன்ற கண்டிஷனர்களைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். இது உங்கள் தலைமுடியை சிக்கலை நீக்கி, மிருதுவாக்குகிறது. சிக்கலை நீக்கி, மென்மையாக்கும் பண்புகளையுடைய Dove Intense Repair Conditioner கூட, அவற்றையும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாகவும் உள்ளது. நீங்கள் ஆன்டி-ஃபிரிஸ் கண்டிஷனரைத் தேடுகிறீர்களானால், அதற்கு Love Beauty - Planet Natural Argan Oil - Lavender No Frizz Conditioner ஐ வழக்கமாக பயன்படுத்தக் கூடிய ஒன்றாகும்.

 

04. உங்கள் தலைமுடியை கவனமாக ஸ்டைல் ​​செய்யுங்கள்

05. தாவணி அணியுங்கள்

ஹீட்-ஸ்டைலிங் கருவிகளை பயன்படுத்துவதை தவிர்ப்பதற்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம். ஆனால் நீங்கள் உங்கள் தலைமுடியை ஹேர் ட்ரையரினால் உலர்த்துகிறீர்கள் என்றால், நீங்கள் சரியான முறையில் அதைப் பயன்படுத்துகிறீர்களா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ட்ரையரின் முனையை கீழ்நோக்கி பிடித்துக் கொண்டு, உங்கள் தலைமுடிக்கு இணையாக இயக்கவும். ட்ரையரை உங்கள் மயிரிழைகளுக்கு செங்குத்தாக பிடித்து தலைமுடியை உலர்த்தும் போது, அவை உதிர்ந்து விடும் வறண்டு விடும். மேலும் சேதமடைந்த முடியில் விரைவாக சிக்கல் ஏற்படும்.

 

05. தாவணி அணியுங்கள்

05. தாவணி அணியுங்கள்

நீங்கள் வெளியில் செல்லும் போது, ​​உங்கள் தலைமுடியை ஒரு தாவணி அல்லது தொப்பியால் நன்றாக மூடிக் கொண்டுச் செல்லவும். குறிப்பாக குளிர்காலத்தில் இடைவிடாத காற்று வீசும் போது, ​​உங்கள் தலைமுடி சிக்கலடைவதற்கு வாய்ப்புள்ளது.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
656 views

Shop This Story

Looking for something else