எங்கும் இதே பேச்சு ! இந்த பண்டிகைக் காலத்தில் கலக்க வருகிறது 5 டிரெண்டியான பேங் ஸ்டைல்கள்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
எங்கும் இதே பேச்சு ! இந்த பண்டிகைக் காலத்தில் கலக்க வருகிறது 5 டிரெண்டியான பேங் ஸ்டைல்கள்

வீட்டுக்குள்ளேயே இருப்பதில்கூட ஏதோ ஒன்று நன்மை இருக்கிறது, அது நம் அனைவரையும் ஒரு ஜோடி கத்தரிக்கோலை கையில் எடுக்கச் செய்து , நம் தலைமுடியை நாமே நம்முடைய விருப்பத்திற்கேற்ப வெட்டி வைத்திருக்கிறது. நாம் தொடர்ந்து சோதனை செய்து கொண்டிருக்கும்போது நம் முயற்சியில் ஒரு சில சமயங்களில் தோல்விகளை சந்தித்தாலும், பேங்க்ஸ் இருக்க வேண்டும் என்று தெளிவாகத் தெரிந்தது. மேலும் பண்டிகைக் காலம் விரைவில் வரவிருக்கின்றது. இந்நிலையில், நீங்கள் உங்கள் தலைமுடியை மாற்றிக் கொள்ள விரும்பினால், உங்களைச் சரியான வழியைக் காட்ட நாங்கள் இங்கே இருக்கிறோம். ஒவ்வொரு முகத்திற்கும் பொருந்தக்கூடிய முகத்தை வடிவமைப்பது முதல் நெற்றி மற்றும் பின்கழுத்து வரையிலான பேங் சிகையலங்காரங்களால், இந்தப் பண்டிகை காலத்தில் உங்கள் தோற்றத்தை அழகுப்படுத்திக் கொள்ளுங்கள். அடுத்த முறை நீங்கள் சலூனுக்கு செல்கையில் இந்த பேங்கை செய்து கொள்ளுங்கள் அல்லது நீங்களே முயற்சிக்கவும்!

 

01. கர்ட்டன் பேங்க்ஸ்

05. பிர்கின் பேங்க்ஸ்

பட உதவி: @priyankachopra

 

உண்மையைச் சொல்லப் போனால், நாம் எப்போதுமே கர்ட்டன் பேங்க்ஸ் ஸ்டைலை கொஞ்சம் இரண்டாம் நிலையில்தான் வைத்துப் பார்ப்போம். நீண்ட, இறகுகளைப் போன்ற வடிவமைப்பைக் கொண்ட பேங்க்ஸ் உங்கள் முகம் முழுவதையும் வெளிக்காட்டாது., அதற்குப் பதிலாக உங்கள் முகத்தை அழகாக வடிவமைக்க முடியும், புறக்கணிக்க முடியாத கடினமாக இருக்கும் ஒரு சுட்டிப் பெண்ணின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் போது கூந்தலில் கூடுதல் துள்ளல்களை சேர்க்கின்றன. கூடுதலாக, இந்த ஹேர்ஸ்டைலை ​​​​செய்து  கொள்வது மிகவும் எளிதானது. இப்போது உங்கள் ஹேர்ஸ்டைலை  இரண்டு முறை நீங்களே செய்து பார்ப்பது மிகவும் நல்லது!

 

 

 

 

02. விஸ்பி பேங்க்ஸ்

05. பிர்கின் பேங்க்ஸ்

பட உதவி: @taylorhill

இவற்றை 'பேங்க்ஸ் என்று அழைக்க விரும்பினாலும், எந்தவித ஈடுபாடும் கொள்ளாமல், இவை மென்மையான மிக நன்றாகவும் இருக்க முடியாது. இறகுகள்ப் போன்ற முனைகளையும் மென்மையான உணர்வுடனும் இருக்கும் இந்த பேங்க்ஸ் எல்லாவித பண்டிகைக் காலத்திலும் விருப்பமான இருக்கும்.

 

03. மைக்ரோ பேங்க்ஸ்

05. பிர்கின் பேங்க்ஸ்

பட உதவி: @bellahadid

பட்டியலில் மிகவும் பின்னால் உள்ளதுதான் இந்த மைக்ரோ பேங்க்ஸ். இந்த பேங்க்ஸ் மட்டும் விரைவில் பிரபலமடைந்ததால், இவை மக்கள் இணையத்தைப் பார்த்து ஹேர்ஸ்டைல் செய்வதிலிருந்து விலக்கி வைத்து விடுவார்கள். இருப்பினும், இந்த பண்டிகைக் காலத்தில் நீங்கள் கொஞ்சம் தனித்துவமாகவும், கொஞ்சம் வித்தியாசமாகவும், கொஞ்சமும் கவலைப்படாமலிருக்க விரும்பினால், நீங்கள் நிச்சயமாக இந்த ஹேர்ஸ்டைலைத் தேர்வுசெய்ய வேண்டும்!

 

04. ப்ளண்ட் பேங்க்ஸ்

05. பிர்கின் பேங்க்ஸ்

பட உதவி: @zooeydeschanel

நெற்றியிலிருந்து கழுத்து வரை, கொஞ்சம் அடிப்படை, தேர்வு செய்வதற்கான நம்பிக்கை போன்றவைதான் இந்த பேங்க்ஸின் உண்மையான விளக்கமாகும். உங்கள் நெற்றியிலிருந்து நேராக முடியை கட் செய்ய வேண்டும். இவற்றைப் பராமரிப்பது மிகவும் எளிது. மற்றும் செயல்படுத்துவது அதைவிட எளிதாகும், மேலும் இது யதார்த்தமாக இருக்கும் - நம் வாழ்வில் ஒரு கட்டத்தில் மழுங்கிய பேங்க்ஸ் ஸ்டைலை நாம் அனைவருமே செய்து கொண்டோம். நீங்கள் இல்லையென்று மறுத்தாலும், அனைவருக்கும் இந்த லுக் நன்றாக இருக்கும் என்கிறபோது இதைப் பரிசோதனை செய்ய, இந்தப் பண்டிகைக் காலமே சரியான நேரமாகும்.

 

05. பிர்கின் பேங்க்ஸ்

05. பிர்கின் பேங்க்ஸ்

பட உதவி: @mimikeene3

இதற்கு ஜேன் பர்கின் என்றுபெயரிடப்பட்டிருந்தாலும் இதை பர்கின் பைகளுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம். பிர்கின் பேங்க்ஸ் என்பது மிகவும் மென்மையானதாகும். நெற்றியை முழுமையாக மறைத்தும், உங்கள் புருவங்கள் முடி விழும் ஹேர்ஸ்டைலே பர்கின் பேங்க்ஸ் ஆகும். ப்ளண்ட் பேங்க்ஸ் விட சிதறியும், மற்றும் கொஞ்சம் மென்மையாகவும் இருக்கும், ஆனால் பொய் கூறவில்லை, அவை மிகவும் அழகாகவே இருக்கின்றன. இவற்றைப் பராமரிப்பதற்கும் கொஞ்சம் சிரமங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும், மேலும் அவை உங்கள் கண்களில் மேல் விழாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும், ஆனால் அழகாக இருப்பதற்காக நாம் தருவது மிகக் குறைந்த விலையாகும்.

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
539 views

Shop This Story

Looking for something else