முடிக்கு வண்ணம் பூசிக் கொள்வது ஒரு வேடிக்கையாக விஷயமாகும - இது ஹேர் ஸ்டைலிங்கில் உங்கள் பெயரை நிலைநிறுத்துவதற்கும், நீங்கள் ஒரு மாற்றத்தை விரும்பும் போது நீங்களே தயாரித்து கொள்வதற்கான எளிதான வழிகளில் ஒன்றாகும். இப்போது, ​​அனைத்து அலுவலக வேலை, கூட்டங்கள் மற்றும் வீட்டு வேலைகளுக்கு ஆகியவற்றிற்கு இடையில், உங்கள் தலைமுடிக்கு வண்ணம் தீட்டிக் கொள்ள ப்யூட்டி பார்லருக்கு செல்ல சில மணிநேரங்கள் ஒதுக்குவது என்பது உங்களுக்கு கடினமாக காரியம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். ஆனால் நீங்கள் வெளியிலேயே செல்லாமல் உங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் தலைமுடிக்கு எளிதாக வண்ணம் பூசிக் கொள்ளலாம். உங்கள் தலைமுடியை வீட்டிலிருந்தபடியே எப்படி வண்ணம் பூசி கொள்ள வேண்டும் என்பதற்கான படிப்படியான வழிகாட்டி உங்களிடம் இல்லாத போது, உங்கள் தலைமுடிக்கு நீங்களே வண்ணம் பூசிக் கொள்வது என்பது கடினமானது என்று எங்களுக்குத் தெரியும். ஆனால். இதற்காக கொஞ்சம் செலவு செய்ய வேண்டியிருந்தாலும், வீட்டிருந்தபடியே செய்து கொள்ளும் வசதியை நீங்கள் பெற முடியும். எனவே, உங்களுக்கு விருப்பமான தலைமுடி நிறத்தை வீட்டிலிருந்தபடியே பெறுவதற்கு படிபடியான வழிமுறைகளைப் பின்பற்றவும்.

 

வழிமுறை 01: ஒரு நாளைக்கு முன்பே தலைக்கு குளிக்க வேண்டும்

வழிமுறை 01: ஒரு நாளைக்கு முன்பே தலைக்கு குளிக்க வேண்டும்

உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசுவதற்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்பு உங்கள் தலைமுடியை நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும். அப்போது, உங்கள் தலைமுடி சுத்தமாக இருக்கும் மற்றும் தலைமுடி இயற்கை பெறும் எண்ணெயை திருமபப் பெறுவதற்கான நேரமும் அதற்கு கிடைக்கும். உச்சந்தலையிலுள்ள எண்ணெய் சத்து எரிச்சல் இல்லாமல் வைத்திருக்க உறுதி செய்கிறது, மேலும் அப்போதும் வண்ணம் இயற்கையாக உங்கள் முடியுடன் சேர முடியும். உண்மையில் வண்ணம் உங்கள் முடியில் நீண்ட காலம் நிலைத்திருக்க உதவுகிறது.

 

வழிமுறை 02 : உங்களுடைய பிடித்த நிறம் மற்றும் சாதனங்களை தேர்வு செய்யவும்

வழிமுறை 02 : உங்களுடைய பிடித்த நிறம் மற்றும் சாதனங்களை தேர்வு செய்யவும்


உங்கள் தலைமுடிக்கு நீங்கள் விரும்பும் வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு சிறிது நேரத்தை நீங்கள் செலவிட வேண்டியது மிக முக்கியம்.  நீங்கள் உங்கள் தலைமுடியை முழுவதுமாக முன்னிலைப்படுத்த நினைத்தாலும்  அல்லது ஹேர்டை அடித்துக் கொள்ள விரும்பினாலும்,  ஒரு நல்ல தரமான தலைமுடி வண்ணத்தை தேர்த்தெடுக்கும்படி உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதை முழுமையாக செயல்படுத்துவதற்கு தேவையான அனைத்து கருவிகளும் உங்களிடம் இருக்கின்றதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.  டவல்கள், கையுறைகள், கலக்கும் கிண்ணங்கள், அகண்ட பற்களையுடைய  சீப்பு, பிளாஸ்டிக் கிளிப்புகள், ப்ளீச் ப்ரஷ், வெள்ளி நிற ஃபாயில் பேப்பர் மற்றும் உங்கள் வண்ணப் பெட்டி போன்ற உங்களுக்கு  தேவையானவற்றுக்கான ஒரு பட்டியலை உருவாக்கவும்.

தொழில்முறை உதவிக்குறிப்பு :  வீட்டிலேயே உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசும் போது மாய்ஸ்சரைசர் அல்லது வாஸ்லைன் பெட்ரோலியம் ஜெல்லியை கைவசம் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் தலைமுடி, காதுகள் மற்றும் கழுத்தில் தடவும் போது இந்த சாயம் உங்கள் சருமத்தின் மேல் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம்.

 

 

வழிமுறை 03: இயற்கையான நிறத்தை நீக்க வேண்டும்

வழிமுறை 03: இயற்கையான நிறத்தை நீக்க வேண்டும்


உங்கள் தலைமுடி இயற்கையான இழைகளில் இந்த செயற்கை வண்ணங்களை நிலைபெற செய்ய முடியாது. ஆகையால் உங்கள் தலைமுடியின் இயற்கையான  நிறத்தை ப்ளீச் செய்து நீக்க வேண்டும். எனவே, உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசுவதற்கு முன் அவற்றை நீங்கள் தயார் செய்ய வேண்டும். பெரும்பாலும்  தலைமுடி வண்ணங்கள் ஒரு ப்ளாண்டர் பவுடர் மற்றும் டெவலப்பருடன் வருகின்றன, இது இந்த செயல்முறைக்கு மிகவும் உதவுகிறது.  உங்கள் வண்ணப் பெட்டியில் அது இல்லை என்றால், கவலைப்பட வேண்டாம், ஏனெனில் இவை சந்தையில் மிக எளிதாகக் கிடைக்கும் பொருட்களாகும்.   இந்த இரண்டையும் ஒன்றாகக் கலந்து, நீங்கள் வண்ணம் பூச விரும்பும் முடி பகுதியில் இந்தக் கலவையை தடவவும். அதன் பிறகு, வண்ணம் பூசப்பட்ட முடிஇழைகளை வெள்ளி நிற ஃபாயில் பேப்பரினால் நன்றாக சுற்றி விடுங்கள்.  30-45 நிமிடங்கள் அப்படியே விட்டுவிடுங்கள். பிறகு உங்கள் தலைமுடியைக் கழுவி நன்கு உலர வைக்கவும்.

தொழில்முறை உதவிக்குறிப்பு:  வண்ணம் பூசுவதற்கு  குறைந்தது 24 மணி நேரத்திற்கு முன்பே இந்த வண்ணக் கலவையின் மயிரிழை பரிசோதனை செய்து பார்ப்பதும் எப்போதும் நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.  ஏனெனில்,  இந்த வண்ணக்கலவையில் ரசாயனங்களினால் உங்கள் சருமத்தின் நிறத்திற்கு ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்வினைகள் ஏற்படுகிறதா என்பதை பரிசோதிக்க போதுமான நேரம் நமக்கு கிடைக்கிறது.

 

 

வழிமுறை 04: வண்ணம் பூசுவதற்கான நேரமிது

வழிமுறை 04: வண்ணம் பூசுவதற்கான நேரமிது


உங்கள் தலைமுடி நன்றாக உலர்ந்தவுடன், வண்ணம் பூச வேண்டிய நேரம் இது. உங்கள் தலைமுடியில் எந்த சிக்குகள் இல்லாமல் தலைமுடியை நன்றாக சீவ வேண்டும்.  வண்ணப் பெட்டியில் மீதுள்ள வழிகாட்டுதலின்படி  வண்ண கலவை தயார் செய்து, இயற்கை நிறத்தை அகற்றிய உங்கள் தலைமுடியின் முடிஇழைகளின் மீது வண்ணம் பூசும் ப்ரஷ்ஷினால்,  வண்ணக் கலவையைப் பூசி வண்ணமாக்கி விடுங்கள்.  உங்கள் தலைமுடிக்கு பகுதி பகுதியாக பிரித்துக் கொண்டு  வண்ணம் கொடுப்பது நல்லது. இது வண்ணத்தை முழுமையாகப பயன்படுத்த உதவியாக இருக்கும்.  வண்ணம் பூசிய முடியின் ஒவ்வொரு பகுதியையும் வெள்ளி ஃபாயில் பேப்பரால் நன்றாக சுற்ற வேண்டும், வண்ணம்  உங்கள் தலைமுடியுடன் நன்றாக சேர்வதற்கு மேலும் 30-45 நிமிடங்கள் தேவைப்படும்

 

 

வழிமுறை 05: நன்றாக கழுவி, உலர விட வேண்டும்.

வழிமுறை 05: நன்றாக கழுவி, உலர விட வேண்டும்.


வண்ணம் பூசியது உங்களுக்கு திருப்தி ஏற்பட்டவுடன், TRESemmé Pro Protect Sulphate Free Shampoo போன்ற உங்களின் வண்ணத்தைப் பாதுகாக்கக் கூடிய ஷாம்புவினால் உங்கள் தலைமுடியை நன்றாக அலசிக் கழுவ வேண்டும். அதைத் தொடர்ந்து இம்முறை TRESemmé Pro Protect Sulphate Free Conditioner ஆல் மீண்டும் தலைமுடியை நன்றாக அலசிக் கழுவ வேண்டும்.  இந்த சேர்க்கைகள் முடியின் வண்ணத்தை அகற்றக்கூடிய சல்பேட்டும்,  மற்றும் பாராபென் இல்லாத இரட்டையராகும் மேலும், மொராக்கோ ஆர்கன் எண்ணெயின் நன்மையை இதில் அடங்கியுள்ளதால், இது உங்கள் தலைமுடியின் நிறத்தை வேகமாக மங்காமல் பாதுகாப்பதோடு, உங்கள் தலைமுடியை சுத்தமாகவும் மாஸ்யரைஸ்டுடன் வைத்திருக்கும்.  மறுபுறம், உங்கள் கூந்தலுக்கு  ஒரு பாதுகாப்பு அரணை இந்த கண்டிஷனர் உருவாக்குவதோடு, மாஸ்யரை உள்ளுக்குள்ளேயே அடக்கி வைத்து, கூந்தலுக்கு  மென்மையான,  பளபளப்பான வழங்குவதுடன் மற்றும் கூந்தலில் எளிதில் சிக்குகள் ஏற்படாமலும் பாதுகாக்கிறது.  நீங்கள் உங்கள் தலைமுடியை அலசும்போது  நீர்வடிகாலில் நிறம் ஓடுவதைக் கண்டும், பீதி அடைய வேண்டாம்; இது சாதாரணமானது விஷயமாகும். உங்கள் தலைமுடிக்கு வண்ணம் பூசிய முதல் சில நாட்களில் இது போன்று நடப்பதை நீங்கள் காணலாம்.

உங்கள் தலைமுடியை நன்றாக அலசியவுடன், அவற்றை இயற்கையான காற்றில  உலர விட்டபிறகு  நிறம் எப்படி மாறியிருக்கும்  என்பதை  பாருங்கள்! இதை வீட்டிலேயே செய்யும் கொஞ்சம் சோர்வு ஏற்படலாம், ஆனால் இது வேடிக்கையாகவும் அதே நேரத்தில் செய்யக்கூடிய அளவிலும் இருக்கும், மேலும் நீங்கள் ப்யூட்டி பார்லருக்கு சென்று வரும் நேரத்தை நிச்சயமாக சேமிக்க முடியும்.