இன்று நாம் பைனாப்பிள்ளைப் பற்றி பேச போகிறோம்.(எச்சில் ஊறுகிறது) உங்களுக்கு இந்த பழம் மிகவும் பிடிக்கும் என்றால் இப்பொழுதே கூறிவிடுகிறோம் நாங்கள் இந்த பழத்தைப் பற்றி பேசப்போவதில்லை. நாங்கள் பேசவிருப்பது பைனாப்பிள் சிகையைப் பற்றி ஆகும்... ஆமாம் அது ஒரு பொருளே!

சரி நீங்கள் ஒரு முடிவுக்கு வரும் முன்பு பைனாப்பிள் வகை ஹேர்ஸ்டைல் சுருள் முடி கொண்டோருக்கு செய்யலாம். இதற்கான அங்கீகாரம் சற்று தாமதமாக கிடைத்தாலும், தற்போது உள்ள பிரபலங்களினால் இந்த அலங்காரம் இப்போது பிரபலமாகி உள்ளது.

நீங்கள் சுருள் மூடி சிகை கொண்ட பெண்ணாக இருந்தால் உங்களுக்கான இந்த அலங்கார செய்முறை இதோ...

 

ஒவ்வொரு சுருட்டை கூந்தல் உடைய பெண்கள் முயற்சிக்க வேண்டிய பைனாப்பிள் ஹேர்ஸ்டைல்

ஒவ்வொரு சுருட்டை கூந்தல் உடைய பெண்கள் முயற்சிக்க வேண்டிய பைனாப்பிள் ஹேர்ஸ்டைல்

செய்முறை 1 - ப்ரேப்

தொடக்கத்தில் Toni&Guy Casual Sea Salt Texturising Spray போன்ற ஸ்பிரே அடித்து உங்கள் சிகைக்கு ஒரு வடிவம் கொடுங்கள். பின்பு உங்கள் தலைமுடியை நன்கு கோதி உங்கள் சிகையை அடர்த்தியாக மாற்றுங்கள்.

செய்முறை 2 - போனிடெயில்

உங்கள் கூந்தலை ஒன்று சேர்த்து தலைக்கு மேலே போனிடைல் போடுங்கள். அது கலையாமல் இருக்க இறுக்கி கட்டுங்கள்.

செய்முறை 3 - டீஸ்

ஒரு நல்ல சீப்பை எடுத்து உங்கள் போனிடைலை நன்கு வாருங்கள். போனிடைல் சற்று அடர்த்தியாக இருந்தாலும் வாரும் பொது அதற்கு ஒரு வடிவம் கிடைக்கும் (ஒரு பைனாப்பிள்ளைப் போல).

செய்முறை 4 - டிவைட்

உங்கள் போனிடைலை இரண்டு பகுதியாக பிரித்து ஒரு பகுதியை நன்கு கலைத்து விடுங்கள். சற்று அழகாக இருக்க கிளிப்புகளை பயன்படுத்தலாம்.

செய்முறை 5 - பைனாப்பிள் பன்

மற்றொரு பகுதியை பண்ணாக்கி கிளிப்புகளால் நிறுத்தி வையுங்கள். கலைத்து விட்ட மற்றொரு பகுதியில் உள்ள சில முடிகள் உங்கள் முன்னந்தலைக்கு முன் விழுந்து ஆடி உங்கள் தலை ஒரு பைனாப்பிள்ளைப் போல அழகாக இருக்கும்.