எல்லோரும் தவறாமல் பயன்படுத்தும் அடிப்படையான கூந்தல் பராமரிப்பு என்றால் ஷாம்பூ, ஹேர் கண்டிஷனர் பயன்படுத்துவதாகத்தான் இருக்கும். அதில் நாம் கரை கண்டுவிட்டோம் என்று பலருக்குத் தோன்றலாம். ஆனால் அதில் பொதுவாக செய்யப்படும் பிழைகள் பல உள்ளன. அதனால் ஹேர் கண்டிஷனர் பயன்படுத்தும் போது செய்ய வேண்டிய, செய்யக்கூடாத ஐந்து விஷயங்களை இங்கே பட்டிலிடுகிறோம்.
- 01. தலையில் அல்ல, கூந்தலில்தான் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்
- 02. சூடான நீரில் கூந்தலை அலசக்கூடாது
- 03. உடனடியாக வாஷ் செய்யக்கூடாது
- 04. கூந்தலில் அதிகமாக இருக்கும் நீரை நீக்க வேண்டும்
- 05. கூந்தலில் சரிசமமாக கண்டிஷனர் அப்ளை செய்ய வேண்டும்
01. தலையில் அல்ல, கூந்தலில்தான் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும்

தலைக்கு ஷாம்பூ கூந்தலுக்கும் அதன் நீளத்திற்கும் கண்டிஷனர். இதை எப்போதும் மறக்காதீர்கள். ஷாம்பூவுடன் ஒப்பிடும் போது கண்டிஷனரின் ஃபார்முலா ஹெவியாக இருக்கும். கூந்தலுக்கு பதில் தலையில் அப்ளை செய்யும் போது அதில் தலையில் படிந்து தேங்கிவிடும். அதனால் கூந்தலுக்கு மட்டுமே கண்டிஷனர், தலைக்கு அல்ல.
02. சூடான நீரில் கூந்தலை அலசக்கூடாது

கிளைமேட் எப்படி இருந்தாலும் சூடான நீரில் கூந்தலை அலசக்கூடாது. குளிர்ந்த நீரில்தான் கண்டிஷனரை அலச வேண்டும். குளிர்ந்த நீரில் அலசும் போது கூந்தலில் உள்ள ஈரப் பதம் காக்கப்படும். இதனால் கூந்தலில் பிசுறு ஏற்படாமல் பொலிவுடன் இருக்கும்.
03. உடனடியாக வாஷ் செய்யக்கூடாது

கண்டிஷனரின் பலன்கள் முழுமையாகக் கிடைக்க வேண்டுமா… கூந்தலில் 3-5 நிமிடம் அப்படியே விட வேண்டும். கூந்தலுக்கு ஊட்டச் சத்தும் கண்டிஷனிங்கும் நடப்பதை அது உறுதி செய்யும். அதனால் TRESemmé Keratin Smooth With Argan Oil Conditioner போன்ற நல்ல கண்டிஷனர் கூந்தல் நுனி வரை அப்ளை செய்த பிறகு ஒரு சில நிமிடங்கள் அப்படியே விடுங்கள். பிறகு குளிர் நீரில் அலசுங்கள். கெராடின், அர்கன் ஆயில் இருப்பதால் இந்த கண்டிஷனர் கூந்தலை ஸ்டிரெய்ட்டாக மாற்றுவதோடு ஸ்மூத்தாக, மிருதுவாக மாற்றும். பிசிறு ஏற்படாது.
04. கூந்தலில் அதிகமாக இருக்கும் நீரை நீக்க வேண்டும்

ஷாம்பூவை அலசிய பிறகு கூந்தலில் இருக்கும் கூந்தல் நீரை நீக்க வேண்டும். ஏன் என கேட்கிறீர்களா… கூடுதல் நீர் இருந்தால் கண்டிஷனர் சரியாக உறிஞ்சப்படாது. இதனால் கண்டிஷனர் வீணாகாமல் இருக்கும். இது எல்லா வகையிலும் நல்ல வழிமுறை.
05. கூந்தலில் சரிசமமாக கண்டிஷனர் அப்ளை செய்ய வேண்டும்

கூந்தலில் கண்டிஷனர் அப்ளை செய்தால் மட்டும் போதாது. சரிசமமாக அப்ளை செய்ய வேண்டும். அதை எவ்வாறு செய்வது… சிம்பிள். கண்டிஷனர் அப்ளை செய்த பிறகு அகலமான பல் கொண்ட சீப்பு வைத்து அல்லது விரல்களால் கூந்தலை சிக்கெடுக்க வேண்டும். பிறகு கண்டிஷனரை சரிசமமாக பரப்பிவிட வேண்டும்.
Written by Kayal Thanigasalam on Jan 05, 2022