நாம் ட்ரை செய்யாதது இல்லை. பேலேயாஜ், லோலைட்ஸ், மெர்மெய்ட் ஹேர்… 2021 இப்படி பலப் பல. ஆனால் பேபிலைட்ஸ் கேள்விப்பட்டிருக்கிறீர்களா… டகோடா ஜான்சன் போன்றவர்கள் ஏன் பேபி லைட்ஸுக்கு மயங்குகிறார்கள் என தெரியுமா… இதுதான் 2022ஆம் ஆண்டின் எக்ஸ்பிரிமன்ட். இதை செய்து பார்த்தீர்கள் என்றால் அடுத்த கட்டத்திற்கு நகர்கிறீர்கள் என்று அர்த்தம். 
 

  • பிரபலங்கள் பரிந்துரைக்கும் பேபிலைட்ஸ்
  • பேபிலைட்ஸ் என்றால் என்ன…
  • யார் பேபிலைட்ஸ் பயன்படுத்தலாம்…
  • பேபிலைட்ஸ் பயன்படுத்தும்போது பராமரிப்பு தேவையா…
  • பேபிலைட்ஸுக்கு என்ன மாதிரியான ஹேர்கட், கூந்தல் டெக்ஸ்சர் பொருத்தமாக இருக்கும்…

பிரபலங்கள் பரிந்துரைக்கும் பேபிலைட்ஸ்

 

புகைப்படம், நன்றி: @fernihood

இதுதான் ஃபைனல். பேலேயோஜ் காலாவதியாகிவிட்டது. ஒரு கலக்கு கலக்கிய பிறகு. பிரியங்கா சோப்ராவின் சமீபத்திய ஹேர்ஸ்டைலை இன்ஸ்ட்டாகிராமல் பார்த்திருப்பீர்கள். அதுதான் பேபிலைட்ஸ். ஃபிஃப்டி ஷேட்ஸ் ஆஃப் கிரே மூலம் பிரபலமடைந்த டகோடா ஜான்சன்கூட பிளான்ட் நிற பேபிலைட்ஸில் அசத்தினார். அது ஒரு அசத்தலான தோற்றம். ஜெனிஃபர் கார்னர், கேதரீன் மெக்ஃபீ ஆகியோரும் பேபிலைட்ஸ் முயற்சித்து பார்த்திருக்கிறார்கள். இவை வெறும் ஹைலைட்ஸ் அல்ல. தனியாகத் தெரியும் வகையிலானது. எப்படி என சொல்கிறோம். 

 

பேபிலைட்ஸ் என்றால் என்ன…

பேபிலைட்ஸ் என்றால் என்ன…

புகைப்படம், நன்றி: @_mymyhair

பெல்லா ஹதீத் பயன்படுத்தியது போல கூந்தலில் கலர் சேர்ப்பதுதான் பேபிலைட்ஸ். கூந்தலில் லைட் நிற ஹைலைட்ஸ் அப்ளை செய்வதுதான் இந்த ட்ரிக். பேபிலைட்ஸுக்கும் ஹைலைட்ஸுக்கும் கொஞ்சம் நெருக்கம் இருப்பது உண்மைதான். ஆனால் பேபிலைட்ஸ் தனது நாசூக்கான தோற்றத்தினால் அசத்தக்கூடியது. குறிப்பாக அடர்நிற கூந்தல் கொண்டவர்களுக்கு ஏற்றது.

 

யார் பேபிலைட்ஸ் பயன்படுத்தலாம்…

யார் பேபிலைட்ஸ் பயன்படுத்தலாம்…

புகைப்படம், நன்றி: @esbeautysf

உங்கள் தோற்றத்தை சிறிதளவு மட்டுமே மாற்ற விரும்புகிறீர்கள் என்றால் பேபிலைட்ஸ் உங்கள் சாய்ஸாக இருக்கவேண்டும்.  ஆம்ப்ரே, பேலேயோஜ் போல இது அதிரடியாக இருக்காது. லைட்டாக இருக்கும். அடர்த்தியான கூந்தலில் அல்லாமல் லைட்டான கூந்தலில் அப்ளை செய்வதுதான் பேபிலைட்ஸ். இதில் ஃபாயிலும் அதிகம் பயன்படுத்தப்படும்.

 

பேபிலைட்ஸ் பயன்படுத்தும்போது பராமரிப்பு தேவையா…

பேபிலைட்ஸ் பயன்படுத்தும்போது பராமரிப்பு தேவையா…

புகைப்படம், நன்றி: @by_vero_maravilla

அதிக பராமரிப்பு தேவைப்படாத ஹேர்ஸ்டைல் இது. கூந்தலுக்கு ரீ கலர் செய்ய ஆறு வாரம் வரை போக வேண்டியதில்லை. கூந்தல் வளர வளர பேபிலைட்ஸ் இன்னும் அழகாக ஜொலிக்கும் என்பது கூடுதல் ப்ளஸ். கலர் செய்யப்பட்ட கூந்தல் மெல்லிசானது என்பதால் கூந்தலுடன் அது நன்றாக இணைந்துகொள்ளும். அடிக்கடி டச் அப் செய்ய வேண்டியதில்லை. சாஃப்ட்டான, பிரைட்டான தோற்றம் காண்போரை கவர்ந்திழுக்கும்.

 

பேபிலைட்ஸுக்கு என்ன மாதிரியான ஹேர்கட், கூந்தல் டெக்ஸ்சர் பொருத்தமாக இருக்கும்…

பேபிலைட்ஸுக்கு என்ன மாதிரியான ஹேர்கட், கூந்தல் டெக்ஸ்சர் பொருத்தமாக இருக்கும்…

புகைப்படம், நன்றி: @pvzhair

சில வகை கூந்தலுக்கான் பயன்படுத்த முடியும் என்பது போன்ற தடைகள் பேபிலைட்ஸுக்கு கிடையாது. ஃப்ளாட் பாப், நீளமான லேயர், ப்ரெய்ட் சிகை அலங்காரம் எல்லாவற்றுக்கும் நன்றாக பொருந்தும். ஆனால் சரியான ஹேர்கேர் பயன்படுத்துவது அவசியம். ஹேர் கலரின் ஆயுள் அதிகமாக வேண்டும் என்பதற்காக TRESemmé Pro Protect Sulphate Free Shampoo And Conditioner போன்ற சல்ஃபேட் இல்லா ஷாம்பூ, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். மொரோக்கோ தேசத்து அர்கன் ஆயில் இதில் இருப்பதால் கூந்தலுக்கு நல்ல ஊட்டச் சத்து கிடைக்கும். இதில் பாராபென், சல்ஃபேட் ஆகியவை சேர்க்கப்படவில்லை என்பது குட் நியூஸ். ஆனால் அடிக்கடி ஹீட் ஸ்டைலிங் பயன்படுத்தக்கூடாது என்பது ஒரு நிபந்தனை. அதே போல தினமும் ஹேர் வாஷ் செய்யக்கூடாது. அப்படி செய்தால் கலர் போய்விடும்.