ஏப்ரல் மாதத்தின் 4 ம் தேதி வைட்டமின் சி தினமாக கொண்டாடப்படுவது உங்களுக்கு தெரியுமா? இந்த அருமையான ஊட்டச்சததை கொண்டுள்ள கூந்தல் நலன் காக்கும் பொருட்கள் பற்றி அறிந்து கொள்ள இது பொருத்தமான நேரம் என கருதுகிறோம். ஆரோக்கியமான, வலுவான கூந்தலுக்கான உங்களை கனவை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் வைட்டமின் சி கொண்டுள்ளது. இது மயிர்கால்களை வலுவாக்கி, தலைமுடி வளர்ச்சியை ஊக்குவித்து, எண்ணெய்பசையை உச்சந்தலையில் இருந்து அகற்றி, பொடுகையும் நீக்குகிறது. ஆனால் வைட்டனின் சி பயனை பெறுவது எப்படி? இதற்கான பதில் எலுமிச்சையில் இருக்கிறது. ஆம், பொடுகை அகற்றி, உங்கள் கூந்தலுக்கு வைட்டமின் சி பலன்களை அளிக்க எலுமிச்சையே போதுமானது.  

தலைமுடியில் இருந்து பொடுகை நீக்கி, பொலிவு மிக்க ஆரோக்கியமான கூந்தலுக்காக, வைட்டமின் சி ஆற்றலை பெற எலுமிச்சையை பயன்படுத்திக்கொள்வதற்கான வழிகள் இதோ:

 

உங்கள் கூந்தலை எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும்.

உங்கள் கூந்தலை எலுமிச்சை, தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யவும்.

ஒரு எலுமிச்சை பழம் 83 மிகி வைட்டமின் சி கொண்டுள்ளது என்பதால் சுத்தமான உச்சந்தலை மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கான மூலப்பொருளாக விளங்குகிறது. மறு பக்கத்தில் தேங்காய் எண்ணெய் உச்சந்தலையில் நீர்த்தன்மை அளித்து, பிளேகிங் பாதிப்பை குறைக்கிறது. கூந்தலில்ன் ஆரோக்கியம் மற்றும் இயற்கை பொலிவையும் காக்கிறது. வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெயில் 2 ஸ்பூன் எல்மிச்சை சாற்றை கலக்கவும். இந்த கலவை கொண்டு கூந்தலை 10 நிமிடம் மசாஜ் செய்து 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்னர் பொடுகு எதிர்ப்பு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.

 

எலுமிச்சை ஹேர் ஸ்கிரப்பை முயற்சிக்கவும்

எலுமிச்சை ஹேர் ஸ்கிரப்பை முயற்சிக்கவும்

உங்களுக்கு எண்ணெய் பசை மிக்க மற்றும் பொடுகு கொண்ட உச்சந்தலை எனில் வாரம் ஒரு முறை உச்சந்தலையை எக்ஸ்போலியேட் செய்வது அவசியம் ஆகும். இது எண்ணெய் பசை, பொடுகு ஆகியவற்றை அகற்றி உச்சந்தலையை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. இரண்டு ஸ்பூன் கடல் உப்பு, பாதி எலுமிச்சையில் இருந்து எடுத்த சாறு மற்றும் 23 ஸ்பூன் ஆலிவ் ஆயில் கொண்டு ஹேர் ஸ்கிரப் தயார் செய்யவும். எலுமிச்சை மற்றும் கடல் உப்பு, பொடுகை எதிர்க்க வல்லவை. ஆலிவ் ஆயில் உச்சந்தலையின் இயற்கையான எண்ணெய் பசையை தக்க வைப்பவை. 8 முதல் 10 நிமிடம் வரை மென்மையான உச்சந்தலையை ஸ்கிரப் செய்து பின்னர் ஷாம்பு கொண்டு குளிக்கவும். பொடுகு இல்லாத கூந்தல் பெற வாரந்தோறும் இவ்வாறு செய்யவும்.  

 

எலுமிச்சை சாறு , தண்ணீர் கொண்டு ரின்ஸ் செய்யவும்

எலுமிச்சை சாறு , தண்ணீர் கொண்டு ரின்ஸ் செய்யவும்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம், உச்சந்தலையில் பி.எச் (pH) சமனை காத்து, கூடுதல் எண்ணெய் பசையை அகற்றுகிறது. பொடுகை அகற்ற, பிரிட்ஜில் இருந்து எலுமிச்சையை எடுத்து, அதிலிருந்து சாறு பிழிந்து கொள்ளவும். இந்த சாறு கொண்டு 2 நிமிடம் உச்சந்தலையை மசாஜ் செய்து கொள்ளவும். ஒரு கோப்பை தண்ணீரில் சில சொட்டு எலுமிச்சை சாறு விட்டு கலந்து, இந்த கலவையை உங்கள் கூந்தலுக்குள் தடவிக்கொள்ளவும். உச்சந்தலையில் இருந்து கூடுதல் எண்ணெய் பசையை நீக்கி, பொடுகை அகற்றவும் இது உதவும். பின்னர் மிதமான ஷாம்பு பயன்படுத்தவும்.