நம்முடைய பாட்டிகள், அம்மாக்கள் மற்றும் சிகை அலங்கார நிபுணர்கள் என எல்லோருமே, தலைமுடியின் பிளவுபட்ட நுனி பிரச்சனையை சரி செய்ய சிறந்த வழி அவற்றை கத்திரித்து விடுவது தான் என்று தொடர்ந்து சொல்லி வருவதை கேட்டிருக்கிறோம். ஆனால் கொஞ்சம் சோம்பல் மற்றும் நீளமான தலை முடிக்க விருப்பம் இரண்டும் சேர்ந்து, தலைமுடியை சீராக கத்திர்ப்பதற்கு தடையாக இருக்கிறது. ஆனால் இப்படி செய்யாமல் இருப்பதே சரியானது.

தலை முடியும் பிளவுபட்ட நுனையை கத்திரிப்பதே சரி என்பதற்கான காரணங்கள் கீழே பட்டியலிட்டுள்ளோம்.

 

சீரில்லாத பிக்மெண்டேஷன்

சீரில்லாத பிக்மெண்டேஷன்

தலைமுடியுன் பிளவுபட்ட நுனி, இறந்தவை மற்றும் இரண்டாக பிளவுபட்டவை. இது கூந்தல் பாதிப்பின் தீவிர அடையாளமாகும். இந்த அறிகுறியை நீங்கள் கவனத்தில் கொள்வது நல்லது. பிளவுபட்ட முனை, உங்கள் கூந்தலை மங்கலாக்கி, பாதிப்புக்குள்ளாக்கிறது. இதன் நிறம் உங்கள் வழக்கமான கூந்தல் நிறைத்தை விட மங்கலாக இருக்கிறது. இந்த வேறுபாடு உங்கள் கூந்தலின் ஒட்டுமொத்த தன்மையை பாதித்து, அதை ஆரோக்கியமற்றதாக தோன்றச்செய்கிறது.  

 

இவை தானாக சரியாகாது தெரியுமா?

இவை தானாக சரியாகாது தெரியுமா?

இதை மீண்டும் ஒரு முறை வலியுறுத்துகிறோம்: தலைமுடியின் பிளவுபட்ட நுனி பிரச்சனைக்கு தீர்வு அவற்றை கத்திரிப்பது மட்டுமே. ஏனெனில் இவற்றை கண்டும் காணாமல் இருப்பதால் இவை தானாக சரியாகப்போவதில்லை. சொல்லப்போனால் இவற்றை டிரிம் செய்வதை நீங்கள் எந்த அளவு தள்ளிப்போடுகிறீர்களோ அந்த அளவு பிரச்சனை தீவிரமாகும். இது உங்கள் கூந்தல் வளர்ச்சியையும் பாதிக்கும்.

 

இவற்றை சரி செய்யக்கூடிய பொருட்களும் இல்லை

இவற்றை சரி செய்யக்கூடிய பொருட்களும் இல்லை

தலைமுடியும் பிளவுபட்ட நுனி பிரச்சனை சரி செய்வதாக கூறும் தயாரிப்புகள் எல்லாம் பொய் சொகின்றன. நீங்கள் கண்டிஷன் செய்யத்துவங்கினால் அல்லது தலைமுடியை நன்றாக பராமரிப்பதால், இந்த பிரச்சனை தானாக சரி ஆகப்போவதில்லை. எனவே தான் இந்த முனைகளை கத்திரிப்பதன் மூலம் டிரிம் செய்வதே ஒரே வழி ஆகும்.

 

உங்கள் கூந்தல் பொலிவை பாதிக்கிறது

உங்கள் கூந்தல் பொலிவை பாதிக்கிறது

பிளவு பட்ட முனைகள், உங்கள் கூந்தலின் பொலிவை பாதித்து, அவை மங்கலாக, அழகில்லாமல் தோன்ற வைக்கின்றன. எவ்வளவு தான் கண்டீஷன் செய்தாலும், ஹேர் மாஸ்க், ஸ்பா போன்ற வழிகளை பின்பற்றினாலும் இது சரியாகாது. தலைமுடியின் பிளவு பட்ட நுனிப்பகுதியை டிரிம் செய்வது மட்டுமே வழி.