பின்னல் அலங்காரம் உங்கள் கூந்தல் அழகை மேம்படுத்துகிறது. பின்னல் அலங்காரம் வசதியாக, அழகாக இருப்பதோடு எல்லா வகை ஆடைகளுக்கும் பொருத்தமாக இருக்கிறது. விடுமுறை பயணம் செல்வதாக இருந்தாலு சரி அல்லது வீட்டில் ஓய்வாக இருந்தாலும் சரி, பின்னல் அலங்காரத்திற்கு என்று தனியே ஒரு காரணம் தேவையில்லை.

சிவப்பு கம்பள் நிகழ்ச்சிகள் துவங்கி, பேஷண் அணிவகுப்பு வரை எல்லா இடங்களிலும் கூந்தல் அலங்காரத்திற்கு ஏற்ற வழியான பின்னல் அமைகிறது. ஆனால், தொடர்ந்து பின்னலிடுவது முடி உடைவது மற்றும் ஈரப்பதம் இழப்பு ஆகியவற்றுக்கு வழி வகுக்கலாம். எனவே தான், பின்னல் அலங்காரத்திற்கு ஏற்ப உங்கள் கூந்தலை நீங்கள் பராமரிப்பது அவசியமாகிறது. எப்படி என பார்க்கலாம். 

 

#குறிப்பு 1 முதலில் உங்கள் கூந்தலை தயார் செய்யவும்

#குறிப்பு 1 முதலில் உங்கள் கூந்தலை தயார் செய்யவும்

புரத மாஸ்க் அல்லது நீர்த்தன்மை அளிக்கும் ஸ்பிரே, உங்கள் உச்சந்தலையை ஊட்டச்சத்து பெற வைத்து, ஈரப்பதத்தை நிலை நிறுத்தி, முடி உடைவதை தவிர்க்கும். எனவே, தலைமுடியை பின்னுவதற்கு முன்,. அதற்கு கொஞ்சம் கூடுதல் டி.எல்.சி அளிக்கவும்.

 

#குறிப்பு 2 பின்னலுக்கு முன் ஊட்டச்சத்து அளிக்கவும்

#குறிப்பு 2 பின்னலுக்கு முன் ஊட்டச்சத்து அளிக்கவும்

உங்கள் கூந்தலுக்கு ஊட்டச்சத்து அளிப்பது என்று வரும் போது காலம் காலமாக புகழ் பெற்ற தேங்காய் எண்ணெய் மிகவும் ஏற்றது. இது உங்கள் கூந்தல் நீர்த்தன்மை பெற உதவுவதொடு, அதை மென்மையாக்கி சிக்கல் இல்லாமல் இருக்கச்செய்கிறது.

 

#குறிப்பு 3 தலைவார குறுகலான சீப்பை நாடவும்

#குறிப்பு 3 தலைவார குறுகலான சீப்பை நாடவும்

பின்னல் அலங்காரத்தில் உங்களுக்கு நாட்டம் அதிகம் எனில், எப்போதும் உங்கள் கூந்தலை மென்மையாக்க உதவும் குறுகலான சீப்பை நாடவும். இது கூந்தலை சீராக்கவும் உதவுகிறது.

 

#குறிப்பு 4 பின்னலுக்கு பின் கவனம் தேவை

#குறிப்பு 4 பின்னலுக்கு பின் கவனம் தேவை

பின்னலுக்கு பின் கூந்தலில் பளபளப்பை தக்க வைத்துக்கொள்ள, பின்னலுக்கு பிந்தைய செயல்முறையை பின்பற்றுவது அவசியம். முதலில், 3 அல்லது 4 நாட்களுக்கு ஒரு முறை பின்னலில் இருந்து கூந்தலுக்கு ஓய்வு அளிக்கவும். இரண்டாவதாக, ஈரப்பதத்தை தக்கவைத்துக்கொள்ள மற்றும் பளபளப்பை அதிகமாக்க பட்டுத்துணி தலையணையை பயன்படுத்தவும்.

 

#குறிப்பு 5 உச்சந்தலையை தூய்மையாக வைத்திருக்கவும்

#குறிப்பு 5 உச்சந்தலையை தூய்மையாக வைத்திருக்கவும்

உங்கள் தலைமுடியை அடிக்கடி அலசுவது நல்லது இல்லை என்றாலும், பின்னலில் பாதிப்பு தெரியாமல் இருக்க, உச்சந்தலையை தூய்மையாக வைத்திருப்பது அவசியம். எனவே ஷாம்பூவை பயன்படுத்தி அதன் பிறகு கண்டிஷனரை பயன்படுத்தவும்.