பலவிதமான போனிடெய்ல் ஹேர் ஸ்டைல்கள் குறித்து பிரபலங்கள் மற்றும் செல்வாக்குள்ளவர்கள் ஆகியோரின் கருத்தை கேட்டப் பிறகுதான், போனிடெய்ல் இந்த சீசனின் மிகவும் பெரியளவில் டிரெண்ட் ஆகும் என்பதை மிகவும் நம்பிக்கையுடன் தெரிவிக்க முடியும். வரப்போகும் விழாக் காலத்தை முன்னிட்டு உற்சாகப்படுத்தும்படியான எண்ணற்ற போனிடெய்ல ஹேர் ஸ்டைல்களை தேர்ந்தெடுத்து வைத்துள்ளோம். அதிலும் குறிப்பாக க்ரிஸ்க்ராஸ் போனிடெய்ல் கண்ணைப் பரிக்கக்கூடியதாக இருக்கும்.

பல சமயங்களில் இந்த போனிடெய்ல் ஹேர் ஸ்டைல் பொருத்தமாக அமையும். ஆபிஸ் முதல் உங்கள் எப்போதும் நெருக்கமாக இருக்கும் தோழியின் காக்டெய்ல் விருந்து வரை அனைத்திற்கும் பொருத்தமானதாக இருக்கும். இது ஒரு ஹேர் ஸ்டைலாகும். உங்களை தோற்றத்தை மீண்டும் பார்க்கும் போது சலிப்படையாமல் இருக்க இந்த ஹேர் ஸ்டைல் உறுதியளிக்கின்றது. இந்த கவர்ச்சியான போனிடெய்லை எப்படி வீட்டிருந்தபடியே செய்து கொள்வது என்று யோசிக்கிறீர்களா. கவலையேப்படாதீர்கள் இது அந்தளவுக்கு கடினமானதல்ல, வெறும் 10 நிமிடங்கள் போதும். க்ரிஸ்க்ராஸ் போனிடெய்லை எப்படி போட்டுக் கொள்வது என்பது பற்றிய படிப்படியான வழிகாட்டியை தருகின்றோம்.

 

க்ரிஸ்க்ராஸ் போனிடெய்ல்

க்ரிஸ்க்ராஸ் போனிடெய்ல்

வழிமுறை 01: பின்னத் துவங்கும் போது, உங்கள் கூந்தலை மூன்று பகுதிகளாக பிரித்துக் கொண்டும் ஆரம்பிக்கவும். இரண்டு சிறிய பகுதிகளை நெற்றியிலிருந்து கழுத்தின் பிடரி வரை கொண்டு செல்ல வேண்டும். அதிக முடியுள்ளப் பகுதியை நடுவில் விட்டுக் கொள்ள வேண்டும். ஒரு ஹேர்பேண்டால், உங்கள் நடுப்பகுதி முடியை கழுத்து பிடரிக்குச் சற்று மேலே ஒரு தாழ்வான போனிடெய்லை கட்டிவிடவும்

வழிமுறை 02: பிறகு இடது பக்கத்திலுள்ள முடியை மூன்று பாகங்களாக பிரித்துக் கொண்டு, முன்பக்க இடது பகுதியை எடுத்துக் கொண்டு, போனிடெய்ல் மீது வைக்கவும். அதன் வலது பக்கத்தின் மீது ஒரு ஹேர் ஸ்லைடை போடவும், பிறகு அதேபோல் முன்பக்க வலது பகுதியையும் அதன் மீது வைத்து ஸ்லைடை போடவும். ஹேர் பேண்ட் மீது ஒரு Xஐப் போல் இருக்கும்.

வழிமுறை 03: இடது பக்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் இரு பகுதிகளையும் ஒன்றாக சேர்க்கவும். இப்போது ஒன்றாக சேர்த்த பகுதிகளை ஹேர் பேண்ட்டின் அடிப்பகுதியில் கொண்டு சென்று, இரு ஸ்லைடுகள் போடவும். இதேபோல் வலது பக்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் தலைமுடியையும் செய்யவும்,

குறிப்பு: பின்பக்கத்தில் இழுத்து முடி போடுவதற்கு முன் தலைமுடியை முறுக்கிப் போட்டுக் கொள்ளும்போது அது ஸ்டைலுக்கான இலக்கணத்தைத் தருகிறது.