பட்டுப் போன்ற நேரான முடி கொண்டவர்களுக்கு சுருள் முடி ஆசை வந்தால் ஏற்படும் பிரச்சனைகள் நமக்குத் தெரியும். பத்து நிமிடம்கூட சுருள் நிற்காது. சரிதானே? எவ்வளவு ஹேர் ஸ்ப்ரே அப்ளை செய்தாலும் எவ்வளவு ஹீட்டிங் பயன்படுத்தினாலும் சுருள் முடி நேராகிவிடும். இது உங்களுக்கு மட்டுமே உள்ள பிரச்சனை அல்ல.

கடுப்பாகி பயனில்லை. இதோ நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம். பின்வரும் ஹேர் ஸ்டைலிங் டிப்ஸ் பின்பற்றினாலே நாள் முழுக்க சுருள் முடியை என்ஜாய் செய்யலாம்.

 

இரண்டாம் நாளில் கர்லிங் செய்ய வேண்டும்

இரண்டாம் நாளில் கர்லிங் செய்ய வேண்டும்

ஃபிரெஷ்ஷாக ஹேர் வாஷ் செய்த பிறகு சுருள் எளிதாக நிற்காது. குறிப்பாக, இயற்கையாகவே நேர் முடி கொண்டவர்களுக்கு. அதனால் ஹேர் வாஷ் செய்த இரண்டாவது அல்லது மூன்றாவது நளில் கர்ல் செய்யுங்கள். இதனால் உங்கள் தலையில் உள்ள இயற்கையான ஆயில் அதிக சத்து கொடுத்த முடியை அதிக நேரம் சுருளாக வைத்திருக்கும். Dove Volume and Fullness Dry Shampoo போதுமான அளவு பயன்படுத்துவது மூலம் தலையில் உள்ள பிசுபிசுப்பைக் கட்டுப்படுத்தி, முடியின் வேர்களை பலப்படுத்தலாம்.

 

சிறிய கர்லிங் வேண்ட்

சிறிய கர்லிங் வேண்ட்

சுருள் முடியை தாங்கி நிற்பதற்கான இயற்கையான அமைப்பு இல்லாத நேர் முடியில் சிறிய கர்லிங் வேண்ட் பயன்படுத்த வேண்டும். சிறிய வேண்ட் என்பதால் சுருள் சிறியதாக, டைட்டாக இருக்கும். இது நேராக மாறுவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும்.

 

சுருள் முடி செட் ஆகட்டும்

சுருள் முடி செட் ஆகட்டும்

சீக்கிரமே சுருள் முடி நேராகிவிடுகிறதா? சுருள் முடி செட் ஆக நேரம் கொடுப்பதுதான் இதை சமாளிக்க சரியான வழி. அதாவது, கூந்தலின் ஒரு பகுதியை கர்ல் செய்த பிறகு, கையால் அதை நசுக்கி விட வேண்டும். அது செட் ஆகும் வரை டைட்டாக பிடித்து வைத்திருக்க வேண்டும். இது சுருள் முடி செட் ஆவதற்கு உதவும். சீக்கிரமாக முடி நேராக மாறுவதையும் தடுக்கும்.