சரியாகப் பராமரித்தால் சுருள் முடி போன்ற அழகான கூந்தல் வேறு எதுவும் கிடையாது. ஆனால் அதைப் பராமரிப்பது சுலபமல்ல. சுருள் முடியில் ஈரப் பதமும் பொலிவும் கொடுப்பதற்காக அழகு சாதன பொருட்களை குவித்து வைக்கலாம். ஆனால் அதில் சில மட்டுமே தேவையான பலன்களைக் கொடுக்கும். வேறு வேறு பொருட்களை பயன்படுத்தி நேரத்தை வீணடிக்காதீர்கள். இங்கே கொடுக்கப்பட்டுள்ள யூஸ்ஃபுல் பொருட்களை பயன்படுத்துங்கள்.

இது சரியாக ஒர்க் செய்யும் என்று தெரியாமலே எப்படி ஐந்து பொருட்களை வாங்குவதி என்றுதானே கேட்கிறீர்கள். அழகுக் கலைஞர்களான நாங்கள் பயன்படுத்தி, பரிசோதித்ததில் சுருள் முடி கொண்டவர்களுக்கு சிறந்த பொருட்கள் இவை. உபயோகித்துப் பாருங்கள்.

 

01. ஷாம்பூ-கண்டிஷனர்

01. ஷாம்பூ-கண்டிஷனர்

தூசி, அதிக ஆயில், கூந்தலிலும் தலையிலும் படியும் பொருட்களை நீக்குவதற்கு ஷாம்பூ அவசியம். ஆனால் தினமும் ஹேர் வாஷ் செய்யக்கூடாது. சுருள் முடி கொண்டவர்கள் வாரத்தில் இரு நாள் மட்டுமே ஹேர் வாஷ் செய்ய வேண்டும். இதனால் தலையில் உள்ள இயற்கையான இயற்கையான ஆயில் பாதுகாக்கப்படும், எல்லா இடத்திலும் பரவலாக இருக்கும். ஜென்டிலான, ஊட்டச் சத்து கொடுக்கும் உட்பொருட்கள் கொண்ட ஷாம்பூவை தேர்ந்தெடுக்கவும்.

BB picks: Love Beauty & Planet Argan Oil and Lavender Aroma Smooth and Serene Shampoo and Conditioner

 

02. சீரம்

02. சீரம்

ஷாம்பூ போட்ட பிறகு முடியின் வேர்களில் ஈரப் பதத்தை லாக் செய்யும் லீவ்-இன் கண்டிஷனர் அல்லது சீரம் பயன்படுத்த வேண்டும். நேரான கூந்தல் கொண்டவர்களுக்கு லீவ்-இன் கண்டிஷனர் நன்றாக வேலை செய்யும். ஆனால் சுருள் முடி கொண்டவர்களுக்கு எக்ஸ்ட்ரா ஊட்டச் சத்து, ஷைன் தேவை. சீரம் பயன்படுத்தினால் முடி சிக்கு விழுவது குறையும் உங்கள் சுருள் முடி அழகாக நாட்டியமாடும்.

BB picks: TIGI Bed Head Control Freak Frizz Control And Straightener Serum

 

03 ஹேர் க்ரீம்

03 ஹேர் க்ரீம்

சுருள் முடி எப்போதுமே யார் பேச்சையும் கேட்பதில்லை. சில நாட்களில் அதைக் கட்டுப்படுத்துவது ரொம்பவே கஷ்டம். அப்படிப்பட்ட நாட்களில் கர்ல் க்ரீம் யூஸ்ஃபுல்லாக இருக்கும். உலர்வாக, சொர சொரப்பாக இருக்கும் கூந்தலை மென்மையாக, இதமாக்கும் ஆற்றல் கொண்டது கர்ல் க்ரீம்.

BB picks: TIGI Bed Head On The Rebound Curl Recall Cream

 

04. ஹேர் மாஸ்க்

04. ஹேர் மாஸ்க்

உங்களின் சுருள் முடி ஸ்டைலாக, ஹெல்தியாக இருந்தால் போதுமா. ஹேர் மாஸ்க் மூலம் அது தன்னை சரி செய்துகொள்ள, நீர்ச் சத்து கொடுக்கவும் உதவ வேண்டும். எல்லா வகையான கூந்தல்களுக்கும் ஹேர் மாஸ்க் அவசியம். ஆனால் சுருள் முடி கொண்டவர்களுக்கு அது கட்டாயம் தேவை. ஏனென்றால் சுருள் முடியில் ஈரப் பதம் குறைவாக இருக்கும். வாரம் ஒரு முறை ஹேர் மாஸ்க் பயன்படுத்துவது மூலம் இந்தப் பிரச்சனையை சமாளிக்கலாம்.

BB picks: Tresemme Keratin Smooth Deep Smoothing Mask

 

05. அகல பல் சீப்பு

05. அகல பல் சீப்பு

சுருள் முடி கொண்டவர்கள் முடிந்த வரை ஹேர் பிரஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். முடி சிக்கு விழுந்தால், முடிந்த வரை விரல்களால் அதை எடுத்து விட வேண்டும். அல்லது அகலமான பல் கொண்ட சீப்பு பயன்படுத்தினால் முடி சேதமடையாது. பிரஷ் அதிகம் பயன்படுத்தினால் முடி அதிகம் சேதமடைந்து, கூந்தல் உலர்வாக மாறும்.