இது திருமண காலம்! திருமணம் செய்து கொள்பவர்கள் திருமண ஏற்பாடு முழு மூச்சில் இருக்கின்றனர். மிகவும் அழகான லெஹெங்கா, அலங்காரம், அழைப்பிதழ், உணவு மற்றும் வேறு சின்னச்சின்ன விஷயங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றிற்கு நீங்கள் அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். இருப்பினும், இப்போது ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டிய தருணம்; மேலும் திருமணத்தன்று நீங்கள் மிகவும் அழகாக இருப்பதற்காக ஸ்கின்கேர், மற்றும் கூந்தல் பராமரிப்பு போன்ற வழக்கமானவைகளையும் செய்து கொள்ள வேண்டும்.

முதலில் நீங்கள் தலைமுடியிலிருந்து துவங்கவும். திருமணத்திற்கு சில வாரங்கள் முன்பிருந்து தொடர்ந்து உங்கள் தலைமுடி பராமரிப்பதற்கான சில எளிதான மற்றும் பயனுள்ள டிப்ஸ்களை நாங்கள் தருகிறோம்.

 

ஆழமான கண்டிஷனிங் சிகிச்சை.

ஆழமான கண்டிஷனிங் சிகிச்சை.

உங்கள் தலைமுடியை ஆழமான கண்டிஷனிங் சிகிச்சை செய்து கொள்ளுங்கள் நகரத்திலுள்ள மிகவும் பிரபலமான அழகுக் கலை நிலையத்திற்குச் சென்று செலவு செய்ய வேண்டும் என்று அர்த்தம் இல்லை. நீங்கள் வீட்டிலேயே செய்து கொள்ளலாம். உண்மையில், நீங்கள் அன்றாடம் உபயோகிக்கும் வாழைப்பழம், வெண்ணெய், ஆலிவ் ஆயில் முதலிய உங்கள் வீட்டு சமையலறையில் இருக்கும் பொருட்களைக் கொண்டே நீங்கள் ஆழமான கண்டிஷனிங் சிகிச்சையை செய்து கொள்ளலாம். நீங்களே செய்து கொள்வதற்கு உங்களுக்கு நேரமில்லையெனில், Tresemme Keratin Smooth Deep Smoothing Mask பூசிக் கொள்ளலாம். தலைமுடியில் ஏற்படும் சிக்கு மற்றும் வறட்சி. சடைமுடி போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்த உதவக் கூடிய கெராடின்மற்றும் மரூலா ஆயில் இந்த மாஸ்க்கில் உள்ளது.

 

தலைமுடியை அடிக்கடி அலசக் கூடாது.

தலைமுடியை அடிக்கடி அலசக் கூடாது.

உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது மிக அவசியம். அதற்காக முடியை அடிக்கடி தண்ணீரில் அலசக் கூடாது. வாரத்தில் 2 நாட்கள் மட்டுமே ஷேம்பு தலைக்குக் குளிக்க வேண்டும். உங்கள் பிசுகுள்ளதாக தோன்றினால், கொஞ்சம் உலர் ஷேம்புகளை தெளித்து அவற்றை புத்துணர்ச்சிப் பெறச் செய்து கொள்ளலாம். பிசுபிசுப்புத் தன்மையிலிருந்து விடுபடுவதற்கும், கூந்தல் அடர்த்தியாகவும் வளர்வதற்கும் TIGI Bed Head Oh Bee Hive Matte Dry Shampoo சரியாக செயல்படும். திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகளில் இதை கையடக்கமாக வைத்துக் கொள்ளலாம்.

 

தொடர்ந்து எண்ணெய் தடவ வேண்டும்.

தொடர்ந்து எண்ணெய் தடவ வேண்டும்.

இந்திய பாரம்பரியத்தில் தலையில் எண்ணெய் தடவிக் கொள்வது ஒரு மிக முக்கிய பங்காகும். இது உங்களுடைய தலைமுடி மற்றும் உச்சந்தலைக்கு மட்டுமல்லாமல் உங்கள் மனதிற்கும் இதமளிக்கக் கூடியது. உங்களுடைய லாக் லுக் அடர்த்தியாகவும், கவர்ச்சியாகவும் மாற்றுவதற்கு, சில இயற்கை பொருட்களை எண்ணெயுடன் சேர்த்துக் கொள்ளுங்கள். எஸன்ஷியல் ஆயில், வெந்தய எண்ணெய். வேப்ப எண்ணெய் மற்றும் தேன் போன்ற சில பொதுவான பொருட்களை தலைமுடி எண்ணெய் சிகிச்சைக்கு உபயோகப்படுத்த வேண்டும். இதற்கு மாற்றாக, ஆயுர்வேத தொடர்புடைய Lever Ayush Ayurvedic Bhringaraj Hair Oil உபயோகப்படுத்தலாம். நெல்லி. ப்ரிங்ராஜ் மற்றும் நல்லெண்ணெய் போன்றவற்றின் நற்குணங்கள் உட்செலுத்தப்படும்போது, தலைமுடி நன்கு வளருவதற்கு தேவையான ஊட்டத்தையும், வலிமையையும் பெறுகின்றன.

 

முடியை டிரிம் செய்ய வேண்டும்

முடியை டிரிம் செய்ய வேண்டும்

உங்களுடைய தலைமுடி மெல்லியதாகவும், குட்டையாகவும் இருக்குமானால், முடியை ட்ரிம் செய்து கொள்வதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் முடி பிளவுபடுவதை தவிர்க்க முடியும். ஆரோக்கியமான லுக்கிற்கு உங்கள் தலைமுடியை 4-6 வாரத்திற்கு ஒரு முறை ட்ரிம் செய்து கொள்வது நல்லது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர், இவை தலைமுடி நன்கு வளர்ச்சியடைய செய்யும், மட்டுமல்லாமல் முடி உடைவதையும் குறைக்கும்

 

பளபளப்பை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

பளபளப்பை அதிகரிக்கும் உணவுகளை உண்ண வேண்டும்.

வெளியிலிருந்து உங்கள் முடிக்கு சிகிச்சை அளிப்பதோடு, உங்கள் தலைமுடிக்கு நன்மை தரக்கூடிய நல்ல உணவுகளை உண்பதும் மிக முக்கியமானதாகும். தலைமுடி நன்கு வளர்வதற்கும், பளபளப்பை அதிகரிப்பதற்கும் புரோட்டீன், பயோட்டின், அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் போன்றவைகள் மிக அவசியமாகின்றன. பொலிவிழந்த கூந்தலை மீண்டும் பொலிவை தர முட்டை, மீன், நட்ஸ், விதைகள், பச்சை இலைக் காய்கறிகள் முதலியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நகங்கள், சருமம் மற்றும் உங்கள் தலைமுடியை ஆரோக்கியத்தை அதிகரிக்க பயோட்டின், ஃபாலிக் அமிலம், ஒமேகா 3, 6,9 மற்றும் அமினோ அமிலங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம்.

Main image courtesy: @ritikahairstylist