வாழ்க்கை சரியாக இல்லாவிட்டாலும், உங்கள் முடியை சரியாக வைத்துக் கொள்ளலாம்! தொற்றுநோய் ஊரடங்கின் போது எந்தளவுக்கு உங்கள் தலைமுடியை எப்படிப் பராமரித்திருப்பீர்கள் என்பதை ஒரு விஷயமல்ல, ஆனால் தற்போது தலைமுடி மாற்றத்திற்கான மிகவும் அவசியமான நேரமிது. ஏன் என்று கேட்கிறீர்களா? வரப்போவது இலையுதிர் காலம், மற்ற எல்லாவற்றையும் போலவே, உங்கள் தலைமுடிக்கும் அலங்காரம் தேவைப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக, இந்த இலையுதிர் காலத்தை அதேயளவு உற்சாகத்தை அழகியல் சமூகம் நம்முடன் பகிர்ந்து கொள்கிறது. அழுது வடிந்து கொண்டிருந்த நிலையிலிருந்து அட்டகாசமான நிலைக்கு உடனடியாக உயர்த்தக் கூடிய கவர்ச்சியான ஹேர் ஸ்டைல்ஸ் மற்றும் ஹேர் கலர்ஸ்
அதிகரித்திருப்பதை நம்மால் காணமுடிகிறது! எனவே ஆர்என் முயற்சி செய்ய தயாராகி, 2021 ஆம் ஆண்டின் கவர்ச்சிகரமான எங்களுடைய இலையுதிர்காலத்திற்கான பலவித ஹேர் டிரெண்ட்களை உடனடியாக முயற்சி செய்து பார்ப்பதற்கு தயாராகுங்கள்.
- 01. வார்ம் சாக்லேட்
- 02. ஸ்பைஸி ரெட்
- 03. சாஃப்ட் பர்ப்பில்
- 04. சிக் மணி பீஸ்
- 05. ஃபேஸ் ஃப்ரேமிங் லேயர்கள்
- 06. எட்ஜி பாப்
- 07. மாடர்ன் ஷேக்ஸ்
01. வார்ம் சாக்லேட்

தற்போதைய டிரெண்ட் என்று பார்க்காமல் புதிய ஹேர் கலருக்கு மாற விரும்பும் பெண்களுக்கு, ஒரு ஃப்ரீ-ஃளோயிங் பாலயேஜ் நுட்பத்தில் இத்தகைய வார்ம் சாக்லேட் நிறத்தை புக்மார்க் செய்து கொள்ளவும். முடியின் வேர்களில் இயற்கையான கருத்த கூந்தல் நிறம் தெரியும்படி தோன்றும் அதே வேளையில், நடுத்தர நீளம் மற்றும் முடிவு வரை சாக்லேட் நிறம், மற்றும் லேசான கேரமலின் நிறத்துடன் கலந்த ஒரு வகையான தாளநடையைப் பின்பற்றுகின்றன.
02. ஸ்பைஸி ரெட்

க்ளாசிக் ஃபியரி ரெட் ஹேர் கலர் இல்லாமல் இலையுதிர் கால ஹேர் டிரெண்ட்கள் முழுமையடையாது என்று நாங்கள் நினைக்கிறோம்! 'புதுமையாக ஏதாவது முயற்சி செய்தல்' என்பதை உங்கள் வாழ்க்கை முழக்கமாக கொண்டுள்ளீர்கள் என்றால், உற்சாகத்தைத் தூண்டும் இந்த்த் தலைமுடி உங்களுக்கானது. வெளிப்படையான, அட்டகாசமாந மற்றும் மிகவும் 'அசாதாரணமான', ஒன்றாகும். இது ஆரஞ்சு மற்றும் ஸ்பைஸி ரெட் நிறம் இரண்டும் கலந்த கலவையாகும், இது வேர்களை மென்மையாக்கத் தொடங்கி இறுதியில் ஒரு அசர வைக்கும் நிறத்துடன் முடிவடைகிறது.
03. சாஃப்ட் பர்ப்பில்

இந்த இலையுதிர் காலத்திற்காக நீங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறீர்கள் என்பது எங்களுக்குப் புரிகின்றது, இப்போது அது கிட்டத்தட்ட வந்து விட்டது. நீங்கள் #NewHairNewMe என்ற குழுவில் இணைத்துக் கொள்ள விரும்புகிறீர்கள். பர்ப்பில் கலரை பற்றி கொஞ்சம் நினைத்துப் பார்க்கச் சொல்கிறோம். ஆம், கிளாசிக் பிரவுன்கள், மோச்சாக்கள் மற்றும் சிவப்பு நிறங்களுக்கு இணையானது எங்கும் இல்லை, நீங்கள் கனவில் கண்டது போல் தலைமுடியை மேம்ப்படுத்த தேவையானதை உண்மையிலேயே பர்ப்பில கலர் அளிக்கும்! அதன் பக்கங்களிலும் முன்பக்கத்திலும் ஒரு மங்கலான கருப்பு-வெள்ளியின் அடிப்படையுடன் கூடிய நுட்பமான மெல்லிய ஊதா நிறத்தை வெளிப்படுத்துகிறது,.
04. சிக் மணி பீஸ்

உங்கள் லுக்கை பரிசோதிக்க விரும்பும் நீங்கள், சமீபகாலமாக மிகவும் ஹாட்டாக இருக்கக் கூடிய இந்த இலையுதிர்கால ஹேர் ட்ரெண்டை நீங்கள் விரும்புவீர்கள். முகத்திற்கேற்ற ஹேர் கலரிங் நுட்பமான இது மணி பீஸ் என்று அழைக்கப்படுகிறது. இது தலைமுடியின் சம பாகங்களையும் மிகவும் அழகாகவும் அதிகப்படியாகவும் தோன்றும் (மேலும் நாங்கள் கூடுதல் விரும்புகிறோம்!) இது தலைமுடியின் முன்பக்கத்தில் ஒரு மெல்லிய பகுதியில் சியான்-நீல நிறம் பூசப்பட்டு, அதைத் தொடர்ந்து தலைமுடியின் பின்பகுதி மற்றும் உச்சிப்பகுதியில் மென்மையான பொன்னிற நிறம் தோற்றமளிக்கும்
05. ஃபேஸ் ஃப்ரேமிங் லேயர்கள்

உங்கள் தலைமுடியில் மிகப்பெரிய மாற்றம் தேவையில்லை என்று நினைத்தீர்களென்றால், ஒரு நீண்ட, ஃபேஸ்-ஃப்ரேமிங் லேயர் ஹேர் கட் செய்வதைப் பற்றி கொஞ்சம் யோசிக்கலாம். தோள்பட்டை வரை நீண்டு விழும் கேஸ்கேடிங் லேயர்கள் ஒரு நுட்பமான வரையறையுடன் ஒட்டுமொத்த லுக்கையும் மிகவும் மென்மையாகவும், சமநிலையிலும் வைத்திருக்கச் செய்கிறது.
06. எட்ஜி பாப்

இந்த இலையுதிர்காலத்தில் ஷார்ட்-லெங்க்த் பாப் ஹேர் கட்கள் சில பெரிய கவனத்தைப் பெறுவதுடன், அவை சரியாகவும் இருக்கிறது. அவை புதுமாதிரியாகவும், மிரள வைக்கும் லுக்கையும் உங்கள் தோற்றத்திற்கு உருவாக்குகின்றன, மேலும் நேர்மையான இந்த ஆற்றலை நாங்களும் விரும்புகிறோம்! இந்த இலையுதிர் ஹேர்கட்டை புக்மார்க் செய்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கன்னத்து எலும்புகளை லேசாக மேய்த்து, உங்கள் முக வடிவத்திற்கு அழகையும் மற்றும் கன்னத்து எலும்புகளின் மேற்பரப்பிற்கு மென்மையையும் தரக் கூடிய கொஞ்சம் இறுக்கமான, மழிக்கப்பட்ட முனைகளை உங்கள் பாப் முடிக்கு கொடுக்குமாறு உங்கள் ஸ்டைலிஸ்ட்டிடம் கூறவும்.
07. மாடர்ன் ஷேக்ஸ்

சிறிது காலமாகவே மக்கள் இந்த ஹேர்கட்டைப் பற்றி அறிந்சு உற்சாகமடைந்துள்ளனர், மேலும் இதைக் குறிப்பிடாமல் எங்களுடைய இலையுதிர்கால டிரெண்ட்கள் முடிவடையாது. உள்ளிடவும்: சூப்பர்-ஹாட் மாடர்ன் ஷாக் ஹேர்கட். 70கள் மற்றும் 90களில் ஒரு மிகப் பெரிய மறுமலர்ச்சியாகும். உண்மையில் அந்த சகாப்தத்தைப் போல வேறு எதுவுமே இல்லை, அது மிகவும் கவர்ச்சிகரமானதாகும். நவீன ஷாக் மிகவும் பராமரிப்புச் செலவு குறைவானது மற்றும் வெவ்வேறு அளவிலான முடி நீளங்களில் இதை முயற்சி செய்யலாம்.
Written by Kaajal Singh on Nov 12, 2021
Author at BeBeautiful.