எங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பெறுவது வறண்ட கூந்தல் பிரச்னைதான். வறண்ட கூந்தல் பிரச்னைகளை தவிர்ப்பதற்கு நாம் எவ்வளவுதான் கடினமாக முயற்சி செய்தாலும், சில சமயங்களில் அவற்றிற்கு புத்துயிர் அளிப்பது சாத்தியமில்லாமல் போகலாம். மேலும் அவை மிகவும் அழகாக தோன்றாவிட்டாலும், அடிமுடியில் பிளவுகள், நிரந்தர முடி சேதம், நீர்ச்சத்துக் குறைபாடு போன்ற யாரும் விரும்பாத வேறுபல பிரச்னைகளுக்கு வழிவகுக்கும்
கூந்தலுக்கு வறட்சி ஏற்படுவதை தடுத்து, பாதுகாக்கும் தந்திரம் என்ன? மாஸ்ச்யரைசரை அகற்றும் பொருட்களைத் தவிர்த்து, அதற்குப் பதிலாக, உங்கள் கூந்தலுக்கு மாஸ்ச்யரைசிங் செய்யக்கூடிய ஒரு தெய்வீகத்தன்மைக் கொண்ட பிரத்யேகமான மூலப்பொருளின் மீது நீங்கள் கவனம் செலுத்துங்கள்.
உங்களின் கூந்தலை வறட்சியிலிருந்து மிக விரைவாக மீட்க வேண்டுமானால், நாங்கள் கீழே பட்டியலிட்டுள்ள 5 மெகா-ஹைட்ரேட்டிங் மூலப்பொருட்களை குறிப்பெடுத்துக் கொள்ளுங்கள், மேலும் இதன் மூலம் உங்கள் கூந்தலின் நீர்ச்சத்துக் குறைபாட்டிற்கு தீர்வு காணுங்கள்.
01. முறுமுறு பட்டர்

கூந்தலுக்கு அதிகளவு ஹைட்ரேட்டிங் அளிக்கக் கூடிய ஷீ பட்டர் விட முடிகளுக்கு அதிகளவு பலன்களைத் தரக்கூடியது இந்த முறுமுறு வெண்ணெய் ஆகும். இதில் அடங்கியுள்ள தரமான லாரிக் அமிலம் என்ற மூலப்பொருள் முடியின் அடிவேருக்குள் நன்றாக ஊடுருவிச் சென்று, வறட்சியையும், சுருட்டையையும் குறைக்கிறது. இது முடியின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் செயலை திறம்பட செய்வதன் விளைவாக முடிக்கு மென்மையும், அதிக நீர்ச்சத்தும் கிடைக்கப் பெறுகிறது.
பீபி பிக்ஸ் Love Beauty & Planet Natural Murumuru Butter & Rose Shine Shampoo & Conditioner Combo
02. ஆர்கன் ஆயில்

இயற்கையாகவே முடியின் நெகிழ்ச்சித்தன்மையை அதிகரிக்கிறது மற்றும் முடிக்கு பொலிவையும் உயிர்ப்பையும் மீட்டெடுக்க உதவும் இந்த ஆர்கான் ஆயிலில் முடிக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடெண்ட்கள் நிறைந்துள்ளன. ஏனெனில் ஆர்கான் ஆயிலில் வைட்டமின் ஈ சத்து பெரும் பங்காற்றுவதே இதற்கு முக்கிய காரணமாகும். இது முடியின் நுண்ணறைகளை சேதமடையாமல் பாதுகாப்பாக வைப்பதோடு, ஃப்ரீ ரேடிக்கல்களினால் ஏற்படும் சேதத்தை குறைக்கும் . அதே நேரத்தில் அதில் உள்ள நல்லக் கொழுப்பு ஆஸிட்கள் நீரேற்றத்தை அதிகரிக்க உதவுகிறது
. பீபி பிக்ஸ் : Tresemme Keratin Smooth With Argan Oil Shampoo
03. தேங்காய் தண்ணீர்

தேங்காய்த் தண்ணீர் வறண்டுவிட்டதாக நீங்கள் நினைத்தால் அது உங்கள் தாகத்தைத் தணிக்காது; உங்கள் தலைமுடியில் ஈரப்பதம் குறைவாக இருந்தால், அது உங்கள் தலைமுடியை ஹைட்ரேட் செய்யும். வறண்ட முடிக்கு மாஸ்ச்யரைஸ் செய்யும் கொழுப்பு அமிலமான லாரிக் ஆஸிட் இதில் அடங்கியுள்ளதால், உங்கள் மயிரிழைகளை பாதிக்கும் அனைத்து நீர்ச்சத்துக் குறைபாடுகளையும் நீக்க உதவுவதோடு. அவற்றை ஹைட்ரேட் செய்யவும் உதவுகிறது. போனஸ் சேர்க்கப்பட்டதா? இது உங்கள் தலைமுடியை பராமரிக்க உதவுகின்ற அதே வேளையில, அவற்றை சுருட்டை, அரிப்பு மற்றும் அடிமுடிப் பிளவு ஆகிய பாதிப்புகளிலிருந்தும் பாதுகாக்க உதவுகிறது.
பீபி பிக்ஸ் : Love Beauty & Planet Natural Coconut Water & Mimosa Volume Shampoo & Conditioner Combo
04. கற்றாழை

கற்றாழையிலுள்ள ஊட்டமளிக்கும் பண்புகளுக்கு நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம். வறண்ட முடியை குணப்படுத்துவதில் கற்றாழை ஒரு முழு நட்சத்திரமாகத் திகழ்கிறது கற்றாழை ஃபோலிக் ஆஸிட் மற்றும் வைட்டமின் சி, ஈ மற்றும் பி-12 ஆகியவற்றின் ஆரோக்கியமான கலவையாகும். இந்த மூலப்பொருள் வறண்டக் கூந்தலுக்கு ஊட்டமளித்து, ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது மற்றும் முடிக்கு வலிமையையும் சேர்க்கிறது, அதே நேரத்தில் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
பீபி பிக்ஸ் : sunsilk Coconut Water & Aloe Vera Volume Hair Shampoo
05. தேன்

மென்மையாக்குதல் மற்றும் மாஸ்ச்யரைஸ் போன்ற குணங்கள் தேனில் அடங்கியுள்ளது. இது முடியை மாஸ்ச்யரைஸ் செய்வதோடு மட்டுமல்லாமல், ஈரப்பதத்தைத் தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது, வறண்ட கூந்தலுக்கு நீர்ச்சத்தை அளிப்பதற்கு தேன் ஒரு மிகச் சிறந்த மூலப்பொருளாகும். இது உங்கள் கூந்தலுக்கு ஒரு நறுணமிக்க பளபளப்பைக் அளிப்பதோடு, வறண்ட மயிரிழைகளுக்கு ஈரப்பதத்தையும் சேர்க்கிறது, அதன் விளைவாக கூந்தலின் இயற்கைப் பொலிவை புதுப்பிப்பது மட்டுமல்லாமல், முடியை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதோடு அதற்கு அனைத்து நன்மைகளையும் அளிக்கிறது.
பீபி பிக்ஸ் : Dove Healthy Ritual For Strengthening Hair Mask
Written by Kayal Thanigasalam on Nov 28, 2021
Author at BeBeautiful.