இத்தகைய நன்மைகள் ஒவ்வொன்றையும் எங்கிருந்து மீண்டும் திருப்பிப் பெற முடியும் என்று உங்களுக்குத் தெரியுமா? நீராவியில் காய்ச்சி வடிகட்டிய உயர்தரமான வெங்காய-பல்ப் எண்ணெய், ஆர்கானிக் தேங்காய் எண்ணெய் மற்றும் தூய கருப்பு விதை எண்ணெய், மற்றும் இந்தோனேசியாவில் தருவிக்கப்பட்ட கையால் பறிக்கப்பட்ட உட்செலுத்தப்பட்ட பச்சௌலியின் வாசனை முதலியவற்றை ஒரு மறுசுழற்சி செய்யக்கூடிய பாட்டிலில் கிடைக்கும், ஆம், நாங்கள் Love Beauty & Planet Onion Blackseed & Patchouli Hair Fall Control Sulfate Free Shampoo. வைப் பற்றித் தான் பேசுகிறோம். குறிப்பாக உங்கள் முடி உடைவதைக் குறைக்கவும், உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் விரும்பினால், நீங்கள் மிக விரைவாக இந்த ஷாம்புவில் முதலீடு செய்ய வேண்டும் அதற்கான 5 காரணங்களைப் பற்றி இக்கட்டுரையில் விளக்கியிருக்கிறோம்.
- 01. உடைவதைக் குறைக்கிறது
- 02. தொற்றுகளை விரட்டுகிறது
- 03. அரிப்புகளை தடுக்கிறது
- 04. முன்கூட்டியே நரை ஏற்படுவதை தடுக்கிறது
- 05. கூந்தலுக்கு பளபளப்பை அதிகரிக்கிறது
01. உடைவதைக் குறைக்கிறது

வெங்காயத்தில் கந்தகத்தின் குணமுள்ளது. ஆகையால், இது சருமத்தின் நுண்ணறைகளின் மீளுருவாக்கம் செய்வதில் கந்தகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இது முடி உடைவதைக் குறைத்து, முடி உதிர்வதைத் தடுக்கிறது. இது அடர்த்தியான மற்றும் வலிமையான முடியை ஆதரிப்பதால், இது வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் முடி உதிர்வை குறைக்கிறது. கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க கந்தகம் உதவுகிறது. இதனால் முடிகள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறும். வெங்காயம் நம் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதால், முடியின் வளர்ச்சியை இது அதிகரிக்கிறது.
02. தொற்றுகளை விரட்டுகிறது

வெங்காயத்தில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை காளான்களை எதிர்க்கும் பண்புகள் இருப்பதால், இது உச்சந்தலையில் தொற்றுநோய் பரவாமல் தடுத்து, சேதம் ஏற்படாமல் காக்கின்றது. பொடுகு மற்றும் பேன் போன்றவற்றை அழிக்கக்கூடிய திறன்கள் வெங்காயத்தில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தொற்று நோயால் பாதிக்கப்பட்ட உச்சந்தலையில் முடி இழப்பு ஏற்படலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
03. அரிப்புகளை தடுக்கிறது

வீக்கத்தை குணப்படுத்தும் தன்மை வெங்காயத்தில் நிரம்பியுள்ளன. இந்த தன்மையினால் அரிப்பு, வீக்கம் மற்றும் உச்சந்தலை வறட்சி போன்றவற்றை குணப்படுத்தவும், நுண்ணறைகளை வலுப்படுத்தவும் உதவுகிறது.
04. முன்கூட்டியே நரை ஏற்படுவதை தடுக்கிறது

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெங்காயத்தில் நிறைந்துள்ளன. சருமத்திலுள்ள நுண்ணறைகளை அழித்து, முடி மெலிவதற்கு வழிவகுக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடக்கூடிய ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெங்காயத்தில் நிறைந்திருக்கின்றன மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பிலிருந்து முடியைப் பாதுகாக்கின்றன. அவை நரைமுடி ஏற்படுவதை தாமதப்படுத்தி, முன்கூட்டிய நரை விழுவதையும் தடுக்கிறது.
05. கூந்தலுக்கு பளபளப்பை அதிகரிக்கிறது

ஒரு குறிப்பிட்ட காலவரையறையில், உங்கள் தலைமுடிக்கு இயற்கையான பிரகாசத்தை வெங்காயத்தினால் கிடைக்கிறது. மேலும் உங்கள் பொலிவற்ற மற்றும் உயிரூட்டமற்ற கூந்தலுக்கு இது உயிர் கொடுக்கிறது. உங்கள் தலைமுடியின் பொலிவை மீட்டெடுப்பதற்கு இயற்கையான காய்கறி இருக்கும்போது, நீங்கள் இரசாயன சிகிச்சையைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
Written by Kayal Thanigasalam on Dec 29, 2021
Author at BeBeautiful.