தலைமுடி ஸ்டைலை மாற்றுவதற்கு உங்களுக்கு பல காரணங்கள் இருக்கலாம். உங்களுடைய தோற்றத்தை மாற்றுவதற்கு, அல்லது உங்கள் காதனுடனான உறவை முறித்துக் கொள்ளுதல், அல்லது பிரிவை தாங்க முடியாமல் உங்களின் மனப்போராட்டம் அல்லது முற்றிலுமாக அவர்களுடனான பந்தத்திலிருந்து விட்டு விலகுதல் என்று பல காரணங்கள் உண்டு. எத்தகைய காரணங்கள் வேண்டுமானாலும் இருந்து விட்டு போகட்டும், காரணங்கள் என்ன வேண்டுமானாலும் இருக்கட்டும், ஆனால் உங்களுடைய புதிய ஸ்டைலுடன் நீங்கள் சலூனிலிருந்து வெளியில் வரும்போது, அது அற்புதமாகவும், புதுநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் (ஹேர் ஃபிலிப் !).
ஒரு சூப்பரான ஹேர் ஸ்டைலுடன் தோற்றமளிக்க வேண்டும் என்று நினைத்தீர்களென்றால், நீங்கள் முயற்சி செய்யக் கூடிய சில யோசனைகள் எங்களிடம் உள்ளது (இதை சுருட்டை முடி என்று நாம் அழைக்கலாம்). அடுத்த முறை சலூனுக்கு செல்லும்போது, இந்த பருவத்தின் புத்தம்புதிய ஐந்து ஹேர்ஸ்டைல்களை ஸ்க்ரீன் ஷாட் செய்வதற்கு தயாராக இருங்கள்.
பாப்

குட்டையான ஹேர் ஸ்டைலை இதுவரை நீங்கள் வைத்துக் கொள்ளவில்லையென்றால், ‘பாப் கட்‘ ஸ்டைலை வைத்துக் கொண்டு பார்க்கவும். பிரியங்கா சோப்ரா மற்றும் அனுஷ்கா சர்மா போன்ற பிரபலங்கள் தங்களுடைய பிடரிமயிரை வெட்டிவிட்டு, பாப் கட் வைத்துக் கொள்வதற்கு ஒரு காரணம் உள்ளது. இது நம்பமுடியாத அளவுக்கு பராமரிக்கக் கூடியதாகவும், மனதுக்குப் பிடித்தமானதாகவும், டிரெண்டியாகவும் இருக்கின்றது. உங்கள் முக வடிவத்திற்கு பொருந்தக் கூடிய ஒரு சின்-கேசிங் பாப் அல்லது ஒரு நீண்ட ஒன்றையோ வைத்துக் கொள்ளவும்.
90களின் ஷேக் ஹேர் ஸ்டைல்

90களின் ஷேக் ஹேர் ஸ்டைலான ஷேக் இப்போது புத்துணர்வு பெற்று மீண்டும் திரும்பி வந்துள்ளது. மேலும், அதைப் பற்றி அனைவரும் தெளிவாகக் கூறுகின்றனர். உங்களுடைய தலைமுடியை ஓரளவுக்கு நீளமாகவும், கூடுமானவரை முடி திருத்தாமலும் வைத்திருப்பதே ‘டெவில் மே கேர்‘ என்பதாகும். இது மிகவும் சுலபமாக ஏதாவது அதிர்வை நாம் ஏற்படுத்தக் கூடிய ஒன்றாகத் தெரிகின்றது.
ப்ளண்ட் கட்

உங்களுடைய நீளமான தலைமுடியை கட்டிங் செய்து கொள்ள விருப்பமில்லை; உங்களுடைய தோற்றத்தை மாற்றுவும், தலைமுடியையும் வெட்டிக் கொள்ள வேண்டும். அதற்கு தலைமுடியை ப்ளண்ட் செய்து கொண்டு, அப்படியே விட்டு விட வேண்டும். குட்டை முடி ஸ்டைலைவிட நீண்ட தலைமுடிக் கொண்ட ப்ளண்ட் கட் லுக் பார்ப்பதற்கு மிகவும் ‘நச்‘ என்று இருக்கும். அதனால்தான் இந்த no BS ஹேர் கட்டை விரும்புகிறார்கள்.
விஸ்பி பாங்க்ஸ்

பாங்க்ஸ் பெரியளவில் இல்லாத ஒரு காலம் இருந்ததா? உண்மையில், நமக்கு ஞாபகம் இருக்காது. இந்த பருவகாலத்தில் விஸ்பி பாங்க்ஸ் முக்கியமான இடத்தைப் பிடிக்கின்றது. உங்களுடைய தலைமுடியை அழகாக வைத்துக் கொள்வதற்கான ஒரு எளிமையான வழி என்பது விவாதத்திற்க்கு அப்பாற்ப்பட்டது.
லாங் லேயர்ஸ்

லவ் லாங் லேயர்ஸ் என்றால் என்ன அடர்த்தியான பிடரிமயிரின் அடுக்குகள் பார்ப்பதற்கு கண்கவர் காட்சியாக உள்ளது. நுட்பமான அடுக்குகளையுடைய உங்களுடைய தலைமுடிக்கு ஏதாவது டெஃவனிஷன்களை சேர்த்து, உங்கள் முடிக்கு இயற்கையாகவே துள்ளல் மற்றும் அழகை சேர்க்கவும் இது உதவும்.
Written by Kayal Thanigasalam on Mar 04, 2021
Author at BeBeautiful.