எந்தவித முடி பிரச்னைகளும் இல்லாத ஒரு நாளை அனுபவிக்கும்போது ஒவ்வொரு முறையும் எங்களுக்கு மட்டும்தான் உற்சாகம் ஏற்படுகிறதா அல்லது உங்கள் அனைவருக்குமே உற்சாகம் ஏற்படுகின்றதா? உங்களுக்கும் நல்ல உற்சாகம் ஏற்படுகிறது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். உங்கள் வறண்ட மற்றும் உதிர்ந்த கூந்தல் போன்ற பிரச்னைகளை தடுத்தவுடன், பளபளப்பான மாற்றத்தை பார்க்கும்போது அது மிகவும் மகிழ்ச்சியான உணர்வைத் தரும். ஆனால், கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டால், உங்கள் தலைமுடியை வீட்டிலிருந்தபடியே ஆரோக்கியமாகவும் அழகாகவும் வைத்திருக்கலாம் என்று நாங்கள் சொல்லும்போது அது சரியானதாகவும் நியாயமானதாகவும் தெரிகிறது அல்லவா? சரி, இது நிஜமாகவே மாறும். மேலும், உங்கள் கூந்தலை ஆரோக்கியமாகவும் அழகாகவும் மாற்றுவதற்கு வீட்டிலேயே செய்துக் கொள்ளக்கூடிய உச்சந்தலை சிகிச்சை மற்றும் நீங்களே தயார் செய்யக் கூடிய ஐந்து வகையான ஹேர் மிஸ்ட் போன்றவற்றை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.

 

01. கற்றாழை ஹேர் மிஸ்ட்

01.  கற்றாழை ஹேர் மிஸ்ட்

உங்களின் முடி வறட்சியடைவதையும், முடியுதிர்வையும் தடுப்பதற்கு இந்த கற்றாழை ஹேர் மிஸ்ட்டை பயன்படுத்தச் சொல்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ½ கப் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு, இந்தத் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி புதிய கற்றாழை ஜெல், ஒரு டீஸ்பூன் கிளிசரின் மற்றும் எள் விதை எண்ணெய் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து, இறுதியில் ஒரு காப்ஸ்யூல் வைட்டமின் ஈ எண்ணெயையும் சேர்க்க வேண்டும். இவையனைத்தும் ஒன்றாக சேரும்வரை நன்றாகக் குலுக்கிக் கலக்க வேண்டும். இந்த ஹேர் மிஸ்ட்டை உங்கள் உச்சந்தலையிலும் கூந்தலிலும் பயன்படுத்துங்கள். பிறகு, உங்களின் வறட்சியடையும் கூந்தல் பிரச்னையிலிருந்து விடைபெறுங்கள்.

 

02. வாழைப்பழமும், முட்டையும் சேர்ந்த ஹேர் மாஸ்க்

02.  வாழைப்பழமும், முட்டையும் சேர்ந்த ஹேர் மாஸ்க்

உங்கள் உச்சந்தலைக்கு மிகவும் நன்மையைத் தரக்கூடியது மற்றும் உங்கள் தலைமுடிக்கு சிறந்த ஊட்டத்தையும் தரக் கூடியது இந்த வாழைப்பழம் மற்றும் முட்டை இரண்டும் ஹேர் மாஸ்க். உங்களுக்கு தலைமுடி வறட்சியடைவதும், முடி சேதமாவதும் மிகப்பெரிய துயரமாக நீங்கள் கருதினால், அதை இந்த எளிய வாழைப்பழமும், முட்டையும் சேர்ந்த ஹேர் மாஸ்க் ஹேர் மாஸ்க்கைப் பயன்படுத்தி சீர் செய்யுங்கள். இதற்கு உங்களுக்கு இரண்டு பழுத்த வாழைப்பழங்கள் மற்றும் ஒரு முட்டை இருந்தால் மட்டும் போதுமானது. தேவைப்படும். இரண்டையும் நன்றாகக் பிசைந்த கலக்க வேண்டும். பிறகு இதைக் கலவையை உங்களில் கூந்தலில் மென்மையாகத் தடவி 15-20 நிமிடங்கள் வரை ஊற வைக்கவும். மென்மைக் குணம் கொண்ட ஷாம்புவினால் அதைக் கழுவவும். அதற்குப் பின் ஏற்படும் பலன்களை கண்டு நீங்கள் மகிழ்வீர்கள்.

 

03. தேனும், தேங்காயும் சேர்ந்த ஹேர் மிஸ்ட்

03. தேனும், தேங்காயும் சேர்ந்த ஹேர் மிஸ்ட்

உங்கள் பொலிவற்ற மற்றும் தளர்ச்சியடைந்த கூந்தலுக்குப் புத்துயிரளிக்க, தேனும், தேங்காயும் சேர்ந்த ஹேர் மிஸ்ட்டை கூந்தலின் மீது தடவுமாறு பரிந்துரைக்கிறோம். நீங்கள் ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அரை கப் தண்ணீரை எடுத்து, தேன் மற்றும் தேங்காய் எண்ணெய்யை அதில் தலா ஒரு தேக்கரண்டி சேர்க்க வேண்டும். பிறகு இந்தக் கலவையுடன், ஒரு வைட்டமின் ஈ எண்ணெய் காப்ஸ்யூல் மற்றும் லாவெண்டர் அத்தியாவசிய எண்ணெய் சில துளிகள் முதலியவற்றை சேர்க்கவும். அனைத்து பொருட்களும் ஒன்றாக சேரும்வரை பாட்டிலை நன்றாகக் கலக்கவும். பிறகு தலைமுடியின் மொத்த நீளம் மற்றும் வேர்கள் வரை நன்றாக ஸ்ப்ரே செய்யவும்.

 

04. பழுப்புநிற நாட்டுச் சக்கரையும் ஆலிவ் ஆயிலும் சேர்ந்த ஹேர் மாஸ்க்

04. பழுப்புநிற நாட்டுச் சக்கரையும் ஆலிவ் ஆயிலும் சேர்ந்த ஹேர் மாஸ்க்

இதுவே ஹேர் ஸ்க்ரப்பாகவும், ஹேர் மாஸ்க்காகவும் வேலை செய்யும் ஒரு ஆல்-இன்-ஒன் ஆகும். இது உங்கள் தலைமுடியில் ஏற்படும் அரிப்பு, உச்சந்தலை வறட்சி போன்ற பாதிப்புக்களை குணப்படுத்துவதுடன், உங்கள் கூந்தலுக்கு பொலிவையும் சேர்க்கிறது. இதற்காக, ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் பழுப்புநிற நாட்டுச் சக்கரை போட்டு அதில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலை ஊற்றி நன்றாக கலக்கவும். பின்னர், இந்தக் கலவையை உங்கள் மயிரழைகளில் சமமாக தடவ வேண்டும். மேலும் உங்கள் உச்சந்தலையிலும் பூசி மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 20-25 நிமிடங்கள் வரை உங்கள் தலைமுடியில் அப்படியை ஊற விட்டுவிட்டப் பின் கொஞ்சம் ஷாம்புவை எடுத்து நன்றாக கழுவ வேண்டும்.

 

05. இஞ்சியும் ஆலிவ் ஆயிலும் சேர்ந்த ஹேர் மிஸ்ட்

05. இஞ்சியும் ஆலிவ் ஆயிலும் சேர்ந்த ஹேர் மிஸ்ட்

சங்கடமாகவம், பிடிவாதமாகவும் உங்கள் தலைமுடியை நீங்காமல் தொல்லைத் தரும் பொடுகுத் தொல்லையிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினால், உங்கள் கூந்தலுக்கு இஞ்சி மற்றும் ஆலிவ் ஆயில் ஹேர் மிஸ்ட்டை பயன்படுத்துமாறுப் பரிந்துரைக்கிறோம். இந்த ஹேர் மிஸ்ட்டை தயாரிக்க, நன்றாக அரைத்த பாதியளவு இஞ்சியை இரண்டு கப் தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வைக்கவும். தண்ணீரின் அளவு பாதியாகும் வரை கொதிக்க வைத்தப் பின் அதில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பிறகு, அதை உங்கள் உச்சந்தலையில் நன்றாக தடவிக் கொண்டு சிறிது நேரம் ஊற விட்டப்பின், உங்கள் தலைமுடியை ஷாம்பு அலசிக் கொள்ளவும்.