கேள்வியே கழுவ வேண்டுமா, கழுவக் கூடாதா என்பதைப் பற்றி தான்! இல்லை, நாங்கள் ஷேக்ஸ்பியரின் மேற்கோளை இங்கேக் குறிப்பிடவில்லை. ஆனால், பிசுபிசுப்பான் தலைமுடியையுடைய ஒவ்வொரு பெண்ணும் இத்தகைய சிக்கலான நிலையை தினமும் எதிர்கொள்கிறார்கள். இந்த சூழ்நிலையில் உங்களுடைய உள்மனது பிசுபிசுப்பாக இருக்கும் உச்சந்தலையை முதலில் கழுவ வேண்டும் என்று சொல்லும். ஆனால் அடிக்கடி உங்கள் தலைமுடியை கழுவுவது உங்களுக்கும் உங்கள் தலைமுடிக்குமே நல்லதல்ல என்பதை நீங்கள் நன்றாகவே அறிவீர்கள். எனவே, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? சரி, பிசுபிசுப்பாக இருக்கும் உங்கள் தலைமுடிக்கு விடைகொடுத்து அனுப்ப எங்களிடம் சில குறிப்புகள் உள்ளன.

 

01. சிலிக்கன் இல்லாத ஷாம்புவால் தலைமுடியைக் கழுவவும்

01. சிலிக்கன் இல்லாத ஷாம்புவால் தலைமுடியைக் கழுவவும்

உங்கள் தலைமுடியை மென்மையாக்கவும் பளபளப்பாக்கவும் செய்வதற்கு, உங்கள் ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களில் சிலிக்கன்கள் உள்ளது. இருப்பினும், இந்த சிலிக்கன்களினால் தலைமுடியை அலசுவது மிகக் கடினமாக இருப்பதினால், உங்கள் உச்சந்தலையில் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக உங்கள் தலைமுடியில் பிசுபிசுப்பையும் மற்றும் அழுக்கையும் ஏற்படுத்தும். லவ் பியூட்டி & பிளானட் டீ ட்ரீ ஆயில் & வெட்டிவர் தெளிவுபடுத்தும் ஷாம்பு போன்ற சிலிக்கன் இல்லாத ஷாம்புவுக்கு பயன்படுத்தும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம். தாவர அடிப்படையிலான கிளென்ஸர், நெறிமுறை ஆதாரங்கள் மற்றும் ஆஸ்திரேலிய தேயிலை மர எண்ணெய் போன்ற இயற்கை பொருட்களால் இந்த ஷாம்பு தயாரிக்கப்படுகிறது. தலைமுடிக்குத் தேவையான அத்தியாவசியமான் எண்ணெய் சத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், உச்சந்தலையில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை மிக மென்மையாக குணப்படுத்தி, உச்சந்தலையை மிருதுவாக வைத்திருக்கச் செய்கிறது.இந்த ஷாம்பு எப்போதும் உங்களிடமிருந்தால், உங்களின் பிசுபிசுப்பான தலைமுடிக்கு விடைகொடுக்க முடியும். Love Beauty & Planet Tea Tree Oil & Vetiver Clarifying Shampoo

 

02. கண்டிஷனரை வேர்களில் பூச வேண்டாம்

02. கண்டிஷனரை வேர்களில் பூச வேண்டாம்

கண்டிஷனர் என்றால் என்ன என்று அறிந்திருக்கும் நம் அனைவரில் அதை எப்படி முறையாகப் பயன்படுத்த வேண்டும் என்பது பற்றி எத்தனை பேர் அறிவோம்? வருத்தமென்னவென்றால், நம்மில் பலருக்கு அதைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. உச்சந்தலையில் கண்டிஷனரைப் பயன்படுத்துவதால், அவை வேர்களில் எண்ணெய்ப் பசையை அதிகப்படியாக உற்பத்தி செய்து, உங்கள் தலைமுடியை வலிமையற்றதாகவும், பிசுபிசுப்பாகவும் மாற்றிவிடும். ஆகவே, உங்கள் தலைமுடிக்கு நீரேற்றம் தேவைப்படுகிறது, எனவே கோட்பாட்டைவிட நடைமுறையின் அடிப்படையில், எப்போதுமே உங்கள் தலைமுடியின் நடுப்பகுதி முதல் அடிமுடி வரை கண்டிஷனரைப் பயன்படுத்தவும்.

 

03. ட்ரை ஷாம்புவை முயற்சிக்கவும்

03. ட்ரை ஷாம்புவை முயற்சிக்கவும்

உங்கள் தலைமுடி பிசுபிசுப்படைந்தவுடனேயே, அதை நன்றாக அலச வேண்டும் என்ற உணர்வு உங்களுக்கு ஏற்படும். அப்போது ட்ரை ஷாம்புவினை பயன்படுத்தும்படி நாங்கள் பரிந்துரைக்கிறோம். உங்கள் உச்சந்தலையில் உள்ள அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி, பிசுபிசுப்பிலிருந்து உங்கள் தலைமுடியை உடனடியாக மீட்டெடுக்க உதவுவதற்கு, உங்களுடைய தலைமுடி பராமரிப்பின் அன்றாட வழக்கத்தில் Dove Volume and Fullness Dry Shampoo வை பயன்படுத்தவும். . மேலும், இது உங்கள் தலைமுடிக்கு டன் அளவு அடர்த்தியையும் சேர்க்கும்.. அப்புறம் அதை விரும்பாமல் இருக்க முடியுமா? சுமார் 8-12 அங்குல இடைவெளியிலிருந்து நேரடியாக தலைமுடியின் வேர்களில் இந்த ஷாம்புவைத் தெளிக்கவும். உங்கள் விரல்களால் ஷாம்புவை மெதுவாக மசாஜ் செய்த, பின்னர் உங்கள் தலைமுடியை சீப்பால் சீவிக் கொள்ளுங்கள். இப்போது நீங்கள் தாராளமாக வெளியில் செல்லலாம்.

 

04. உங்கள் தலைமுடியை காற்றில் உலர வைக்கவும்

04. உங்கள் தலைமுடியை காற்றில் உலர வைக்கவும்

ட்ரையர்கள் மற்றும் ஸ்ட்ரைட்னர்ஸ் போன்ற உங்களின் சிறந்த ஸ்டைலிங் சாதனங்கள், நீங்கள் கற்பனை செய்யாத அளவுக்கு விரைவாக உங்கள் தலைமுடியில் அதிகப்படியான எண்ணெய்ப் பசையை உற்பத்தி செய்யும். எனவே, நீங்கள் பிசுபிசுப்பான முடியை தவிர்க்க வேண்டுமென்று நினைத்தால், ஸ்டைலிங் சாதனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். முடிந்தவரை உங்கள் தலைமுடியை இயற்கைக் காற்றில் உலர்த்துங்கள். மைக்ரோஃபைபர் டவலினால் உங்கள் தலைமுடியிலிலுள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்தெடுத்தப் பின் உங்கள் தலைமுடியை உலர வைக்கவும்.

 

05. உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்துவதற்கு ஹேர் ஸ்கரப் செய்யவும்.

05. உச்சந்தலையில் ஏற்படும் பாதிப்பை குணப்படுத்துவதற்கு ஹேர் ஸ்கரப் செய்யவும்.

உங்கள் உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, உங்கள் உச்சந்தலையிலுள்ள இறந்த தலைமுடியையும் அகற்ற வேண்டும். முதலில் உங்களுடைய தலைமுடியிலுள்ள பிசுபிசுப்பான தோற்றத்திற்கு காரணமான அந்த பாதிப்பை குணப்படுத்துகிறது. வீட்டிலிருந்தபடியே, நீங்கள் செய்யக் கூடிய ஹேர் ஸ்க்ரப் செய்யலாம். முதலில் இரண்டு தேக்கரண்டி கடல் உப்புடன், இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை உங்கள் உச்சந்தலையில் தடவி, உங்கள் உச்சந்தலையிலுள்ள இறந்த தலைமுடிகளை உங்கள் விரல்களால் மென்மையாக மசாஜ் செய்து அகற்றுங்கள். பின், வெதுவெதுப்பான தண்ணீரினால் தலைமுடியை அலசவும்.. இப்போது தலைமுடிகளில் பிசுபிசுப்பு வராமல் தடை ஏற்படுத்தியாகவிட்டது.