உங்கள் திருமணத்திற்கு முந்தைய சடங்கு, சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்கான 5 பிரபலங்களை ஈர்த்த ஹேர் ஸ்டைல்கள்

Written by Kayal ThanigasalamNov 30, 2023
உங்கள் திருமணத்திற்கு முந்தைய சடங்கு, சம்பிரதாய நிகழ்ச்சிகளுக்கான 5 பிரபலங்களை ஈர்த்த ஹேர் ஸ்டைல்கள்

உங்கள் திருமணத்திற்கான ஆடை, மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல் போன்றவற்றைத் திட்டமிட்டு, அதை வாங்குவது ஒன்றும் பெரிய வேலையில்லை, பெண்களான நமக்கு மெஹந்தி, ஹல்டி மற்றும் சங்கீத் போன்ற நிகழ்ச்சிகளில், நம்முடைய லுக்கைப் பற்றிய பெருமூச்சும் கூடிய பெரும் கவலையம் நமக்கு இருக்க வேண்டும். ஆனால், நாங்கள் இருக்கும் போது நீங்கள் ஏன் பயப்பட வேண்டும். நமக்கு மிகவும் பிடித்தமான பிரபலங்களிடமிருந்த பெற்ற குறிப்புகளிலிருந்து, ஐந்து அழகான சிகை அலங்காரங்களை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். அதை உங்கள் திருமணத்திற்கு முந்தைய அனைத்து நிகழ்ச்சிகளிலும் நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். எனவே, உங்களுக்குப் பிடித்தவற்றை இப்போதே தேரந்தெடுத்தது வைத்துக் கொள்ளுங்கள்செய்யுங்கள்!

 

01. நிச்சயதார்த்தத்திற்கு - சோனம் கபூர் அஹுஜாவைப் போல பிஜொவ்ல்வ்ட் ஹை கொண்டை

05. சங்கீத இரவுக்கு - பத்ரலேகா போன்ற கஜ்ரா சுற்றப்பட்ட பின்னல்

 Image Courtesy: @sonamkapoor 

உங்கள் நிச்சயதார்த்தத்திற்கான ஆடையை எப்படி வடிவமைப்பது என்று உங்களுக்குத் தெரியவில்லையோ அதேபோல் தான், உங்கள் ஹேர் ஸ்டைலைப் பற்றியும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம்! சோனம் கபூர் அஹுஜாவின் இந்த பிஜொவ்ல்வ்ட் ஹை கொண்டையைப் பார்த்து நாங்கள் மிகவும் பிரமித்தோம். இது உங்கள் தலைமுடிக்கு ஒரு கம்பீரமான, மற்றும் புதுப்பாணியான லுக்கை உங்களுக்கு அளிப்பதுடன், தலைமுடி அழகுப் பொருட்களும் இதற்கு உயர்ந்த தோற்றத்தையும் தருகிறது.

 

02. மெஹந்திக்கு - ஷனாயா கபூர் போன்ற ஸ்லீக் பின்னல் கொண்டை

05. சங்கீத இரவுக்கு - பத்ரலேகா போன்ற கஜ்ரா சுற்றப்பட்ட பின்னல்

Image Courtesy: @tanghavri

இந்திய திருமணங்களுக்கு செல்லும் போது நீங்கள் ஒருபோதும் தவறான கொண்டையை போட்டுக் கொண்டு செல்ல முடியாது. அதனால்தான் ஷனயா கபூரின் ஸ்லீக் பின்னல் கொண்டையின் மீது எங்களுக்கு மிகவும் விருப்பமாக உள்ளது. உங்களுடைய மெஹந்தி நிகழ்ச்சிகளுக்கு எந்தவித பிரச்னையுமில்லாத மற்றும் மிகவும் நேர்த்தியான கொண்டைதான் உங்கள் தலைமுடிக்கு மிகவும் ஏற்றது. அதே நேரத்தில் இந்த அழகான மொக்ரா கஜ்ரா மணப்பெண்களுக்கு அனைத்துவிதமான உணர்வுகளையும் சேர்க்கிறது! எனவே, இதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

 

03. பேச்லரேட் பார்ட்டிக்கு - பூஜா ஹெக்டேக்கு இருப்பது போன்ற மென்மையான சுருட்டை

05. சங்கீத இரவுக்கு - பத்ரலேகா போன்ற கஜ்ரா சுற்றப்பட்ட பின்னல்

Image Courtesy: @hegdepooja

சந்தேகம் இருந்தால், உங்கள் தலைமுடியை அவிழ்த்து விட்டுக் கொள்ளுங்கள்! பூஜா ஹெக்டேயின் ஸ்டைல் ​​புத்தகத்தில் இருந்து ஏதாவது ஒரு ஸ்டைலை தேர்ந்தெடுத்து, உங்கள் காக்டெய்ல் அல்லது பேச்லரேட் பார்ட்டிக்கு செல்வதற்காக, உங்கள் தலைமுடியை மென்மையான சுருட்டை ஸ்டைல் ​​செய்து கொள்ளுங்கள். பளபளப்பான, மின்னும் மேக்கப் மற்றும் அலை அலையான, மென்மையான சுருட்டையுடன் கூடிய ஒட்டுமொத்த அழகிய மற்றும் உயர்தரமான குறைந்தபட்ச தோற்றத்தை பெறும் அளவுக்கு உங்கள் தலைமுடியை ஸ்டைல் ​​செய்யவும். தலைமுடிக்கான இதர அழகு பொருட்களையும் இந்த ஸ்டைலுடன் சேர்ப்பதன் மூலம் உங்கள் தலைமுடியை அழகை மேம்படுத்தலாம்.

 

04. ஹல்டிக்கு - கியாரா அத்வானி போன்ற லேஸ்டு ஃபிஷ்டெயில் பின்னல்

05. சங்கீத இரவுக்கு - பத்ரலேகா போன்ற கஜ்ரா சுற்றப்பட்ட பின்னல்

Image Courtesy: @kiaraaliaadvani

உங்கள் ஹல்டிக்கு, கியாரா அத்வானியின் நல்ல ஃபிஷ்டெயில் பின்னலின் இந்த அழகான ஹேர் ஸ்டைலுடன் செல்லுமாறு பரிந்துரைக்கிறோம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், மற்றவரகளை கவர்ந்திழுக்கும் ஃபிஷ்டெயில் பின்னலுடன், ஒரு தங்க நிற செயின் மற்றும் சரிகையை சேர்த்துக் கொண்டால் உங்களுடைய ஹேர் ஸ்டைல் அழகின் உச்சத்தை அடையும். இந்த ஹேர் ஸ்டைல் உங்கள் உங்கள் முகத்தில் விழாமல் விலகியிருப்பதோடு. இது ஹல்டி நிகழச்சியின்போது உங்கள் தலைமுடி கலைந்து மோசமாகாமல் பார்த்துக் கொள்ளும், மேலும் எந்தவித அழுத்தமுமின்றி ஹல்தி நிகழ்ச்சியை நீங்கள் நன்கு அனுபவிக்கலாம்.

 

05. சங்கீத இரவுக்கு - பத்ரலேகா போன்ற கஜ்ரா சுற்றப்பட்ட பின்னல்

05. சங்கீத இரவுக்கு - பத்ரலேகா போன்ற கஜ்ரா சுற்றப்பட்ட பின்னல்

Image Courtesy: @patralekhaa

உங்கள் சங்கீத நைட்டில், இரவில் நடனமாட வேண்டும் என்று நீங்கள் திட்டமிடும்போது, ​​புதிதான திருமணமான பத்ரலேகாவிடம் இருந்து ஒரு ஹேர் ஸ்டைலைப் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். எளிமையான மூன்று இழைகள் கொண்ட பின்னலாகப் போட்டுக் கொண்டு ஸ்டைல் ​​​​செய்து கொள்ளுங்கள், மேலும் இதன் லுக்கை மேலும் மெருகேற்ற ஒரு நீண்ட மோக்ரா கஜ்ராவினால் நன்றாக சுற்றிக் கொள்ள வேண்டும். இத்தகைய பிரச்னையற்ற ஹேர் ஸ்டைல் மிகவும் அழகாகவும், பிரமிப்பையும் ஏற்படுத்தும்

Main Image Courtesy: @sonamkapoor , @patralekhaa

Kayal Thanigasalam

Written by

Author at BeBeautiful.
599 views

Shop This Story

Looking for something else