மணப்பெண் சிகையலங்காரங்கள் இன்று பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டை பின்பற்றி செய்யப்படுகிறது. மலர் மகுடங்கள், படங்களை பார்த்து செய்யப்படும் வேவ்ஸ் மற்றும் இன்னும் பலவை உள்ளன, உங்களின் திருமண நாளுக்கு நீங்கள் முயற்சி செய்து பார்க்கக் கூடிய ஒரு சில சிகை அலங்காரங்கள் பற்றி இங்கே கொடுக்கப்பட்டுள்ளன....

tresemme ionic strength shampoo

ஹேர்ஸ்டைல் செய்துக் கொள்வதற்கு முன்பு டிரெஸெம்மி ஐயோனிக் ஸ்ட்ரென்த் ஷாம்பூ மற்றும் கண்டிஷனர் உடன் உங்கள் முடியை அலசி மற்றும் கண்டிஷன் செய்துக் கொள்ளவும். சலூன் தரமுள்ள ஐயோனிக் காம்ப்ளக்ஸ் உடன் உருவாக்கப்பட்ட அது, முடியை நேராக்க உதவுவதோடு, எந்தவொரு விதமான ஹேர்ஸ்டைலுக்கும் கேசத்தை தயார்படுத்தி விடுகிறது.

 

உங்கள் முடியை அலங்கரித்தல்

உங்கள் முடியை அலங்கரித்தல்

மிகவும் சிம்பிளான ஒரு ஹேர்ஸ்டைலுக்கு மலர்களை சூடி அலங்கரியுங்கள். உங்கள் தோற்றத்துக்கு சிறிது கவர்ச்சியை கொடுப்பதற்காக முத்துகள், வைரங்கள் போன்றவை பதித்த ஆபரணங்களை கூட நீங்கள் அணிந்துக் கொள்ள முடியும்.

 

செய்வதற்கு எளிதான ஹேர்ஸ்டைல்கள்

செய்வதற்கு எளிதான ஹேர்ஸ்டைல்கள்

உங்கள் சிகையை அலங்கரிப்பதில் நீங்கள் மிக அதிக நேரம் செலவிட விரும்பவில்லை எனில், லேசாக சுருண்ட முடியை ஒரு தளர்வான பன் கொண்டையாக போட்டுக் கொள்வது போன்ற செமி&ஃபார்மல் ஹேர்ஸ்டைலை நீங்கள் தேர்வு செய்ய முடியும். ஒரு மாங்க்&டிக்கா உடன் அணிந்துக் கொண்டால், அது குறிப்பிட்ட சில திருமண நிகழ்ச்சிகளுக்கு கச்சிதமாக பொருந்தும்.

 

சங்கீத்துக்கான ஹேர்ஸ்டைல்

சங்கீத்துக்கான ஹேர்ஸ்டைல்

சங்கீத் நிகழ்வில் பாட்டும், நடனமும் களை கட்டும் என்பதால் உங்கள் ஹேர்ஸ்டைலில் புதுமைகளை பரிசோதிக்க பயப்படாதீர்கள். ஆட்டமும், பாட்டமும் நடக்கும் அந்த இரவுக்கு பெரிய ஜம்காஸ் அணிந்த ஹெவி வேவ்ஸ் மிகச் சரியாக இருக்கும்.

முக்கிய நாளுக்கான ஹேர்ஸ்டைல்

ஒரு பாரம்பரிய தோற்றத்தை உருவாக்கி கொள்ளுங்கள் மற்றும் உங்களின் முக்கிய திருமண நாளில் ஒரு பிரெய்ட் அணிந்துக் கொள்ளவும். அதனை சுற்றிலும் பூக்களை சூடி, தங்க அணிகலன்களை அணிந்து இயன்றவரையில் ஃபேன்சியாக தோன்றச் செய்து விடலாம்.

 

உங்கள் தலைமுடியில் பூக்களை பயன்படுத்தவும்

உங்கள் தலைமுடியில் பூக்களை பயன்படுத்தவும்

ஒரு இந்திய மணப்பெண் என்ற முறையில், உங்களின் முக்கிய நாளன்று மலர்களால் தலைமுடியை அலங்கரிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும். உங்கள் காதுக்கு பின்னால் டெய்சிகளை வைத்துக் கொள்வது அல்லது மல்லிகை சரத்தை உங்கள் பன் மீது வைத்துக் கொள்வது என்று எதை நீங்கள் தேர்வு செய்தாலும் சரி, உங்களுக்கான மணப்பெண் சிகை அலங்காரத்தை மலர்களை சூடி முடிப்பது உங்களின் அழகை மேலும் அதிகரிக்கச் செய்திடும்.

படம் உதவி
பின்டெரஸ்ட்