வயதாக ஆக கூந்தலில் சில வெள்ளை முடிகள் தெரிவது சகஜம்தான். ஆனால் 20, 30 வயதிலேயே தெரிகிறது என்றால் அது கவலைக்குரிய விஷயம்தான். சீக்கிரமே ஏற்படும் இளநரை இப்போதெல்லாம் சகஜமாகிவிட்டது. வெளிப்புற சூழல்களின் பாதிப்பால் எப்படி உங்கள் ஸ்கின் பாதிக்கப்படுகிறதோ அப்படித்தான் உங்கள் கூந்தலும் பாதிக்கப்படுகிறது.
சொல்லப் போனால் உங்களின் தினசரி லைஃப்ஸ்டைல்கூட அதற்குக் காரணமாக இருக்கலாம். அப்படி அன்றாடம் நீங்கள் செய்யும் எந்த மாதிரியான காரியங்கள் இள நரை சீக்கிரமாக ஏற்பட காரணமாகிறது. அதை சரி செய்வது எப்படி. இதோ விளக்குகிறோம்.
அதிக வெயில் படுவது

சூரியனிலிருந்து வெளிப்படும் யு.வி.ஏ, யு.வி.பி கதிர்கள் சருமத்திற்கு மட்டுமல்ல, கூந்தலுக்கு பாதிப்பு உண்டாக்கும். அதனால் அதிக நேரம் வெயில் பட நேர்ந்தால் கூந்தல் பாதிக்கப்படும். வறண்டு, உடைகிற கூந்தலுக்கு இதுவும் காரணமாக இருக்கலாம். ஸ்கார்ஃப் அணிவது அல்லது குடை யூஸ் செய்வது இதற்கு நல்ல தீர்வு. ஹீட் பாதுகாப்பு பொருட்கள் பயன்படுத்துவதும் பலன் தரும்.
மன அழுத்தம்

எல்லோருக்கும் ஏதாவது ஒரு நேரத்தில் மன அழுத்தம் ஏற்படாமல் இருக்காது. ஆனால் தொடர்ச்சியான மன அழுத்தம் பாதிப்பு ஏற்படுத்தும். தூக்கமின்மை, பதற்றம், பசியின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகும். இதெல்லாம் கூந்தலை கடுமையாக பாதிக்கும். இதனால் ஒரு சிலருக்கு முடி கொட்டும், வேறு சிலருக்கு இளநரை ஏற்படும். மன அழுத்தத்தால் வெள்ளை முடி ஏற்படுகிறதா… தியானம் போன்ற மனதுக்கு இதமளிக்கும் விஷயங்களை செய்யலாம்.
சிகை அலங்கார பொருட்களின் கெமிக்கல்

சிகை அலங்கார பொருட்களில் உள்ள சல்ஃபேட் கூந்தல் சேதமடையவும் வறண்டு போகவும் காரணமாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா. தலையையும் கூந்தலையும் சுத்தம் செய்ய சல்ஃபேட் உதவும். ஆனால் அது கூந்தலை சொரசொரப்பாக்கும், வறண்டு போக வைக்கும், இளநரை ஏற்பட காரணமாக மாறும். சல்ஃபேட் இல்லாத Tresemme Pro Protect Sulphate Free Shampoo and Conditioner போன்ற பொருட்களை பயன்படுத்தும் போது கூந்தலையும் தலையையும் மிக மென்மையாக சுத்தம் செய்யலாம். இதனால் நீர்ச் சத்து குறையாது, கூந்தல் நீண்ட நேரம் ஜொலிக்கும்.
விட்டமின் குறைபாடு

உங்கள் உணவில் தேவையான விட்டமினும் ஊட்டச் சத்துக்களும் இல்லாவிட்டால் அது உங்கள் கூந்தலின் ஆரோக்கியத்தை பாதிக்கும். ஃபாலிக் அமிலம், பயோடின் குறைபாடு ஏற்படுவதற்கும் இளநரை ஏற்படுவதற்கும் தொடர்பு உள்ளது. பால் பொருட்கள் சாப்பிடுவது, அசைவம்-முட்டை உண்பது மூலம் இந்த சத்துக் குறைவை கட்டுப்படுத்தலாம்.
புகைப்பிடித்தல்

“30 வயதுக்கு முன்பு வெள்ளை முடி ஏற்படுவதற்கும் புகைப்பிடிப்பதற்கும் தொடர்பு உள்ளது” என்று ஒரு ஆய்வு கூறுகிறது. புகைப்பிடிப்பது நுரையீரலுக்கும் இதயத்திற்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படுத்தும் என்பது நமக்குத் தெரியும். ஆனால் அது உங்கள் சருமத்தையும் கூந்தலையும் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா. சிகரெட்டில் உள்ள நச்சுப் பொருட்கள் முடியின் வேர்களை சேதப்படுத்துவதால் இளநரை ஏற்படுவதாக தெரிய வருகிறது. சிகரெட் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்பதை சொல்ல வேண்டுமா என்ன...
Written by Kayal Thanigasalam on Dec 22, 2020
Author at BeBeautiful.